உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி இல்லை என சொன்ன பிரசாந்த் கிஷோரால் விஜய் அதிர்ச்சி!

கூட்டணி இல்லை என சொன்ன பிரசாந்த் கிஷோரால் விஜய் அதிர்ச்சி!

'அதிகாரபூர்வமற்ற நபர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் பங்கேற்று தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளை, தமிழக மக்களும், கட்சி தொண்டர்களும் நம்ப வேண்டாம்' என, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்த் கூறியுள்ளார். இந்த அறிக்கையின் வாயிலாக, வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசிய பேச்சுகளுக்கும், தன் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார். தங்கள் கட்சியால் விமர்சிக்கப்படும் முக்கிய கட்சியின் வலியுறுத்தலின் அடிப்படையிலேயே, எந்தக் கட்சியுடனும் சேர விடாமல், தன் கட்சியை மடைமாற்ற காய் நகர்த்தப்படுகிறதோ என்ற சந்தேகம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளதாக, கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sikf5weh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக தயாராகி வருகிறது. அக்கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுப்பதற்காக, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் அவர் பங்கேற்றார்.அவர் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்த, சில பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார். மும்மொழி கொள்கை தொடர்பான கையெழுத்து இயக்கத்திற்கு வைக்கப்பட்ட பேனரில், கையெழுத்திட பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டார்.இது, கட்சி தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது; விமர்சனங்களும் அதிகரித்தன.

தனித்து போட்டி

இந்நிலையில், தனியார் 'டிவி'க்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க.,வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்காமல், தனித்து போட்டியிடும்' என தெரிவித்தார்.இதனால், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்பிய சிறிய கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளன. இது, கட்சிக்கு தேர்தலில் பின்னடையை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு பதிலடி தரும் நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழகம் கையில் எடுத்துள்ளது.இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:செய்தி ஊடகங்களில் நடக்கும் விவாத நிகழ்ச்சிகளில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள கொள்கை பரப்பு மற்றும் செய்தி தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டும், கட்சியின் கருத்து மற்றும் நிலைப்பாடு.கட்சி உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்கு பாராட்டு, ஊக்கத்தொகை, கட்சி மாநாடு, ஆண்டு விழா என தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன், மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களாக சித்தரித்து, ஊடக விவாதங்களில் பங்கேற்க செய்கின்றன. அதன் வாயிலாக திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்கின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அல்லது அவரின் ஒப்புதலோடு கட்சி தலைமையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் பங்கேற்று தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வ கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல. எனவே, அதிகாரபூர்வமற்றவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் பங்கேற்று தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளை, தமிழக மக்களும், கட்சி தொண்டர்களும் நம்பவோ, ஏற்றுக் கொள்ளவோ வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுலபமல்ல

தற்போதைய குழப்பங்கள் குறித்து, த.வெ.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:த.வெ.க., பொதுச்செயலர் பெயர் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டாலும், அது யாரைக் குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். கட்சி துவங்கி ஓராண்டை கடந்து விட்டாலும், இன்னும் ஒரு தேர்தலைக்கூட எதிர்கொள்ளவில்லை. வியூக வகுப்பாளர்கள் வாயிலாக, தேர்தலுக்கான வியூகங்கள் பலமாக வகுக்கப்பட்டாலும், பலமான அரசியல் இயக்கங்களை எதிர்கொண்டு, தேர்தலை எப்படி எதிர்கொள்வது என புரியாத நிலையில் தான் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் உள்ளனர். அதனால் தான், துவக்கத்திலேயே இப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதோடு, கட்சி யாரை எதிர்த்து போட்டியிட்டு வீழ்த்த நினைக்கிறதோ, அவர்களெல்லாம் பல காலமாக பல தேர்தல்களை சந்தித்து அனுபவம் வாய்ந்தவர்கள்.தேர்தலில் எதிரியை எப்படியும் வீழ்த்தியாக வேண்டும் என்ற நுட்பங்கள் அறிந்தவர்கள். எந்த ஆயுதம் எடுத்தும் தேர்தல் வெற்றியை பெறக்கூடிய வித்தை கற்றவர்கள். அவர்களை எதிர்கொண்டு வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல.

'ஸ்லீப்பர் செல்'கள்

த.வெ.க., தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கும் வலுவான தமிழக அரசியல் கட்சிகளின் நுட்பமான அரசியலுக்கு மத்தியில், விஜய் எவ்வளவு துாரம் தாக்குப் பிடிப்பார் எனவும் தெரியவில்லை.அவர் நம்பும் பலரே, எதிர் தரப்பினரின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ளது. முதலில் தான் ஒரு சூப்பர் நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து, தந்திரங்கள் அறிந்த அரசியல் தலைவர் என, விஜய் களத்துக்கு வந்து தெளிவான அரசியல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, தேர்தலில் அவர் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Anantharaman Srinivasan
மார் 03, 2025 21:08

நடிகன் என்றமுறையில் விஜயை பிடித்திருந்தால் சினிமாவை பார்க்கலாம். நம்பி ஓட்டு போட அவர் தேர்ந்த அரசியல்வாதி அல்ல.


spr
மார் 03, 2025 20:18

"தங்கள் கட்சியால் விமர்சிக்கப்படும் முக்கிய கட்சியின் வலியுறுத்தலின் அடிப்படையிலேயே, எந்தக் கட்சியுடனும் சேர விடாமல், தன் கட்சியை மடைமாற்ற காய் நகர்த்தப்படுகிறதோ?" சந்தேகமில்லாமல் இது உறுதி விஜய் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்கிறார். கூரையேறி கோழி பிடிக்க இயலாதவரா வானமேறி வைகுந்தம் போவார்? தனது கட்சியையே தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியாதவரை தேர்தல் ஆலோசகராக வைக்க யார் சொன்னார்கள்? வாக்குக்கு பணம் கொடுப்பது தவறென்றாலும், ஆலோசனைக்கு கொடுக்கும் கோடிகளில் ஒரு பகுதியை மக்களுக்கு கொடுத்தாலே வாக்கு விழுமென்றுதானே இதுவரை கழகங்கள் காட்டியுள்ளன


கத்தரிக்காய் வியாபாரி
மார் 03, 2025 17:43

தேர்தல் வியூகம் என்பது மொள்ளமாரித்தனம். யாருக்கு எப்ப பணம் குடுக்கணும் என்பதுதான் இவர்கள் செய்யும் வேலை.


Krishnamurthy Venkatesan
மார் 03, 2025 16:52

இது திமுகவின் ராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டு. முதலில் பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி, இப்போதும் பிரசாந்த் கிஷோர் அவர்களுக்காக வேறுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு திமுகவிற்கு வெற்றி தேடித்தர பணிக்கப்பட்டுள்ளார் என்றே தோன்றுகிறது. எப்படியோ கிஷோர் காட்டில் பணமழைதான்


Rengaraj
மார் 03, 2025 16:48

கட்சியில் இஷ்டத்துக்கு கூட்டணி பற்றி பேசுகிறார்கள் ஆரம்பித்து ஒரு வருஷம் கூட ஆகல தங்கள் கட்சியையே இவர் கட்டுக்குள் வைத்துக்கொள்ள தெரியாத அறிவாளி தலைவர் இவரை நம்பி ஒரு கூட்டம் ? இவரும் பாசிசம், பாயசம் என்று மட்டுமே பேசுகிறார். தைரியமாக எந்த கட்சி என்று சொல்ல தைரியம் அற்றவர் . கோழை வீதிக்கு வந்தாச்சு என்ன பயம் முதலில் இந்திய விடுதலை போராட்டத்தில் இருந்து இவர் இந்திய வரலாறையும் தமிழக வரலாறையும் நன்கு ஆழமாக படிக்கவேண்டும். சினிமா பார்த்து தனக்கும் எல்லாம் தெரியும் என்று பேசக்கூடாது எந்த பிரச்சினையையும் ஆரம்பம் முதல் தெரிந்து அதன்பிறகு சபையில் பேசவேண்டும். மூன்றுமணிநேரம் ஓடும் சினிமாவில் வரும் நாயகன் அல்ல இவர் இவர் கட்சியின் தலைவர் சிறு சொதப்பல் கூட இவரை ஜோக்கராகிவிடும் கமல் எப்படி ஆனாரோ அவரைப்போல இவரும் ஆகிவிடுவார் என்பதற்கு இவரோட பேச்சுக்கள் சாட்சி ஏதாவது ஒரு ஊடகத்துக்கு இவர் பேட்டி அளித்துள்ளாரா ? இவரை பற்றி பேசினால் பதில் அளிக்கத்தெரியுமா ? இவரை பற்றி அறிவாலய வேட்டை நாய்கள் அதாங்க ஜால்றா ஊடகங்கள் சும்மா எல்லோரும் பில்ட்டப் பன்றாங்க திமுக இவரை கையாள்வதற்கு தனது வேட்டை நாய்களை வைத்துள்ளது என்று கூட தெரியாமல் இருக்கிறார். மொத்தத்தில் திமுகவின் சதி வலைக்குள் நன்றாக விழுந்துவிட்டார்.


Rengaraj
மார் 03, 2025 16:18

தோழமை என்ற பெயரில் பாஜக உள்ளே வந்துவிடக்கூடாது என்று 2019 நாடாளுமன்றத்தேர்தல் சமயத்திலேயே எடப்பாடிக்கும் திமுக தலைமைக்கும் திரைமறைவு கூட்டணி தொடங்கியிருக்கவேண்டும் . அது 2021ல் ஆழமாக வலுப்பெற்றிருக்கவேண்டும் எந்தவிதத்திலும் தேசியக்கட்சி தமிழகத்தில் வளர்ந்துவிடக்கூடாது என்று காங்கிரெஸ்ஸை முதலில் காலடியில் போட்டு அழுத்தி வைத்துக்கொண்டார்கள் திமுக எதிர்ப்பு வாக்குகளால் பாஜக ஆதாயம் பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அண்ணாதிமுகவை ஒன்று சேரவிடாமல் பிரித்து, வழக்குகள் எதையும் அண்ணாதிமுக அமைச்சர்கள் மேல் போடாமல் எடப்பாடியையே தனது வழிக்கு கொண்டுவந்தார்கள் முதலில் விஜயகாந்தை எழுந்திரிக்கவிடாமல் செய்தனர் கமலஹாசனை ஒருவழியாக்கிவிட்டனர் எடப்பாடி மூலம் அண்ணாதிமுகவை தனித்தனியாக்கிவிட்டனர் காங்கிரெஸ்ஸை தங்கள் அடிமையாக்கிவிட்டனர் விசிக தலைதூக்கக்கூடாது என்பதற்காக விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜுனாவை பிரித்தனர் அப்படியும் தங்களது எதிர் வாக்குகள் ஒன்றுசேரக்கூடாது என்பதற்காக இப்போது விஜய் மூலம் தங்கள் காரியத்தை சாதிக்கின்றனர் எல்லாம் எதற்க்காக தமிழகத்தில் யாரும் இந்தியா , பாரதம் என்று பேசிவிடக்கூடாது , தேசியக்கட்சி எதுவும் வரக்கூடாது என்பதற்காக திமுகவுக்கு மக்கள் நலன் என்று துளியும் மக்கள் மீது அக்கறை கிடையாது கடைசி வரை தமிழகத்தை தங்கள் குடும்பம் மட்டுமே சுரண்டிக்கொண்டே இருக்கவேண்டும். கடந்த நாலுஆண்டுகளில் திமுக கையில் எடுத்த விஷயங்களை ஆழமாக பார்த்தாலே யாருக்கும் இது புரிந்து விடும். தங்களுக்கு பிரச்சினை பண்ணுபர்களை அவர்கள் கையாளும் விதமே தனிரகம் . பணம் கொடுத்து அமுக்கப்பார்ப்பார்கள் மீறினால் ஊடகங்கள் மூலம் பொய்ச்சேதி, வழக்கு , கைது ,


R.MURALIKRISHNAN
மார் 03, 2025 15:40

அப்ப கட்சி விஜய் கையில் இல்லையா?


angbu ganesh
மார் 03, 2025 15:19

முதலில் தான் ஒரு சூப்பர் நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து - இதுவே பொய் அவர் தன்னை தானே நெனச்சிட்டு இருக்கார் அதுவேய முதல் தவறு இல்ல அவரை அப்படி நெனைக்க வச்சுட்டாங்க, அவர் ஒன்னும் அறிவாளி இல்லேன்னு அவருடைய சமீபத்திய கொழ கொழ பேச்சுக்கள் இருக்கு ஆரம்பமே இப்பன்னா போக போக விஜய் உங்கள நாங்க குத்தம் சொல்லல உண்மையாவெய் நீ தமிழக மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நெனச்ச கூட வச்சிருக்கிற சகதிங்களை ஒதுக்கு உன்ன நீ நம்பி வா


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 03, 2025 14:07

"வாக்குகளை விலைக்கு வாங்காதே.. நேர்மையாகச் செயல்படு... மக்களுக்காக உழை.. வெற்றி தேடிவரும்" என்று உள்ளது உள்ளபடியே, நேர்மையாக எந்த வியூக வகுப்பாளரும் சொல்வதில்லை.. அப்படிச் சொன்னால் எந்த வியூக வகுப்பாளரும் பிசினஸ் செய்ய முடியாது.. குற்றவாளியை தனது வாதத்திறமையினால் காப்பாற்றத்தான் வக்கீல்.. அதே போல மக்களை ஏமாற்றிய அல்லது மக்களுக்காக உழைக்காத அல்லது மக்கள் விரோத கட்சிகளைக் கரையேற்றத்தான் வியூக வகுப்பாளர்கள் ..... இது எந்தக்கட்சிக்கும் பொருந்தும் ......


Balasubramanian
மார் 03, 2025 14:04

துட்டு கொடுத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் துண்டை காணோம் நிலைமை பிறகு துணியை காணோம் சிண்டை காணோம் என்று தலையை பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான்! அரசியல் ஆலோசகர் அவர் மாநிலத்தில் டெபாசிட் இழந்தவர்! சென்ற தேர்தலில் திமுக உத்தியான துட்டு க்கு ஓட்டினால் கலலா கட்டினார்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை