வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஷேக் தாவுத் அவர்களின் இந்த பேச்சை மத்திய அரசு, சொலிசிட்டர் ஜெனெரல் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு யாராவது அனுப்ப வேண்டும்.
மதுரை: ''காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினரிடம் பல கோடி ரூபாய் வக்ப் சொத்துகள் இருப்பதாலும், அதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் பறிபோய் விடும் என்ற அச்சத்திலும் வக்ப் திருத்த சட்டத்தை எதிர்க்கின்றனர்'' என தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் ஷேக் தாவூத் கூறினார். அவர் நேற்று அளித்த பேட்டி:
வக்ப் வாரிய திருத்தச் சட்டம், யாருக்கும் எதிரானது அல்ல. அதனால், அதை முழு மனதோடு வரவேற்கிறோம். 20 லட்சம் ஏக்கர்
'சிவன் சொத்து குல நாசம்' என்பர். அதுபோல், இறைவன் பெயரில் எழுதப்பட்ட ரூ. 9 லட்சம் கோடி மதிப்பிலான வக்ப் சொத்துகளை மீட்டெடுக்க, எங்கள் கட்சியின் 'உம்மத்துக்கான வக்ப்' இயக்கம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வக்ப் சொத்துகள் குறித்து முறையான கணக்கு எதுவும் இல்லை. 2013ல் காங்கிரஸ் கூட்டணி அரசு, வக்ப் திருத்த மசோதா தாக்கல் செய்தபின், 20 லட்சம் ஏக்கருக்கு மேல் வக்ப் சொத்து சேர்த்துள்ளது.நீட், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., சட்டங்களைப் போன்று வக்ப் திருத்த சட்டமும் நல்லது. முஸ்லிம்களில் 'பக்கிர்' என்ற பிரிவில் ஏழை மக்கள் உள்ளனர். மத்திய அரசின் தகவல்படி, இந்தியாவில் வக்ப் சொத்து ரூ.9 லட்சம் கோடி. அதில், 10 சதவீதம் அளவுக்கு ஆண்டு வருவாய் வந்தால்கூட, ரூ. 90 ஆயிரம் கோடி வரவேண்டும். அதை வைத்துப் பார்க்கும்போது, 20--25 சதவீதம் உள்ள முஸ்லிம்கள் மில்லினியர்களாக இருந்திருக்க வேண்டும். ஆக, வக்ப் சொத்துக்களால் கிடைக்கும் வருமானம், முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதானே அர்த்தம். சட்ட நடவடிக்கை
ஏராளமான வக்ப் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. காங்கிரசும், கூட்டணி கட்சியினரும்தான், வக்ப் சொத்துக்களை வைத்துள்ளனர். வக்ப் சொத்துக்களை வைத்து முறைகேடாக ஆதாயம் தேடுவோரிடம் இருந்து, அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஷேக் தாவுத் அவர்களின் இந்த பேச்சை மத்திய அரசு, சொலிசிட்டர் ஜெனெரல் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு யாராவது அனுப்ப வேண்டும்.