உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பலப்பல ஐடியாக்களுடன் விதவிதமாக ஏமாற்றி பணம் பறித்தேன்

பலப்பல ஐடியாக்களுடன் விதவிதமாக ஏமாற்றி பணம் பறித்தேன்

சென்னை: ''விதவிதமான திட்டங்களை அறிவித்து, முதலீடுதாரர்களிடம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தேன்,'' என, கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.சேலத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்த விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையது அகமது ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் முக்கிய நபரான விஜயபானு, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:பண மோசடி தொடர்பாக, என் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு, வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு, சென்னை வடபழனி, பூந்தமல்லி காவல் நிலையத்தில், ஆறு வழக்குகள் உள்ளன.

பண மோசடி

இவ்வழக்குகளில் கைதாகி ஜாமினில் வெளி வந்த பிறகு, பண மோசடி செய்ய சேலத்திற்கு இடம் பெயர்ந்தேன். அங்கு, அம்மாபேட்டை என்ற இடத்தில், அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை துவக்கினேன். என்னுடன் அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயபிரதா, பாஸ்கர், சையது அகமது ஆகியோரை நிர்வாகியாக நியமித்தேன். எங்கள் அறக்கட்டளையில், 'இலவசமாக தையல், கணினி, ஆங்கில மொழி கற்று தரப்படும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு டியூசன், பெண்களுக்கு கூடைப் பின்னல், பாக்குதட்டு தயாரிப்பு, மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரிப்பு மற்றும் கைவினை தொழில்கள் கற்றுத் தரப்படும்' என, விளம்பரம் செய்தோம்.

மளிகை பொருட்கள்

இதனால், சேலம் மாவட்டத்தை சேர்ந்தோர் பலர் வந்தனர். பயிற்சியின்போது, 10 ரூபாய்க்கு சாப்பாடு, டீ மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தோம். இதனால், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. அதன் பிறகு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, பண மோசடி திட்டத்தை, அறிமுகம் செய்தேன்.பொது மக்களை முதலீடுதாரர்களாக மாற்றினேன். ஒருவர் 1,000 ரூபாய் முதலீடு செய்தால், ஒன்றரை மாதத்தில், 2,000 ரூபாய்க்கான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்றேன். அதன்படி வழங்கி, முதலீடுதாரர்களை நம்ப வைத்தேன்.

காலி மனை

அடுத்து, ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால், 7 மாதங்களுக்கு, தலா, 30,000 ரூபாய் வீதம், 2.10 லட்சம் ரூபாய் தரப்படும். மாதம், 10,000 ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் செலுத்தினால், 750 சதுர அடி காலி மனை வழங்கப்படும்.மாதம், 1,500 வீதம், 12 மாதங்களுக்கு,18,000 ரூபாய் செலுத்தினால், 5 கிராம் தங்க நகை வழங்கப்படும். சிறப்பு திட்டம் என்ற பெயரில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒன்பது மாதங்களுக்கு தலா, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, விதவிதமான திட்டங்களை அறிவித்து, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளேன்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இது குறித்து போலீசார் கூறுகையில், 'விஜயபானு மற்றும் அவரது கூட்டாளிகள், 4.32 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளாக, 216 பேர் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் விரைந்து புகார் அளிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
பிப் 06, 2025 18:02

நமது மக்கள் எவர் என்ன பொய் சொன்னாலும் நம்பி விடுகின்றனர், பாஜக ஹிந்துக்களின் பாதுகாவலர் என்று சொன்னால் கூட நம்புகின்றனர்!


Tetra
பிப் 06, 2025 16:20

எப்படி எல்லாம் அன்பு மதத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள்


sugadhan
பிப் 06, 2025 16:17

ஒரு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் எப்படி டிரஸ்ட் ரெஜிஸ்டர் செய்தார் ? நமது நாட்டில் பணம் எல்லாம் செய்கிறது. பொருளுக்காக மனிதர்களையும் நாட்டையும் விற்கும் நாடாகிவிட்டது நமது பாரதம். அன்று முகமதியர்கள் பின் பிரிட்டிஷ் இப்போது நமக்கு நாமே


Ganesh
பிப் 06, 2025 13:14

சார், இது இரண்டு அரசு துறைகளின் மெத்தனம்.. - நீதிபதிகள் எவ்வாறு இவர்களுக்கு ஜாமீன் குடுக்கிறார்கள்? இதே குற்றத்தை பண்ண கூடாது என்று உறுதி வாங்கி கொண்டு குடுக்கிறார்களா? இல்லையென்றால் ஜாமின் குடுத்தவர்களை உள்ளே தூக்கி போட வேண்டும் - உளவு துறை என்ன செய்தது... இதை கண்டுபிடித்து பொருளாதார குற்ற துறை யிடம் ஏன் சொல்லி முளையிலேயே கிள்ள வில்லை?


ஆரூர் ரங்
பிப் 06, 2025 10:42

உள்ளூர் சர்ச்களில் கவர்ச்சிகரமான. அறிவிப்பு வெளியிட்டு முதலீடு செய்ய வைத்துள்ளனர் என்றால் அந்த கர்த்தர் காப்பாற்றட்டும்.


Velan Iyengaar
பிப் 06, 2025 11:04

இந்த பொம்பள உலக மகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சி நிர்வாகி


Laddoo
பிப் 06, 2025 12:56

இவர் மறைமுகமாக செய்ததை த்ரவிஷ்கள் ஓபனாக செய்கிறார்கள். அவ்வளவே. கட்டுயிசம் வாழ்க


m.arunachalam
பிப் 06, 2025 06:15

தங்க தாரகையை பெற்றெடுத்து வளர்த்த பெற்றோருக்கும் , குடும்பத்தினருக்கும் தண்டனை வழங்கவேண்டும் ..


nagendhiran
பிப் 06, 2025 05:44

பேராசை பெருநஷ்டம்?


nagendhiran
பிப் 06, 2025 05:43

வீர தமிழச்சினு சொல்லுங்க?


நிக்கோல்தாம்சன்
பிப் 06, 2025 04:11

வில்லங்கமான விடியல் திட்டங்களை முன் வைத்துள்ளார் இந்த பெண் , அந்த குடும்பத்தின் தாக்காமா இருக்குமோ , அவங்க 500+ இப்படி தான் சொல்லி வந்தாங்க , பின்னர் கந்தூரி கொடுத்தாங்க இல்லையா மக்களே


raja
பிப் 06, 2025 03:55

ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற திருட்டு திராவிடர்கள் ஆட்சியில் எந்த பக்கம் திரும்பினாலும் கொலை கொள்ளை திருட்டு கற்பழிப்பு மோசடி லஞ்சம் ... இதுக்கு பேருதான் உலக நாடுகளே எண்கள் நாட்டுக்கு இது போல ஆட்சி வராதா என்று ஏங்கும் மாடல் ஆட்சியாம்....