உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் பாதை வேறு; எங்கள் பாதை வேறு: அண்ணாமலை திட்டவட்டம்!

சீமான் பாதை வேறு; எங்கள் பாதை வேறு: அண்ணாமலை திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திராவிட கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் விஜய் பேசுகிறார். புதிதாக வேறு ஏதும் இல்லை' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1lss49da&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=03 மாதங்களுக்கு பிறகு, லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார் அண்ணாமலை. அவருக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெளியே போய் படிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. கடந்த 3 மாதங்களாக பா..ஜ., உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பாக நடந்தது. கடுமையாக உழைத்த பா.ஜ.,வினர் மற்றும் எச்.ராஜாவுக்கு நன்றி. உலகம் முழுவதும் அரசியல் சூழல் எப்படி மாறி கொண்டு இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து படித்தேன். ஆக்ஸ்போர்ட்டு பல்கலை., மிக பழமையானது. 3 மாதம் எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அனுமதி கொடுத்த கட்சிக்கு நன்றி. 3 மாதம் தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு பெரிய நடிகர், தனது உச்சத்தில் இருக்க கூடிய இடத்தில் இருந்து, அரசியலில் கால் பதிக்க வேண்டும் என விஜய் வந்து இருக்கிறார். அவரை வரவேற்கின்றோம். காரணம், அவர் வந்து இருக்கும் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். வரும் காலத்தில் இது குறித்து பதில் சொல்வோம். மாநாட்டில் அவர் வைத்துள்ள கருத்துக்கள் குறித்து பா.ஜ., வினர் பதில் சொல்லி இருக்கிறார்கள்.

குடும்ப கட்சி

உதயநிதி துணை முதல்வர் ஆக பொறுப்பு ஏற்று இருக்கிறார். இது ஒரு வேகமான வளர்ச்சி. பா.ஜ., எப்போதும் வைக்க கூடிய குற்றச்சாட்டு. தி.மு.க., ஒரு குடும்பத்தை சார்ந்து இருக்கும் கட்சியாக இருக்கிறது. குடும்ப கட்சி உண்மை என்று சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் உதயநிதியை செயல்பாடு குறித்து நிச்சயம் விமர்சிப்போம். நன்றாக செயல்பட்டால் பாராட்டுவோம். அகில இந்திய அளவில், ஹரியானாவில் பா.ஜ., வெற்றி பெற்று இருக்கிறது. மஹா.,வில் சரித்திர வெற்றி பெற்று இருக்கிறது. எல்லா மாநிலத்திலும் பா.ஜ., முதன்மையான கட்சியாக இருக்கிறது.3 மாதங்களில் கோடிக்கணக்கானோர் பா.ஜ.,வில் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். இந்தியாவில் ஜனநாயக கட்சியாக இருக்க கூடிய ஒரே கட்சி பா.ஜ.,. கிளை தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை தொண்டர்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். திராவிட கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் விஜய் பேசுகிறார். புதிதாக வேறு ஏதும் இல்லை. சீமானின் பாதை வேறு, எங்களுடைய பாதை வேறு. எங்கள் பாதத்தை நாங்கள் வலுவாக பதித்து இருக்கிறோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. விஜய் பேச்சு, அவரது கொள்கை திராவிட கட்சிகளுடன் ஒத்து போகிறது. இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை எல்லோரும் கணித்துள்ளார்கள். புதிதாக வர போகிறவர்களை பார்த்து பா.ஜ., எப்போதும் பயப்பட போவது கிடையாது. பெண்கள் முதல் வயதானவர்கள் வரை மனதில் விஜய் இடம் பிடித்து இருக்கிறார். அதனை மறுக்க முடியாது.

புதிய களம்

இந்திய அளவில் அதிக வசூல் பெறக்கூடிய நடிகராக விஜய் இருக்கிறார். ஆனால் அரசியல் களம் வேறு. அக்.,28ம் தேதிக்கு பிறகு எத்தனை முறை விஜய் வெளியே வந்து இருக்கிறார். எங்களுக்கு யார் மீதும் பயமில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு 3 ஆக ஓட்டுக்கள் பிரிந்து இருக்கிறது. பா.ஜ.,வின் ஓட்டு தேசிய அளவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. புதியவர்களை தடுக்க கூடாது. விஜயை கேள்வி கேட்கும் இடத்தில் கேள்வி கேட்போம். தி.மு.க., ஆம்ஆத்மி வித்தியாசமான முறையில் பயணிக்கிறது. 2026ம் ஆண்டு புதிய களமாக இருக்கும். பொறுத்து இருந்து பார்ப்போம். பா.ஜ., உறுப்பினர்கள் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

MADHAVAN
டிச 02, 2024 18:46

இந்தியாவில், தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலம், தலை சிறந்த தொழிலாளர்கள், மற்றும் தன்மானம் உள்ளவர்கள் அதிகம், பிஜேபி தமிழ்நாட்டுக்கு செய்த ஒரு நல்ல திட்டத்தைக்கூட சொல்லி ஒட்டு கேக்க முடியாமல், இங்கு உள்ளவர்களின் சிறு சிறு குறையை சொல்லி மக்களை பிளவுபடுத்த வந்த உங்க பிஜேபி யை நோட்டோவோடுதான் போட்டிபோட வைப்போம்,


sankaranarayanan
டிச 01, 2024 21:19

அண்ணாமலை வருகிறார் என்ற உடனேயே திராவிட ஆட்சிசெய்யயும் இடங்களில் புயலும் மழையும் மாறி மாறி வருகின்றன இதற்கு என்ன அறிகுறி மக்களே பயப்பட வேண்டாம் இந்த புயலினால் அதிக சேதம் மக்களுக்கு இருக்கவே இருக்காது இது அரசை விழித்தெழ வைத்திருக்கிறது அவ்வளவேதான் இனி அண்ணாமலையின் தீவிர அரசியல் செயல்கள் அருணாச்சலேஸ்வரர் கார்த்திகைக்கு பிறகே ஆராம்பம் ஆகும்


Jay
டிச 01, 2024 21:03

50 வருஷம் அரசியலைத் தவிர வேறு எதுவும் செய்யாத முழு நேர அரசியல்வாதி எவ்வளவு திறமையானவராக, எவ்வளவு அரசியல் ஞானம் தெரிந்தவராக, எவ்வளவு சாணக்கியனாக இருக்க வேண்டும் என்று கேட்க முடியாத குடும்ப அடிமை இங்கு வந்து பொருளாதாரம், அரசியல், சட்டம் என்ற மெத்த படித்தவரை தூற்ற வந்துவிட்டார்கள்.


Dhurvesh
டிச 01, 2024 20:36

அப்புறம் என்ன ..இனி காமெடிக்கு பஞ்சம் இருக்காது.. வந்த உடனே ஆக்ஸ்போர்ட் யூனிவெர்சிட்டில 40000 புத்தகம் படிச்சேன்னு அடிச்சு விடுவார்.. அதை எதிர்த்து ஒருத்தரும் கேக்கமாட்டாங்க.. ஏன்னா லேட்டஸ்ட் சாம்சங் கைல இருக்கும்.பாண்டிச்சேரியில் படகு விட வந்திருக்கார்.அரவக்குறிச்சியில் எப்படி வெற்றி பெறுவது என்று அறிய இந்த ஆடு லண்டன் போய் படிச்சி வந்திருக்கு


panneer selvam
டிச 01, 2024 23:56

Not only Aravakurchi as long as Tamilnadu voters are loyal to Quarter + Briyani + Rs 2,000/- , Dravidian parties are assured of success in the election , even Mahatma Gandhi can not win in this situation


நிக்கோல்தாம்சன்
டிச 04, 2024 03:35

அப்படியே திராவக மாடலில் எழுதியுள்ளீர்கள் உடன்பிறப்பு சார் , இன்னமும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த ஆட்டம் என்று பார்க்கிறேன்


Dhurvesh
டிச 01, 2024 19:37

சீமான் வாங்கும் வோட்டு கூட வாங்க முடியவில்லை , அரவக்குறிச்சியில் வெற்றி பெறுவது எப்படி என்று படிக்க அதுவும் நண்பர்கள் உதவியால் சென்ற இவருக்கு , இன்னும் விஜய் இறங்கினால் இவர் கதை மீண்டும் நோட்டா–வுக்கும் இறக்கம் தான்.


Barakat Ali
டிச 01, 2024 18:47

உலகம் முழுவதும் அரசியல் சூழல் எப்படி மாறி கொண்டு இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து படித்தேன். நல்ல காமெடி ....... இது குறித்து பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன .... அனைத்தையும் ஆன்லைனில் காணலாம் .....


Dhanraj
டிச 01, 2024 18:29

தனது உச்சத்தில் இருக்க கூடிய இடத்தில் இருந்து, அரசியலில் கால் பதிக்க வேண்டும் என விஜய் வந்து இருக்கிறார். அவரை வரவேற்கின்றோம். காரணம், அவர் வந்து இருக்கும் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிறார் அண்ணாமலை. இந்த மாண்பு தொடரட்டும் ....


நிக்கோல்தாம்சன்
டிச 01, 2024 17:13

புதிய நிலைக்கு நீங்கள் , சீமான் விஜய் மற்றும் சசிகாந்த் செந்தில் தமிழகத்தை எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன் , இனி குடும்ப கட்சியை பற்றியோ அதன் தலைவர்கள் பற்றியோ நான் கவலைப்பட போவதில்லை , ஒவ்வொரு முறையும் நான் சசிகாந்த் செந்தில் பற்றி இந்த தளத்தில் குறிப்பிட்டு வருகிறேன் , ஏனெனில் அவர் நிழல் தலைவராக வந்து கொண்டுள்ளார் என்றே எனது எண்ணம் , அவரே தெளிவு படுத்துவார் , ஆதவ் அர்ஜுன் பற்றி நம்பிக்கொண்டிருந்தேன் , திருமா அவரை ஓரம் கட்டி விட்டார் விசிக குறித்து காலம் தான் பதில் சொல்லவேண்டும்


joe
டிச 01, 2024 16:33

திராவிட கட்சிகள் என சொல்லிக்கொண்டு சாதி வெறியை தூண்டிக்கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் தமிழ் நாட்டுக்கு நாகரிக கேடு மட்டுமல்ல ,பொருளாதார சீரழிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் .


joe
டிச 01, 2024 16:28

சாதி வெறியை தூண்டும் திராவிட காட்சிகள் தேவையில்லை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை