உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் மனிதாபிமானம் கொண்டவர்; நாங்கள் அது இல்லாதவர்களா: கேட்கிறார் துரைமுருகன்

விஜய் மனிதாபிமானம் கொண்டவர்; நாங்கள் அது இல்லாதவர்களா: கேட்கிறார் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த அவர் (விஜய்) ரொம்ப மனிதாபிமானமிக்கவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.வேலூரில் நிருபர்கள் சந்திப்பில், கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:நிருபர்: கொடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் பயப்படமாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளாரே?துரைமுருகன் பதில்: அவருடைய நிலைமையை அவர் தெரிவிக்கிறார். ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ அதை சர்க்கார் செய்யும். கேள்வி: உச்சபட்ச அதிகாரம் மயக்கத்தில் மனிதாபிமானம் மாண்பு இல்லாமல், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் எதிராக பேசுகிறார் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளாரே?துரைமுருகன் பதில்: கரூரில் 41 பேர் சாவதற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் ஒரு வீட்டிற்கும் ஆறுதல் சொல்லாமல், பார்க்காமல் இருக்கிற அவர் (விஜய்) ரொம்ப மனிதாபிமானம் உள்ளவர். நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள், போங்க சார் நீங்கள்?கேள்வி: 2026ம் தேர்தலில் திமுகவின் நாள்கள் எண்ணப்பட்டுள்ளது என பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே?துரைமுருகன் பதில்: அவர் பாவம், எதையோ சொல்வார். நல்ல மனிதர், அங்கு சொல்லிக் கொடுப்பதை சொல்லிவிடுவார் அவ்வளவுதான்.நிருபர்: எம்ஜிஆர் காலத்தில் இருந்தே செங்கோட்டையன் அரசியலில் இருக்கிறார், தற்போது செங்கோட்டையனை கட்சியிலிருந்து இபிஎஸ் அதிரடியாக நீக்கி இருக்கிறார்?துரைமுருகன் பதில்: அது அவர்கள் கட்சி விவகாரம். செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருப்பவர் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்பது அவருக்கு தான் தெரியும்.நிருபர்: டில்லிக்குச் சென்ற செங்கோட்டையன் நான் யாரையும் சென்று சந்திக்கவில்லை என்று அன்று கூறினார். கட்சியை விட்டு நீக்கிய உடன் பாஜ தன்னை அழைத்து பேசினார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளாரே?துரைமுருகன் பதில்: உண்மை வெளிவந்து விட்டது. இவ்வளவுதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

karuththuraja
நவ 10, 2025 06:53

நாளை உயிர் போகும் என்றாலும் கொள்கை நிறைவேற்று தோழா.... நடக்க முடியவில்லை, வாய் குளறுகிறது, கை நடுங்குகிறது, உட்கார்ந்தாள் எழுந்திரிக்க முடியவில்லை, உட்கார்ந்தாள் தூக்கிவிட இரண்டு ஆள் தேவை, காருக்குள் போக முடியவில்லை, காக்க இருக்க கை தாங்களாக ஆள், கண் பார்வை மங்கள், இப்படி அடுக்கடுக்கான பிரச்சினை எப்போ இளைஞருக்கு வழி விட போகிறீர்கள்....


Venugopal, S
நவ 10, 2025 06:03

பிணம்தின்னி அரசியலுக்கும் மனிதாபிமானத்திற்கும் என்ன சம்பந்தம்...?


xyzabc
நவ 10, 2025 00:49

இதுல என்ன சந்தேகம்?


Sun
நவ 09, 2025 23:02

செங்கோட்டையன் விவகாரத்தில் அதிரடி மற்றும் நகைச்சுவை துரைமுருகனாக இல்லாமல் நமக்கு எதற்கு வம்பு ? என்ற பாணியில்தான் அண்ணன் பதிலளித்துள்ளார். அதுவும் சரிதான். ஒரு வேளை நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நமது சாமர்த்திய பதில் நமக்கு உதவும் என்ற எண்ணமாக இருக்கலாம்?


sundarsvpr
நவ 09, 2025 21:01

அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு கொடுப்பதுபோல் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பு தேவை. தி மு க மீண்டும் அரசு அமைக்குமா இல்லையா என்பது முக்கியம் இல்லை. வயது வரம்பு அவசியம். அரசு சட்டம் கொண்டு வராது. காரணம் சட்டம் இயற்றுவது அவர்கள் தான். யானை தன் தலையில் மண்னை வாரி இறைத்துக்கொள்வதுபோல் அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள்


Vasan
நவ 09, 2025 20:41

ஆனாலும் ரஜினிகாந்த் உங்களை ஓல்ட் ஸ்டூடண்ட் என்று சொல்லியிருக்க கூடாது. சில சமயங்களில் ரஜினிகாந்த் காமெடி பேசுவதாக நினைத்துக்கொண்டு, சபை நாகரிகம் இல்லாமல் பேசிவிடுகிறார். மற்றொரு எடுத்துக்காட்டு இளையராஜா பற்றிய 1/2 பாட்டில் பீர் பற்றிய பேச்சு, அதுவும் அரசாங்க விழாவில்.


vijayanand
நவ 09, 2025 20:16

உண்மைதானே 100% இப்போதான் உண்மை பேசுறீங்க துரைமுருகன்


Balasubramanian
நவ 09, 2025 19:06

நிதி வம்சத்தினர் மீது உள்ள அளவு அபிமானம் - மற்றவர்கள் மீது கிடையாது என்ற அளவில் உண்மை தானே?


duruvasar
நவ 09, 2025 18:39

எங்களிடம் இருப்பது மணல்லாபிமானம் மட்டுமஃகான் என சொல்லவருக்கிறார் போலும்


Mr Krish Tamilnadu
நவ 09, 2025 18:18

மக்களுக்கு மனிதாபிமானம் இருப்பதால் தான் திரும்ப திரும்ப மன்னித்து, இந்த முறையாவது ஊழல் அற்ற, வகுப்புவாதத்தை தூக்கி பிடிக்காத, வேலையின்மையை போக்கும் அரசை அமைத்து விடுவீர்கள் என ஆட்சி அதிகாரத்தை தந்து தந்து ஏமாந்து விடுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை