உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  விஜய் தவறாக வழி நடத்தப்படுகிறார்

 விஜய் தவறாக வழி நடத்தப்படுகிறார்

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைகளை, கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது.ஆனால், மேகதாது அணை கட்டப்படுவதை தடுப்பதற்கான அரசியல், சட்ட நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் விஜய்க்கு இருந்தாலும், அவர் தவறாக வழிநடத்தப்படுவதாகவே டெல்டா விவசாயிகள் கருதுகின்றனர். தமிழக அரசின் அலட்சியம், காவிரி பாசன மாவட்டங்களின் உரிமைகளை காக்க உதவாது. மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு காட்டும் தீவிரத்தை விட, அந்த முயற்சியை தடுக்க, தமிழக அரசு பல மடங்கு தீவிரம் காட்ட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சேலத்தில் பேட்டியளித்த அன்புமணி, ''மயிலாடுதுறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடி தற்கொலை செய்த விவகாரத்தை, கொலையாக திரித்து பதற்ற சூழலை உருவாக்கி, சில அமைப்புகள் குளிர் காய்கின்றன. இது, தவறான அரசியல்,'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !