உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வராக கனவு காண விஜய்க்கு உரிமை உண்டு

முதல்வராக கனவு காண விஜய்க்கு உரிமை உண்டு

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி நாளுக்கு நாள் பிளவுபட்டு வருகிறது. கடந்த 2019 தேர்தலில், தேர்தல் செலவுக்காக, தி.மு.க., அதனுடைய வங்கிக் கணக்கில் இருந்து இந்திய கம்யூ., கட்சியின் வங்கி கணக்குக்கு, 15 கோடி ரூபாய் அனுப்பியது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க.,வும், எங்களுடைய கட்சியும் கணக்கு கொடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அ.தி.மு.க., விஷமப் பிரசாரத்தை தொடர்ந்தால், அ.தி.மு.க.,வின் பண அரசியல் குறித்து, நாங்களும் விமர்சிப்போம். தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணி அமைத்து, 234 தொகுதிகளிலும் போட்டியிட்டோம். பெரும்பாலான தொகுதிகளில் 'டெபாசிட்' இழந்தோம். நடிகர் விஜய், தன்னை முதல்வராக கனவு காணுகிறார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது. - முத்தரசன், மாநில செயலர், இந்திய கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Amar Akbar Antony
ஜூலை 20, 2025 06:22

அட உங்களுக்கு அந்த கனவு காண கூட உரிமையில்லையா? அந்தளவுக்கு தி மு க அடிமை ஆகிவிட்டிரோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை