உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்கும் போட்டியிட தயார் விஜயகாந்த் மகன் விருப்பமனு

எங்கும் போட்டியிட தயார் விஜயகாந்த் மகன் விருப்பமனு

சென்னை:தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன், விருப்பமனுஅளித்தார்.அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு கடலுார், விருதுநகர், கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை, திருச்சி ஆகிய ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம், சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெறப்படுகிறது. இரண்டு நாட்களில், 60 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் தன் விருப்ப மனுவை, பொதுச்செயலர் பிரேம லதா, மாநில துணை செயலர் சுதீஷ் ஆகியோரிடம் அளித்தார்.விஜயபிரபாகரன் கூறுகையில், ''லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிடஆர்வமாக உள்ளேன். ''தமிழகத்தில் எந்த தொகுதியில் கட்சி தலைமை நிற்கச் சொல்கிறதோ அங்கு நிற்பதற்கு தயாராக இருக்கிறேன். என் தந்தையின் கனவுகளை நிறைவேற்ற நான்வந்துள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ