உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சரி பார்க்க இப்படி செய்யுங்கள்

உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சரி பார்க்க இப்படி செய்யுங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் பெயர்கள் சரியாக உள்ளதா? பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சில வழிமுறைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளான எஸ்ஐஆர் முடிந்து இன்று (டிச.19) அதிகாரப்பூர்வமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த கலெக்டர்கள் இந்த பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை கீழ்க்கண்ட வழி முறைகள் மூலம் சரிபார்த்து அறிந்து கொள்ளலாம். • voters.eci.gov.inஅல்லது electoralsearch.eci.gov.inஎன்ற இணையதளத்தினுள் செல்ல வேண்டும்.• சம்பந்தப்பட்ட நபரின் வாக்காளர் அடையாள அட்டை எண்(EPIC) உள்ளீடு செய்ய வேண்டும். வாக்காளர் பெயர், அவரின் வயது மற்றும் எந்த தொகுதி என்ற விவரங்களையும் உள்ளீடு செய்யலாம்.• தேடல் என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் வாக்காளர் விவரங்களை அறியலாம்.• திரையில் உங்கள் பெயர் இருந்தால், அதிகாரப்பூர்வ வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது என்று அர்த்தமாகும். (சில தொகுதிகளில் கடந்த முறை ஓட்டுப்போட்டு ஓட்டுச்சாவடிகள் மாறி இருக்கும். அதையும் அறிந்து கொள்ளலாம்)

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன?

* வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அதற்கான காரணங்கள் குறித்து திருப்தி இல்லை என்றால், ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் ஜன.18ம் தேதி வரை தெரிவிக்கலாம்.• ஏற்கனவே (கடந்த முறை) வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தற்போது இடம்மாறியவர்கள் படிவம் எண் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் எண் 6 ஆகியவற்றை உரிய முறையில் பூர்த்தி செய்து, அதற்கான ஆவணங்களை வழங்கி ஜன.18க்குள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.அனைத்து செயல்முறைகளும் நிறைவு பெற்ற பின்னர், 2026ம் ஆண்டு பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலில் பெயர் உள்ளவர்களே, 2026 சட்டசபை தேர்தலில் ஓட்டு போட, தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் ஆவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S Srinivasan
டிச 20, 2025 11:05

my name and family name and all not came what is this??


சுந்தர்
டிச 20, 2025 11:03

தினமலர், இந்த செய்தி area வில் வரும் லிங்க்குகளை அப்படியே கிளிக் செய்யும்படி ஏற்பாடு செய்து தர வேண்டும்.


Ramesh Sargam
டிச 19, 2025 22:01

இதுபோன்று இந்தியாவின் எல்லாமாநிலங்களிலும் சரி பார்க்கமுடியுமா?


KRISHNAN R
டிச 19, 2025 21:12

நன்றி உடனே சரி பார்த்தேன். இதை அனைவரும் அறிந்து பயன் படுத்த வேண்டும்


அம்பி அய்யர்
டிச 19, 2025 21:10

இன்னும் செத்துப் போனவங்க பெயர்கள் எல்லாம் நீக்கப்படாமல் இருக்கே... அதை என்ன பண்ணுவாங்க??!! கள்ள ஒட்டு போடுவதற்காகவே வேண்டும் என்று பெயர்கள் நீக்கம் செய்யப்படவில்லை... சென்னையில் என் சகோதரர் வசிக்கும் வீட்டிற்கு SIR படிவம் கொடுக்கப்படவே இல்லை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை