உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசை கண்டித்த விஜய்க்கு அவரது படம் வாயிலாக பதிலடி

அரசை கண்டித்த விஜய்க்கு அவரது படம் வாயிலாக பதிலடி

சென்னை:சிகிச்சை அளிக்காத டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில், அரசை கண்டித்த த.வெ.க., தலைவர் விஜய்க்கு, அவரது படக்காட்சிகள் வாயிலாக பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.சென்னை கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை டாக்டர் பாலாஜி, நோயாளி ஒருவரின் மகனால் குத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், 'அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது' என கூறிஉள்ளார். அதற்கு பதிலடி தரும் வகையில், போக்கிரி திரைபடக் காட்சிகளை, ஆளுங்கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், சிகிச்சை அளிக்காத டாக்டரை, பட நாயகனான விஜய் கத்தியால் தாக்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 'நோயாளிக்கு உடனே சிகிச்சை அளிக்காத டாக்டரை, கத்தியால் குத்த கற்றுக் கொடுத்து விட்டு, அரசியலுக்கு வந்த பின், அதை எதிர்ப்பது போல அரசியல் செய்யலாமா' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ