உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சியினரை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் விஜய்க்கு இல்லை: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

கட்சியினரை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் விஜய்க்கு இல்லை: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

திருப்பூர்: ''விஜயிடம், கட்சியினரை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் இல்லை,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். அவரது அறிக்கை:த.வெ.க., தலைவர் விஜயின் பொறுப்பற்ற தன்மையாலும்; தமிழக அரசின் அலட்சியத்தாலும், 40 அப்பாவி மக்களின் உயிர் பறிபோனது, மனதை உலுக்கியுள்ளது. கட்சி ஆரம்பித்தது முதல் இதுநாள் வரை நடந்த ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்தில், எவ்வித கட்டுப்பாடும், ஒழுங்கும் இல்லை. பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதுடன், போக்குவரத்துக்கு இடையூறாகவும் நடத்தியுள்ளனர்.நம்பி வரும் மக்களை வழிநடத்தும் தலைமை பண்பும், ஆற்றலும் கொண்டவரே உண்மையான தலைவர்; நடிகர் விஜயிடம் கட்சியினரை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் இல்லை. சமூக அக்கறையின்றி அவரது நடவடிக்கைகள் இருந்து வருகிறது.சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொது சொத்துக்களை சேதப்படுத்தி, சாலையோர பூங்காவை துவம்சம் செய்தனர். மதுரை மாநாட்டில், குடிநீர் பாட்டில் மற்றும் உணவு பொட்டலங்களை துாக்கி வீசியதால், கட்சியினர் முண்டியடித்து சென்றனர். த.வெ.க., தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டாலும் முறைப்படுத்தி வழிநடத்த வேண்டிய விஜய், ஒரு வார்த்தை கூட பேசாதது துரதிஷ்டவசமானது. கரூரில், மதியம் 12:00 மணிக்கு மக்களை சந்திப்பதாக அறிவித்துவிட்டு, இரவு 7:00 மணிக்கு வந்துள்ளார். காலை முதல், குழந்தைகளுடன் காத்திருந்த மக்கள், குடிநீர், உணவு கூட கிடைக்கவில்லை. கட்சியினர், குடிநீர் பாட்டில் மற்றும் உணவுப் பொட்டலத்தை தூக்கி வீசியதால், அதைப்பெற முண்டியத்து சென்றபோது, நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள், பெண்கள் உட்பட, 40 பேர் பலியாகிய பெருந்துயரம் நடந்துள்ளது.மற்ற கட்சிகள், எப்படி பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் என்று முதலில் கற்றுக்கொண்டு, பிறகு கூட்டம் நடத்த வேண்டும்.அனுமதி வழங்கிய நிலையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடமையும் தமிழக அரசுக்கும், போலீசுக்கும் உள்ளது. அரசியல் பாலபாடம் கூட அறியாத விஜய், முதலில் அரசியலை கற்றுக் கொண்டு, தலைமை பண்பை வளர்த்துக் கொண்ட பிறகு அரசியலில் ஈடுபடுவதுதான், மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பானது. தமிழக அரசு, துவேஷ அரசியலை கைவிட்டு, மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி செயல்பட வேண்டும்; எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நடக்கா தவாறு பாதுகாப்புடன் நடத்த வேண்டிய கடமை அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. மக்கள் உயிரோடு விளையாடாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித் துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Rajah
செப் 29, 2025 16:10

கட்சியினரை ஒழுங்கு படுத்துவதா அல்லது ரசிகர்களை ஒழுங்கு படுத்துவதா? எல்லாக் கட்சிகளிலும் விஜய் ரசிகர்கள் இருக்கின்றார்கள். நயன்தாராவுக்கும் ஸ்மிதாவுக்கும் கோவில் கட்டியவர்கள் இந்த ரசிகர்கள். ஆனால் எதோ ஒரு கட்சி தொண்டர்களாக இருப்பார்கள்.


PATTALI
செப் 29, 2025 14:12

தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் நேர்மையாக அரசியல் செய்ய தயாராகயில்லை. அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் மாறிமாறி குறைகூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே. அதனால் கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு முழுமையான அரசியல் மாற்றம் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதனை மக்கள் ஒட்டு மூலமாக மட்டும்தான் கொண்டுவரமுடியும். இதனை மக்கள் புரிந்துகொண்டால் மட்டுமே அடையமுடியும்.


Chandru
செப் 29, 2025 13:57

இந்த பாரத நாட்டை வழி நடத்தும் ஆற்றல் ......


Rathna
செப் 29, 2025 11:49

படித்தவனுக்கு வேலை கிடைக்க வேண்டும். இருக்கின்ற வேலையை தக்க வைக்க வேண்டும் என்பது கவலை. அதே போல தொழில் செய்பவனுக்கு லாபம் வர வேண்டும் என்று கவலை. எவனாவது வேலை உள்ளவன் அங்கே போய் 8 மணி நேரம் காத்திருந்து உயிரை கொடுப்பானா?


Moorthy
செப் 29, 2025 11:44

ராகுல், விஜயிடம் அப்படி என்ன பேசி இருப்பார் ? 15 நிமிடம் ?? இனி காங்கிரஸ் விஜய் பக்கம் சாயுமா ? திமுக என்ன செய்யும் ?


Moorthy
செப் 29, 2025 11:41

அரசியல் ஆளுமை இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை மக்கள் ஆதரவு இருப்பவருக்கு அதற்கான ஆளுமை இல்லை


PATTALI
செப் 29, 2025 14:24

இந்த உலகத்தில் அனைவரும் குழந்தையாக பிறந்து படிப்படியாக கற்று கொள்பவர்கள்தான். நீங்கள் சொல்வது போல் பார்த்தால் புதியவர்கள் யாரும் எந்த தொழிலுக்கும் போகமுடியாது. அரசியலிலும் மற்றவர்கள் அனைவரும் முன்பு ஆளுமை இல்லாமல், வந்தபிறகு ஆளுமையை பெற்றவர்கள்தான்.


Moorthy
செப் 29, 2025 11:37

ஆண் ,பெண் பிள்ளைகள், பெற்றோர் பேச்சை கேட்பதில்லை கணவன் மனைவி ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்பதில்லை , இது அனைத்தும் விஜய்க்கும் பொருந்தும். பின் அவர் பேச்சை எப்படி அவர் தொண்டர்கள் கேட்பார் .?


PATTALI
செப் 29, 2025 16:08

அதற்கு திராவிட சிந்தனை முழுவதுமாக மாறவேண்டும். தமிழ் அறிவு மீண்டும் துளிர்க்கவேண்டும்.


Madras Madra
செப் 29, 2025 11:09

அறிவார்ந்த சமூகமாக மீண்டும் தமிழகம் மாற வேண்டும் அதற்க்கு திராவிட சிந்தனை ஒழிய வேண்டும் மரபியல் வேர்கள் மீண்டும் தழைக்க வேண்டும் அப்பொழுது உலகம் போற்றும் சமூகமாக உலகுக்கே வழி காட்டும் சமூகமாக நாம் மாற முடியும்


K V Ramadoss
செப் 29, 2025 21:04

ரொம்பவும் கனவு காணாதீர்கள் ...


GMM
செப் 29, 2025 11:04

கட்சியை, கட்சியினரை ஒழுங்கு செய்யும் ஆற்றல் விஜய்க்கு இல்லை. ஒரு ஒழுங்கான மக்கள், தேசிய நல கொள்கை வெளிப்படுத்த வில்லை. சினிமா கூட்டாளிகள் தவறான கருத்துக்கள் மக்களிடம் பதிந்துள்ளது. 500, 1000 ரூபாய் கொடுத்து சினிமா பார்ப்பது, 1000 மேல் பணம் டாஸ்மாக்குக்கு செலவு செய்வது . ஆனால், ஒரு நபருக்கு ஆண்டுக்கு 100 ரூபாய் அரசின் பொது சேவைக்கு வரியாக வசூலிக்க முடியாது. ஒரு ரூபாய் ஒரு டாலர் மதிப்பு எப்போது பெறும்? மத்திய அரசு, மாநில நிர்வாகம் பொருளாதார பொறுப்பை தேர்தல் ஆணையம் வகுத்தால் , கமல், விஜய் போன்ற பலர் கட்சி துவங்க முடியாது. அரசியல் சுத்தமடையும்.


Svs Yaadum oore
செப் 29, 2025 11:00

சிறுபான்மை வோட்டு யாருக்கு?? அதுதான் விடியலுக்கு வியர்த்து கொட்டுது ...


ஜெய்ஹிந்த்புரம்
செப் 29, 2025 23:53

உங்களுக்கு பிரச்சினை இல்லை. மைனாரிட்டி சமூக வாக்குகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பே கிடையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை