உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., மாநாடு: விழா மேடையில் தியாகிகளுக்கு விஜய் மரியாதை

த.வெ.க., மாநாடு: விழா மேடையில் தியாகிகளுக்கு விஜய் மரியாதை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் இன்று நடிகர் விஜயின் த.வெ.க.,வின் அரசியல் மாநாடு கொடி பாடலுடன் துவங்கியது.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துகிறார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரகணக்கான தொண்டர்கள் விக்கிரவாண்டியில் கூடியுள்ளனர். முதலில் விழா மேடைக்கு நிர்வாகிகள் வந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6n3um8nc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநாட்டிற்கு விஜயின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் வந்துள்ளனர். அப்போது, மாநாட்டு திடலில் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களை அமைதி காக்கும்படி அவர்கள் அறிவுறுத்தினர்.இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3:00 மணிக்கு மேல் கட்சியின் கொடி பாடலுடன் மாநாடு துவங்கியது. முதலில் பறையாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 4 மணியளவில் நடிகர் விஜய் மேடைக்கு வந்தார். தொடர்ந்து அங்கிருந்த ரேம்ப்பில் நடந்தும், ஓடிய விஜயை நோக்கி, தொண்டர்கள் கட்சி துண்டுகளை வீசினர். அதில் சிலவற்றை எடுத்து தோளில் எடுத்து அணிந்து கொண்டார். பிறகு, மேடைக்கு வந்ததும், கொள்கை காணொலி வெளியிடப்பட்டது. அதில் மதசார்பற்ற சமூக நீதி கொள்கைகள் என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. தொண்டர்களின் வரவேற்பை பார்த்து விஜய் லேசாக கண்கலங்கினார்.

மரியாதை

தொடர்ந்து தமிழகத்தை ஆண்ட அரசர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.இந்த மாநாட்டில் நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ms Mahadevan Mahadevan
அக் 27, 2024 19:44

எல்லாகட்சிகளும் சொன்னதையே சொல்லுகிறார்.


நிக்கோல்தாம்சன்
அக் 27, 2024 18:05

போதையின் தாக்கத்தில் நொந்து போயி இருக்கும் தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை தூரத்தில் காட்டும் தவேக


Sudha
அக் 27, 2024 18:03

ஒரு திருத்தம், இவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே, தொண்டர்கள் அல்ல, ஒரு மூன்று மாதம் ஏதாவது செய்து காட்டினால் பிறகு பேசலாம்


நிக்கோல்தாம்சன்
அக் 27, 2024 18:05

போதையின் தாக்கத்தில் நொந்து போயி இருக்கும் தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை தூரத்தில் காட்டும் தவேக


Sudha
அக் 27, 2024 18:03

ஒரு திருத்தம், இவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே, தொண்டர்கள் அல்ல, ஒரு மூன்று மாதம் ஏதாவது செய்து காட்டினால் பிறகு பேசலாம்


Sudha
அக் 27, 2024 18:03

ஒரு திருத்தம், இவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே, தொண்டர்கள் அல்ல, ஒரு மூன்று மாதம் ஏதாவது செய்து காட்டினால் பிறகு பேசலாம்


بی ڈیوڈ رافیل
அக் 27, 2024 16:02

2026 தேர்தலில் deposit வாங்குற அளவுக்காவது vote percentage வருதான்னு பார்க்கலாமே..... ?????


sundarsvpr
அக் 27, 2024 16:00

ஜோசப் விஜய் ஒரு அரசியல் கட்சி தொடங்குவது அரசியலில் பல புதர்கள் இருப்பது போன்று இதுவும் ஓன்று. சமூகத்திற்கு தேவையா என்பது அனுபவம்தான் தீர்மானிக்கும். ஏன் என்றால் எம் ஜி ஆர் திரைப்படங்களில் நடித்தாலும் அரசியல் நுணுக்கம் மன அளவில் இருந்தது. உடல் ரீதியில் நடிப்பு. காரணம் அரசியலில் அண்ணாதுரை என். வி. நடராசன் நெடுஞ்செழியன் சம்பத் போன்றோரிடம் கருது பரிமாற்றம். இதனால் அரசியலில் எதிரிகளை சமாளித்து வீர நடை போட்டார். கட்சி ஆரம்பித்து மக்களிடம் பழகாத ஜோசப் விஜய் தீர்மானங்கள் போடுவது விவேகம் அற்றது. ஆரவார அரசியல் அர்த்தமற்றதாகிவிடும். நல்ல நோக்கம் என்றால் கர்த்தர் காப்பாற்றுவார் வாழ்த்துகள்


narayanansagmailcom
அக் 27, 2024 15:57

சினிமாவில் முதல்வர் ஆவது எவ்வளவு எளிது என்று விஜய்க்கும் தெரியும். ஆனால் ஒரு அரசியல் காட்சிகள் தேர்தலில் முழு வெற்றி பெற்று முதல்வர் ஆவது எவ்வளவு கடினம் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும். முதலில் சாதி மதம் வேறுபாடு, லஞ்சம், மது ஒழிப்பு, ஊழல் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்லாட்சி மலர வைக்க வேண்டும். மேலும் இலவசங்களை ஒழித்து எல்லா சாதி மக்களுக்கும் அவரவர் திறமைக்கு தகுந்த வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். கோவில்கள் சொத்துக்கள் கோவிலுக்கு மட்டுமே அவற்றை ஆக்ரமித்தவர்கள் இடம் இருந்து மீட்டு மக்களுடன் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக மத்திய அரசுடன் இணைந்து எல்லா நிதிகளை முழுமையாக பெற்று அவைகளை அந்தந்த திட்டத்துக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். இவைகளை எல்லாம் எல்லா மக்களும் அறியும் வண்ணம் அவர்களுக்கு தெரிவித்து அவர்கள் நாள் மதிப்பை பெற வேண்டும். மக்கள் வாழ்வு முன்னேற தேவையான எல்லாவற்றையும் செய்யும் போது தான் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க முடியும். வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை