உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்

கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்

எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க இருப்பதால் இதுவே அவரது கடைசி படமாக பார்க்கப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தில் ஹிந்தி நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரைன், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இன்று (அக்.,4) இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. இதில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, நடிகர்கள் பாபி தியோல், நரைன், இயக்குனர் எச்.வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xjymzczs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இதேநாளில், இன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் யாகம் எல்லாம் வளர்த்து புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் நிகழ்வும் நடந்தேறியது. அரசியலில் முதல்படியாக பார்க்கப்படும் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகவே அங்கு பெருமளவு ரசிகர்கள் கூடினர். ஆனால் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளே பங்கேற்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.பந்தல் கால் நடும் விழா தானே என அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தான் கதாநாயகனாக நடிக்கும் கடைசி படத்தின் பூஜைக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என சிலர் கூறலாம். ஆனால், அரசியல் களத்தில் ஒவ்வொரு அடியும் மிகவும் கவனமாகவே எடுத்து வைக்க வேண்டும் என்பதையும், தாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை அனைவரும் உன்னிப்பாக கவனிப்பார்கள் என்பதையும் நடிகர் விஜய் அறிந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. சினிமா என இதுவரை தான் பயணித்த பாதையில் இருந்து மாறி, இனி அரசியல் பாதையில்தான் பயணிக்க உள்ளதாக தீர்க்கமாக சொன்ன விஜய், தனது முதல் மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வில் கூட பங்கேற்காமல், சினிமா தான் முக்கியம் என தனது கடைசி பட பூஜையில் பங்கேற்க சென்றது விவாதத்தை கிளப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

gp
அக் 04, 2024 22:04

Kaashu vandha dhanae manatuku kooda saelavu panna mudiyum


rajakumar
அக் 04, 2024 21:09

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கட்சியின் பெயர்கள் தான் வேறு


முருகன்
அக் 04, 2024 21:02

எது நிரந்தரம் என்று தெரிந்தவர்


raja
அக் 04, 2024 18:57

விடியலின் பிச்சையை பங்கு போட போறார் நம்ப சோசெப்பு...


D.Ambujavalli
அக் 04, 2024 18:25

பூஜைக்கு proxy ஆக வந்தவர், மெல்ல மெல்ல தலைவரை ஓரங்கட்டிவிட்டு கட்சியை விழுங்கினாலும் வியப்பில்லை இடம் கொடுப்பதும், முக்கியத்துவம் கொடுப்பதும் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்


என்றும் இந்தியன்
அக் 04, 2024 17:59

ஜோசப் விஜய் என்ற கிருத்துவன் எப்படி இந்து பூஜைக்கு போவான்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 04, 2024 18:52

நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று இந்நாள் துணை முதல்வர் அந்நாளில் சொல்லவில்லையா ???? அவர் சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னதும், அவர் வீட்டிலேயே, அவரே சாமி கும்பிடும் புகைப்படங்களும் வைரல் ஆகவில்லையா ???? உருவ வழிபாட்டினை எதிர்க்கும் கிறிஸ்தவத்தின் தோற்றுவிப்பாளர் இயேசு கிறிஸ்து படத்துக்கு, கிறிஸ்தவர்களே மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி கும்பிடும் நிகழ்வுகளை நீங்கள் வீடியோவில் பார்த்ததில்லையா ????


Anbu Raj
அக் 04, 2024 17:02

நீ கலக்கு தல நாங்கள் இருக்கிறோம் தமிழர்கள் ஓட்டு போட


magan
அக் 04, 2024 16:51

ஆக மொத்தம் ஏதோ ஒரு பூஜெய்லா கலந்துக்கிட்டாரு விடுங்கப்பா


Ravi Prasad
அக் 04, 2024 16:49

One more Kamal Party and Kamal type of attitude! God only can save his party people.


HoneyBee
அக் 04, 2024 16:47

சோசப்புக்கு பாதிரியார் அங்கு போய் இருந்தால் பட பூசைக்கு போய் இருப்பான். இந்துக்கள் சடங்கு அங்கு நடக்கும். ஏன் போவது என்று எண்ணி இருப்பான். விசில் அடிச்சான் குஞ்சுகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை