உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ச் 14 முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

மார்ச் 14 முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசு அளித்த 'ஒய்' பிரிவு பாதுகாப்பை த.வெ.க., தலைவர் விஜய் ஏற்றுக் கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 14ம் தேதி முதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.நடிகர் விஜய் த.வெ.க., என்ற கட்சியை துவக்கி உள்ளார். அவருக்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு, 'ஒய்', 'இசட்' பாதுகாப்பை வழங்கும். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டு இருந்தது. இதன் மூலம், 8 முதுல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள் என தெரிகிறது.ஆனால், இந்த பாதுகாப்பை விஜய் ஏற்றாரா? எப்போது முதல் பாதுகாப்பு அளிக்கப்படும்? என தகவல் வெளியாகாமல் இருந்தது.இந்நிலையில், ' ஒய்' பிரிவு பாதுகாப்பை விஜய் ஏற்றுக் கொண்டதாகவும், வரும் 14ம் தேதி முதல் அவரது பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

m.arunachalam
மார் 11, 2025 20:28

விஜய்யின் அசைவுகளை கவனிக்க ஏதுவான வழி . ராஜதந்திரம் .


Gnana Subramani
மார் 11, 2025 20:15

அடுத்து சிறந்த நடிகர் பதேசிய விருது கொடுத்து முயற்சி செய்யலாம்


Gnana Subramani
மார் 11, 2025 20:13

இரண்டு வருடத்தில் இரண்டு முறை மக்களை சந்தித்து இருக்கிறார். இவருக்கு எதற்கு இப்போது பாதுகாப்பு


GMM
மார் 11, 2025 20:10

நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு தேவையற்றது. மாநில போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் மத்திய பாதுகாப்பு படையை விலக்கி, மாநில போலீஸ் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். தீவிரவாதிகள் கலந்த நாடு. முக்கிய பொது இடங்கள் மத்திய பாதுகாப்பில் இருக்க வேண்டும். உதாரணம் கவர்னர் மாளிகை, மாநில போலீஸ் தலைமை அலுவலகம், தலைமை செயலகம்... மற்றும் பல.


Ramesh Sargam
மார் 11, 2025 20:04

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா...?


மால
மார் 11, 2025 20:03

சிக்க மாட்டார் வீண் வேலை


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 12, 2025 03:10

வீண் வேலை என்பது சரி சிக்க மாட்டார் என்பது தேவையில்லாத பயணற்ற வார்த்தை....!!!


சமீபத்திய செய்தி