உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை, அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, ஜூலை 10ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இ.பி.எஸ்., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c9uwrllj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்,, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறித்துள்ளார்.

பண பலம், படைபலம்

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசின் அமைச்சர்களும், தி.மு.க.,வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதோடு, பண பலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் கட்டவிழ்த்துவிட்டு மக்களை சுதந்திரமாக ஓட்டளிக்க விடமாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

பெரிய பாதிப்பு ஏற்படாது!

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக.,வினர் தேர்தலில் வெற்றி பெற பணத்தை வைத்து எத்தகைய முயற்சியும் செய்வார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் கழுத்து நெறிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இருக்கும் வரை இடைத்தேர்தல் நேர்மையாக நடக்காது என ஜெயலலிதா கூறியிருந்தார். ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் பெரிய அளவில் பாதிப்பு வர போவதில்லை. பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சி எல்லாம் பெரிய கட்சி அல்ல. அதிமுக தான் பெரிய கட்சி. வெற்றி பெறுவதற்காக திமுக.,வினர் கொலுசு, அண்டா-குண்டா, தங்க செயின் எல்லாம் கொடுப்பார்கள். பாத்திரம் கழுவுவார்கள், துணி கூட துவைத்துக் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

களத்தில் திமுக, நாம் தமிழர், பா.ம.க.,

தி.மு.க., வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ., கூட்டணியில் உள்ள பா.ம.க., போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளராக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் பாமக ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

MADHAVAN
ஜூன் 18, 2024 17:13

ஜெயலலிதா ஜெயிச்சது மறந்துட்டு பேசுறா, அதிமுக சார்பா தினகரன் நின்னப்போ பத்தாயிரம் ரூபாய்க்கு மேல குடுத்த நீங்க..... இப்படி பேச கூடாது,


venugopal s
ஜூன் 16, 2024 14:40

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் மற்றும் ஆடத் தெரியாத நாட்டியக்காரி தெரு கோணல் என்றாளாம் என்ற பழமொழிகள் தான் ஞாபகம் வருகிறது!


Mahendran Puru
ஜூன் 16, 2024 11:13

இரட்டை இலை வாக்குகள் பாஜகவுக்கு மாறியது பத்தாதென்று பாமகவிற்கு மாற்ற நடக்கும் சதி. ஆனால் சதி ஜெயிக்குமா? அல்லது இலை வாக்குகள் சூரியனுக்கு மாறுமா?


Bala
ஜூன் 16, 2024 09:04

இரட்டை இலைக்கு ஓட்டுப்போடும் அனைவரும் இந்தமுறை பாமாவிற்கு அதாவது மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டுப்போட்டு திமுகவிற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தால் தமிழக மக்களுக்கு நல்லது. இரட்டை இலை மானஸ்தர்களே, எம்ஜியாரும் ஜெயலலிதாவும் திமுகவை ஒரு தீய சக்தி என்று கூறியுள்ளனர். இதை மனதில் வைத்து மாம்பழத்திற்கு வாக்களிக்க வேண்டும். தீய சக்தியை விரட்ட வேண்டும். இதுவே நீங்கள் புரட்சி தலைவர் அவர்களுக்கும் அம்மா அவர்களுக்கும் செய்யும் மரியாதை


Sck
ஜூன் 16, 2024 06:35

எப்படியும் அதிமுக போட்டி இட்டால் டெபாசிட் இழந்து 4வது இடத்துக்கு தள்ளப்படும். ஏன் அந்த அசிங்கம் என்று நினைத்து ஒதுங்கிவிட்டார்கள்.


Mohan
ஜூன் 16, 2024 09:25

சரியா சொன்னீங்க


Anantharaman Srinivasan
ஜூன் 15, 2024 23:31

அப்படினா விஜய் கட்சி போணியாகாதா..,??


KR
ஜூன் 15, 2024 22:33

Katchiya Kalaithu vidunga pa


பேசும் தமிழன்
ஜூன் 15, 2024 22:18

நீங்கள் போட்டியிட்டாலும் எப்படியும் பிஜேபி கூட்டணி வேட்பாளரை விட குறைவாக தான் ஓட்டு வாங்க போகிறீர்கள் ....அதனால் தான் பங்காளி கட்சி திமுக வெற்றி பெறட்டும் என்று....தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி கொள்கிறீர்கள் அப்படி தானே ??? பங்காளி கட்சி மீது அவ்வளவு அக்கறை உங்களுக்கு .....தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை ...எதிரிக்கு ஒரு கண்ணாவது பொக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தானே நீங்கள் .....நீங்கள் நோட்டா கட்சி என்று கூறிய கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது ......ஆனால் நாங்கள் தான் தமிழகத்திலேயே பெரிய கட்சி என்று கூறும் நீங்கள் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடுவது ஏன் ??? .....2026 தேர்தலின் போதும். . எப்படியும் திமுக அல்லது பிஜேபி கூட்டணி தான் ஆட்சியமைக்க போகிறது என்று தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி கொள்வீர்களா ???


வாசகர்
ஜூன் 15, 2024 22:16

2 கோடி தொண்டர்கள்?


theruvasagan
ஜூன் 15, 2024 22:01

ஒரே கல்லுல இரண்டு மாங்காய். ஒண்ணு. தோத்து டிபாசிட் காலின்னு கெட்ட பேர் வராது. ரெண்டு. மறைமுகமாக பங்காளிக்கு உதவின மாதிரியும் ஆச்சு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை