உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சிக் கொடி: உண்மை விளக்கம் எப்படி? உலா வரும் தகவல்கள்

விஜய் கட்சிக் கொடி: உண்மை விளக்கம் எப்படி? உலா வரும் தகவல்கள்

சென்னை: நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை துவக்கி, அதற்கான கொடி மற்றும் பாடலை கடந்த ஆக.,22ம் தேதி அறிமுகப்படுத்தினார். கொடியில் சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறங்களில் இரட்டை போர் யானைகளும், நடுவே வாகை மலரும் இடம்பெற்றிருந்தது. இதற்கு கட்சியின் முதல் மாநில மாநாட்டின்போது விரிவான விளக்கத்தை அளிப்பதாக விஜய் கூறினார். அதற்கு முன்னதாகவே பலரும் பலதரப்பட்ட விளக்கங்களை அளித்து வருகின்றனர். அதேநேரத்தில் விமர்சனங்களையும் கொட்டி தீர்க்கின்றனர்.

விமர்சனங்கள் என்னென்ன?

* போர் யானைகளாக இருக்கும் இரண்டுக்கும் காதுகள் பெரிதாக உள்ளன. இந்த யானைகள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல, ஆப்ரிக்காவைச் சேர்ந்தவை.* பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி மற்றும் அந்தக்கட்சியின் சின்னமான ஒற்றை யானையை பிரதிபலிப்பதாக கட்சி கொடி உள்ளது என்று அக்கட்சியின் மாநில தலைமை புகார் கூறியுள்ளது.* கொடியில் உள்ள இரட்டை யானைகள் கேரள அரசின் போக்குவரத்து கழகம், சில தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் லோகோ போல் உள்ளது.* கொடியில் உள்ள சிவப்பு - மஞ்சள் - சிவப்பு வண்ணங்களைப் போன்று ஸ்பெயின் நாட்டு கொடியும் இருக்கிறது.* கொடியில் உள்ள சிவப்பு - மஞ்சள் - சிவப்பு வண்ணங்கள் எங்கள் கொடியில் உள்ள வண்ணங்கள் போல உள்ளது என வெள்ளாளர் முன்னேற்ற கழகம் விமர்சிக்கிறது.* கொடியின் நடுவில் உள்ள இளஞ்சிவப்பு வாகை மலர், உண்மையான வாகை மலரல்ல; அது தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தூங்கு மூஞ்சி மரத்தின் பூ என்றும், உண்மையான வாகை மலர் இளம் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் என்றும் விமர்சிக்கப்படுகிறது.* கொடியில் உள்ள 28 நட்சத்திரங்களும் பல்வேறு கோணத்தில் விமர்சிக்கப்படுகிறது. 28 நட்சத்திரங்களும் இந்தியாவின் 28 மாநிலங்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாக கருத்துகள் எழுந்தன. 28 நட்சத்திரங்களில் 23 நட்சத்திரங்கள் பச்சை வண்ணத்தில் இருப்பது வடமாநிலங்களையும், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்தில் இருப்பது தென்மாநிலங்களையும் குறிப்பிட்டிருப்பதாக கருத்துகள் எழுந்தன.- இவ்வாறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விளக்கங்கள்

இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சிலர், சமூக வலைதளங்களில் கொடி பற்றிய சில விளக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில....* தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் இல்லாத வகையில் கம்பீரமான வகையில் உள்ள கட்சி கொடி, சிறுவர்கள், பெண்கள், இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.* வாகை, வெற்றி ஆகியவை கட்சியின் தலைவரையே குறிக்கும் அடையாளம். வாகை, வெற்றி, விஜய் ஆகிய மூன்றும் ஒரே அர்த்தத்தை குறிக்கும்.* இளஞ்சிவப்பு வாகை மலர், வெற்றி மலர் மட்டுமல்ல, பெண்களை குறிக்கும் மலராக அமைந்துள்ளது.* போர் யானைகள் என்பது பலம் மற்றும் போர் வெற்றியின் அடையாளம். யானைப் படை வைத்திருந்த மன்னர்கள் போர்க்களத்தில் எளிதாக வெல்லும் திறன் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். தமிழ் மன்னர்கள் தான் போர்க்களத்தில் யானைப் படைகளை பயன்படுத்தி, எதிரிகளை வீழ்த்தினர்.* போர் யானைகள், வீரமிக்க ஆண் வர்க்கத்தை குறிக்கும். யானைகள் தமிழர்களோடும், தமிழர் பண்பாட்டு கலாசாரத்தோடும் தொடர்புடையவை. தமிழகத்தின் மிகப்பெரிய கோவில்களில் பெரிய அளவில் யானைச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.* கொடியில் 23 நட்சத்திரங்கள் பச்சை வண்ணத்தில் உள்ளன. பச்சை என்பது விவசாயத்தையும், இஸ்லாமையும் குறிக்கிறது.* கொடியில் 5 நட்சத்திரங்கள் நீலம் வண்ணத்தில் உள்ளன. நீலம் என்பது நீலப்புரட்சியின் அடையாளம். நீலப் புரட்சி என்பது கடல் மீன் வளர்ப்பு மற்றும் உள்நாட்டு மீன் வளர்ப்பின் உற்பத்தித் திறனை அதிகரித்து மீனவர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை உயர்த்துவது. மேலும், நீலம் பட்டியலின சமூகங்களின் அடையாள நிறத்தையும் குறிக்கும்.* கொடியில் உள்ள மஞ்சள் வண்ணம் மங்களகரமானது மட்டுமின்றி பெண்கள் விரும்பும் வண்ணமாகும். சித்த மருத்துவத்திலும், வழிபாடுகளிலும் மஞ்சளுக்கு சிறப்பான இடமுண்டு.* கொடியில் உள்ள சிவப்பு வண்ணம், புரட்சி மற்றும் உழைக்கும் வர்க்கத்தை குறிக்கும். தொழிற்சங்கத்தினரின் பிரதான வண்ணமாக சிவப்பு உள்ளது.இதுவரை கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதனையே மாநாட்டின்போது விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

spr
ஆக 28, 2024 13:47

என்ன சொன்னாலும் சரி "கழகம்" என்றால், சூதாட்டக்களம் என்று வள்ளுவரே சொல்லியிருக்கையில் இவர் வேறு பெயரில் கட்சி துவங்கியிருக்கலாமே ஒருவேளை இவரும் சூதாட்டத்தில் ஈடுபடப் போகிறாரோ


Mr Krish Tamilnadu
ஆக 28, 2024 00:07

அர்த்தமற்ற விவாதங்கள். ஒன்று த.வெ.க இதன் ஆங்கில சுருக்கம். தமிழக வாழ்வுரிமைக் கழகத்துடன் ஒரே மாதிரி வருகிறது என்பது. டி.வீ.கே என விஜய் கூறவில்லை. பிறர் கூறுவதற்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும். டி.வீஇ.கே. என வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வகுப்பில் ஒரே பெயரில் நிறைய மாணவர்கள் இருப்பது இல்லையா?. அடுத்து யானை ஒரு யானை இரண்டு பிளிறும் யானை. கட்சி தலைவரின் தாய்மொழி, சம்மந்தப்பட்ட மாநிலத்தில் இரண்டு கட்சியில் எந்த கட்சிக்கு செல்வாக்கு என்பதை பொறுத்து தான் முடிவு எடுக்க வேண்டும். மக்கள் படித்தவர்கள். ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் பேமெண்ட் போய் கொண்டு இருக்கிறது.மக்கள் மக்கு என யானை சின்னம் கட்சி நினைக்கிறதா? அடுத்து ஸ்பெயின் நாட்டு கொடி. அதில் மஞ்சள் அதிகம். இதில் மூன்று பகுதியும் சம அளவு. இவ்வளவு ஏன்?. தமிழகத்தில் கருப்பு சிகப்பை மட்டும் பயன்படுத்தி எத்தனை கொடிகள் ?. மக்கள் புரிந்து கொள்ள வில்லையா?. பொருட்களிலேயே அதே பெயரை பயன்படுத்தி, அதே மாடலில் சிறு சிறு வித்தியாசங்கள் உடன் வருவதில்லையா. அதில் சரியான பொருளை மக்கள் தேர்ந்து எடுக்கவில்லை. இவ்வளவு ஏன்?. முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். பெயரில் அவர் தொகுதியில் அதே பெயர் உடைய எத்தனை சுயேட்சைகள் போட்டியிட்டார்கள். அவர் அவர் கட்சி மீது நம்பிக்கை உடையவர்கள் அமைதியாக இருப்பார்கள்.குழப்பத்தில் மீன் பிடிப்பவர்கள் மட்டுமே குதிப்பார்கள்.


Rpalnivelu
ஆக 27, 2024 17:31

எனக்கென்னவோ விஜய்யின் பிரைவேட் கம்பெனி கட்சி கமலைப் போல யாரையாவது அண்டி பிழைக்கும் என்றே தோன்றுகிறது. கொள்கையுமில்லை சீண்டுவாருமில்லை. விரைவிலேயே மூடுவிழா நடந்து விடும். திருட்டு த்ரவிஷ கட்சிகள் வெர்ஸஸ் பாஜக தான் இனி


Senthil Arun Kumar D
ஆக 27, 2024 16:45

முதலில் இந்திய யானைகளை கொடியில் பயன்படுத்தவும். ஆஃப்ரிக்க யானைகளை பயன்படுத்தியது இவர்களின் சராசரிக்கும் கீழான அறிவுத்திறனை பிரதிபலிக்கிறது. இவர்களால் ஒரு அரசை நிர்வகிக்கும் அளவுக்கு திறமை உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.


T.sthivinayagam
ஆக 27, 2024 14:05

வாகை மலர் தாமரையை பின்னுக்கு தள்ளும்


Rajarajan
ஆக 27, 2024 13:31

அரசியலை விடுங்க பாஸ். அது யார் வேனாலும் ஆரம்பிக்கலாம், எந்த கட்சிலயும் சேரலாம். அட்மினிஸ்டரேஷன் என்கிற நிர்வாகம் தெரியுமா ? அதுபற்றி நாங்கள் பொதுவெளியில் கேள்விகளை எழுப்பினால், பதில் சொல்ல தயாரா ? எங்களுக்கு அது தான் வேண்டும். திரு. காமராஜர் போல நேர்மை, கல்வி / தொழில் / நீர்வள புரட்சி மற்றும் திரு. மன்மோகன் போல எளிமை, இந்தியாவில் பொருளாதார புரட்சி போல, நீங்க என்ன மாற்றம் கொண்டுவருவீங்க ? இதுக்கு மட்டும் தெளிவான பதில் சொன்னா போதும்.


அன்பு
ஆக 27, 2024 14:28

இதோடு நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு விதிகள் பற்றித் தெரியுமா?


Ms Mahadevan Mahadevan
ஆக 27, 2024 13:20

கட்சியில் சேர்ந்து சம்பாதிக்கலாம் என்று வருகிறவர்கள் சேர்க்காமல் ,இவரும் காருக்கு ஓசுங்கா வரி கட்டி பெரும் ஊதியத்திற்று கருப்பு பணம் வாங்காமல் கட்சி ஆரம்பித்தாள் எல்லோருக்கும் ஓர் கே


தமிழ்வேள்
ஆக 27, 2024 12:52

இந்த கூத்தாடி , ஆபத்தான பயல் .


Ag Jaganath
ஆக 27, 2024 12:17

ஏண்டா உங்களுக்கு வேலை இல்லையா /எல்லாம் நாகரிக திருடர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை