உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மளமள

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மளமள

சென்னை : விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து, மாலையில் முடியும் வரை, ஆச்சரியமூட்டும் வகையில், 'மளமள'வென ஓட்டுகள் பதிவாகின. இத்தேர்தலில் வெல்லப்போவது பணமா அல்லது வாக்காளர்களின் மனநிலையா என்பது, நாளை மறுதினம் நடக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கு பின் தெரியவரும்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு காரணமாக, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்தது. தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட, 29 வேட்பாளர்கள் களம் இறங்கினர். அ.தி.மு.க., தேர்தலை புறக்கணித்த நிலையில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், ஆளுங்கட்சியான தி.மு.க., தீவிரமாக களப்பணியாற்றியது; வாக்காளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்தனர். அதேபோல், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால், கூட்டணி கட்சிகள் துணையுடன், சமுதாய ஓட்டுகளை கவர்ந்து வெற்றி பெற, பா.ம.க.,வும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. இதனால், வழக்கமான இடைத்தேர்தல் கவனிப்புகள், வாக்காளர்களை உற்சாகமடைய வைத்தன. இது, நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் பெரிய அளவில் எதிரொலித்தது. தொகுதியில், ஒரு லட்சத்து 16,962 ஆண்கள்; ஒரு லட்சத்து 20,040 பெண்கள்; 29 திருநங்கையர் என, மொத்தம் 2 லட்சத்து 37,031 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று காலை 7:00 மணிக்கு, 276 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்தனர். விக்கிரவாண்டி, காணை, சூரப்பட்டு, சிறுவாலை, கெடார், நேமூர், திருவாமாத்துார் உட்பட பல ஓட்டுச்சாவடிகளில், காலையிலே அதிக அளவில் பெண்கள் ஓட்டு போட குவிந்தனர்.ஓட்டுப்பதிவு நாளான நேற்றும், காணை வட்டாரத்தில், பல கிராமங்களில், ஆளும் கட்சி தரப்பில் ஓட்டுக்கு 500 ரூபாய் வழங்கியதாக புகார்கள் எழுந்தன. மதியம், வாக்காளர்களை கட்சியினர் வீடு தேடிச் சென்று, ஓட்டுப் போட அழைத்து வந்தனர். ஒரு சில இடங்களில், ஆளும் கட்சியினருக்கும், பா.ம.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் வழங்குவதாகவும், புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் பா.ம.க.,வினர் புகார் தெரிவித்தனர்.காலை 9:00 மணிக்கு 12.94; 11:00 மணிக்கு 29.97; பகல் 1:00 மணிக்கு 50.95; மாலை 3:00 மணிக்கு 64.44; மாலை 5:00 மணிக்கு, 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தில், ஓட்டுச்சாவடிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக, சில ஓட்டுச்சாவடிகளில் மாலை 6:00 மணிக்கு மேலும் ஓட்டுப்பதிவு நடந்தது.இத்தொகுதியில், 2011 தேர்தலில் 81.39; 2016 தேர்தலில் 81.71; 2019 தேர்தலில் 84.35; 2021 தேர்தலில் 82.04 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலிலும், 80 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளன. சிறு சலசலப்புகள் தவிர்த்து, அமைதியாக ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.ஓட்டு எண்ணிக்கை, 13ம் தேதி நடக்க உள்ளது. இடைத்தேர்தலில் வெல்லப்போவது பணமா அல்லது வாக்காளர்களின் மனநிலையா என்பது, நாளை மறுநாள் நடக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கு பின் தெரியவரும்.

அ.தி.மு.க., அதிர்ச்சி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக, அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., அறிவித்தது. 'அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டளிக்க மாட்டார்கள்' என, அக்கட்சிகளின் தலைவர்கள் கூறி வந்தனர்.ஆனால், நேற்றைய ஓட்டுப்பதிவில் எந்தவிதத்திலும் சரிவு ஏற்படவில்லை. வழக்கமான அளவுக்கு ஓட்டுப்பதிவு நடந்திருப்பது, அ.தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., வாக்காளர்கள் ஓட்டுக்கள் யாருக்கு சென்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

sivakumar Thappali Krishnamoorthy
ஜூலை 13, 2024 13:38

மானம் கேட்ட மனிதர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரை தி மு க ஜெயிக்கும்.


Dominic
ஜூலை 13, 2024 13:26

seemaaar is rejected by tamils in tamilnadu.


rama adhavan
ஜூலை 11, 2024 21:05

விக்கிரவாண்டியில் ஆளும் கட்சிதான். சுமார் 70000 வாக்கு வித்தியாசம் இருக்கும். பணம் செய்யும் வேலை இது. ஓட்டுப்ப்போடாத 17 சதம் தான் ஆதிமுகவா? அப்போ கட்சியில் 2 கோடி என்பது பொய்யான புள்ளியா?


Nandakumar Naidu.
ஜூலை 11, 2024 18:07

ஊழல் வாதிகள் மக்களா அல்லது அரசியல் வாதிகளா என்பது இந்த தேர்தல் நீருபித்துவிடும்.


T.sthivinayagam
ஜூலை 11, 2024 17:47

பணம் மனம் மக்கள் ஆதரவு அதிமேதாவிகளுக்கு கிடைக்காது என்பதை மக்கள் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டனர்


Kasimani Baskaran
ஜூலை 11, 2024 19:09

காசுக்காக அம்மணமாக போடக்கூட தயங்காதவர்கள் இருக்கும்வரை இது போன்ற உபிஸ் இருக்கத்தான் செய்வார்கள்...


nagendhiran
ஜூலை 11, 2024 17:13

வழக்கமாக காசுக்குதான்


விஜய்
ஜூலை 11, 2024 16:29

திமுக பணம் பலம் முன்பு ஒன்றும் இல்லை


Jysenn
ஜூலை 11, 2024 15:34

Note it down. Mr Money will win by a margin of 65K.


R.PERUMALRAJA
ஜூலை 11, 2024 14:38

வன்னியர் பகுதிகளில் சவுமியா அன்புமணி தேர்தலில் வேட்பாளராக நின்றாலும் 80% வாக்குகளை அந்த தொகுதி பெறுகிறது அல்லது தேர்தல் பரப்புரை செய்தாலும் 80% வாக்குகளை பெறுகிறது . இதை அறிந்த ஸ்டாலின் , வரும் தேர்தலில் , பாமக வை ஒழித்துக்கட்ட , வட மாநில வன்னியர்களை குறி வைத்து தருமபுரி /கிருஷ்ணகிரி பக்கம் நல திட்டங்களை துவக்கி வைக்கிறார் .


R.PERUMALRAJA
ஜூலை 11, 2024 12:58

ஆ தி மு க தேர்தலில் போட்டி இடாமல் ஒதுங்கி இருக்கும் நேரத்தில் பணம் கொடுத்தால் எத்தனை சதவிகிதம் வாக்குகள் பதிவாகின்றன, அதில் எத்தனை சதவிகிதம் தி மு க விற்கு காக வாக்களித்திருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பதற்காக பணம் மழை பொழிந்திருக்கிறார்கள் . எல்லாம் ஒரு கணக்கு தான் . பிரஷாந்த் கிஷோர் முன் கைகட்டி " வாக்கு சதவிகித கணக்கு கொடுத்து கை கட்டி நிற்க தான்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை