உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெயர் விடுபட்ட வாக்காளர்கள் பதட்டப்பட வேண்டாம்: இபிஎஸ்

பெயர் விடுபட்ட வாக்காளர்கள் பதட்டப்பட வேண்டாம்: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால் வாக்காளர்கள் பதட்டப்பட வேண்டாம்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்து, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த எஸ்ஐஆர் தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது. எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது.வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் படிவம்-6, அல்லது தாங்கள் இடம் மாறி இருந்து அதனால் வாக்கு நீக்கப்பட்டிருப்பின் படிவம்- 8 நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகளுள் ஒன்றோடு சமர்ப்பித்தால், தங்களின் பெயர் நிச்சயமாக இணைக்கப்படும்.இதற்கு உங்களுக்கு நம் அதிமுக ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். முதல்வரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் ஓட்டு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது.அதிமுகவினருக்கு இப்போது தான் நமக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது. ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலோடு, வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான காரணம் இன்றி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்-6 / படிவம்-8 நிரப்பி, BLO-விடம் வழங்கி அவர்களின் வாக்குகள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை.அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anbuselvan
டிச 20, 2025 14:21

எங்க பதட்டம் அதிமுக எப்போது ஒரு ஒருங்கிணைந்த பழைய அதிமுகவாக மாறாமல் போய் மறுபடியும் இந்த திமுக ஆட்சிக்கு வந்து விடுமோ என்பதுதான்.


தமிழன் மணி
டிச 20, 2025 01:21

ஆமா பதட்டப்படாம எல்லோரும் தேர்தல் முடிந்த பிறகு பச்சை துண்டு பழனிச்சாமி என்கிற பத்து தோல்வி பழனிச்சாமியிடம் மனு கொடுத்தால் டெல்லி முதலாளியிடம் கெஞ்சி காலில் விழுந்தாவது உங்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து விடுவார் பயப்பட வேண்டாம்


vivek
டிச 20, 2025 05:19

புது சொம்பு மணி....மொத்த ஆப்பு திமுகவிற்கு மட்டுமே


V K
டிச 19, 2025 21:33

நீங்கள் பதட்டப்பட வேண்டாம்: உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் தீய சக்தி திமுக தூரோக சக்தி அதிமுக


திகழ்ஓவியன்
டிச 19, 2025 21:08

ஆட்சிக்கு எப்படியும் வரப்போவதில்லை ஆகவே கவலை இல்லை


vivek
டிச 20, 2025 05:16

திகழ் அப்போ எதுக்கு உன் கால் மட்டும் நடுங்குது


spr
டிச 19, 2025 20:47

"வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள உங்களுக்கு நம் அதிமுக ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்." ஒரு நல்ல அரசியல் தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும். பாஜக தலைமை கூட இப்படியொரு அறிக்கை வெளியிடவில்லை இவர்தான் உண்மையான மக்கள் நலம் குறித்த அக்கறையுள்ளவர் பாராட்டப்பட வேண்டும் இது போல ஒவ்வொரு கட்சியும் முயற்சி எடுத்தால் வாக்காளர் பட்டியல் முறையாக சீர் செய்யப்படும்


Muthuraman
டிச 19, 2025 20:46

தி மு க விற்கு சரியான அடி தான். இந்த முறை தில்லு முள்ளு செய்து வெற்றி பெற முடியாது..தி மு க வின் இறந்தவர்கள் வோட்டு கிடைக்காது. மரண அடி தான்.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 19, 2025 21:51

மரண அடி தான்.


முருகன்
டிச 19, 2025 20:00

இவர் கட்சி ஆட்கள் பலர் பெயர் நீக்கப்பட்டு இருக்கும் அது கூட தெரியாமல் அவசர அறிக்கை விடுவது எதற்கு ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை