உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவுன்சிலர் கூட ஆகவில்லை; எங்களை விமர்சிக்கும் தேவை விஜய்க்கு இல்லை என்கிறார் நயினார் நாகேந்திரன்

கவுன்சிலர் கூட ஆகவில்லை; எங்களை விமர்சிக்கும் தேவை விஜய்க்கு இல்லை என்கிறார் நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு (விஜய்) இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.சென்னை, அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கூட்டணியை மட்டும் பலமாக வைத்து இருந்தால் போதுமா, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டாமா? திமுக கூட்டணியை அசைப்போம். உறுதியாக ஆட்சி மாற்றம் வரும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=283ljxet&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேஜ கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி வலுப்பெறும். திமுக தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்த வரலாறு இல்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும்.தமிழகத்தில் நல்லாட்சி மலரும். விஜய் கட்சி ஆரம்பித்து பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். அவருடைய நோக்கமும் திமுகவை அகற்றுவது தான். தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. ஒரு எம்எல்ஏக்கள் கூட கிடையாது. இப்போது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு (விஜய்) இல்லை என்று நான் நினைக்கிறேன். புதிதாக கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள். தேர்தல் காலத்தில் ஓட்டு எவ்வளவு வாங்குவார் என்பது தான் முக்கியம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Padmasridharan
செப் 15, 2025 07:35

கூட்டணி இல்லாம மக்கள ஏமாத்தி ஜெயிக்க முடியாதுன்னு ஒத்துக்கிட்டாங்க பல கட்சிகளும்.. ஒத்தையா ஜெயிக்க தைர்யமில்லாதவங்க.. ஓட்டு போட்ட யார் வேணாலும் விமர்சிக்கலாம் சாமி, வரி வாங்கித்தானே மக்களுக்கு கட்சியின் பேர்ல நல்லது செய்றீங்க


அப்பாவி
செப் 14, 2025 14:34

அப்போ அண்ணாமல எப்போ கவுன்சிலர் ஆனாரு?


venugopal s
செப் 14, 2025 07:31

யாரைச் சொன்னே? என்னைச் சொன்னேன்! என்பது போல் உள்ளதே!


Tamilan
செப் 13, 2025 23:23

பல மாதங்களாக அவர்காலடியில் தவமிருந்து ஆசி வரம் எதுவும் கிடைக்கவில்லை . விமர்சிக்கிறார்கள்


Vasan
செப் 13, 2025 18:57

Mr.Nagendran Sir, What happened to that Rs 4 Crore cash case? snatched from a person who said your name


Ms Mahadevan Mahadevan
செப் 13, 2025 18:53

யார் வேண்டுமானாலும் விருப்பப்பட்டால் கட்சி ஆரம்பிக்கலாம். நானே முதல்வர் என்று ஆரம்பித்தவுடன் கூவ கூடாது. அதிகாரத்தையும் பதவி சுகத்தையும் அடையும் வெறி தான் தெரிகிறது.


pakalavan
செப் 13, 2025 18:19

அட முதலில் நிர்மலாவை கவுன்ஸ்லர் ஆக்க முடியுமா ?


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 13, 2025 17:08

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லலாம் ஆனால் ஜோசப் விஜய் என்று சொல்லக்கூடாது. ஜோசப் என்பது கெட்ட வார்த்தையா என்ன?


Sangi Mangi
செப் 13, 2025 17:08

உங்கள் முன்னாள் மாநில தலைவர் வீடியோ அண்ட் ஆடியோ புகழ் ஒரு தடவை கூட தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை என்பதை இந்த தருணத்தில் தங்களுக்கு ஞாபக படுத்த கடனை பட்டு உள்ளேன் ஐயா


Oviya Vijay
செப் 13, 2025 16:14

இதுநாள் வரையில் இவரை நடிகர் விஜய் என்று மட்டும் அழைத்து விட்டு அரசியல் களத்தில் களமிறங்கியதும் அவரை ஜோசப் விஜய் என்று அவர் சார்ந்திருக்கும் மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சொல்லிக் கொண்டிருக்கும் கேடுகெட்ட மனிதர்களை இங்கே காண்பதில் மிகவும் வருத்தம் எனக்கு. ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் எந்நாளும் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரை சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில கழிசடைகள் மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர். அவர்களை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் சங்கிகள் என்று சொன்னாலே போதுமானது. அவர்களை அண்ட விடாமல் செய்தாலே போதும். தமிழகம் அமைதியாக நடைபோடும்... இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஜோசப் விஜய் தான் இங்கே புலம்பிக் கொண்டிருக்கும் சங்கிகளின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டுள்ளார் என்றால் அது மிகையல்ல... ..


PROUD HINDU_INDIAN
செப் 13, 2025 19:18

முதல்ல உன் உண்மையான பேரு போடு கமெண்ட் பண்ணு . ஜோஸ்ப் விஜய் கு ஜால்ரா போடாத


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை