உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அ.தி.மு.க., குறித்து கலெக்டர் பொய் அறிக்கை

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அ.தி.மு.க., குறித்து கலெக்டர் பொய் அறிக்கை

மதுரை : ''மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., பங்கேற்காத நிலையில், 'அ.தி.மு.க., பிரதிநிதி கையெழுத்திடவில்லை' என கலெக்டர் சங்கீதா பொய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மறுப்பு தெரிவிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்' என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,வும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா, நகர் செயலாளர் செல்லுார் ராஜூ எச்சரித்தனர்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இதுவரை நடந்தது குறித்து நேற்றுமுன்தினம் கலெக்டர் சங்கீதா அறிக்கை வெளியிட்டார். அதில், ஜன.30 ல் திருமங்கலம் ஆர்.டிஓ., தலைமையில் நடந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் 'திருப்பரங்குன்றத்தில் ஏற்கனவே உள்ள வழிபாடு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவோம். இதில் வெளிநபர் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்' என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். இதில் அ.தி.மு.க., பிரதிநிதி கையெழுத்திடவில்லை' என குறிப்பிட்டிருந்தார்.இதை அறிந்த ராஜன்செல்லப்பா உடனடியாக கலெக்டர் சங்கீதாவை தொடர்பு கொண்டு 'நாங்கள் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் 'கையெழுத்திடவில்லை' என எப்படி தெரிவித்தீர்கள். மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடுங்கள்' எனக்கேட்க 'விசாரிக்கிறேன்' என கலெக்டர் கூறினார். ஆனால் மறுப்பு அறிக்கை வெளியிடாத நிலையில் நேற்று காலை ராஜன்செல்லப்பா, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.,வினர் கலெக்டரை சந்தித்து மறுப்பு தெரிவிக்ககோரி மனு அளித்தனர். எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன், வழக்கறிஞர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வழக்கு தொடருவோம்

பின்னர் நிருபர்களிடம் ராஜன் சொல்லப்பா கூறியதாவது:அ.தி.மு.க., ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. ஆளுங்கட்சி துாண்டுதலால் தவறான தகவலை கலெக்டர் தந்துள்ளார். அதை திரும்ப பெற வேண்டும். கலெக்டரின் அறிக்கையை செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் உளவுத்துறை சேர்ந்து வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. கலெக்டர் மறுப்பு தெரிவிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.,வான என்னை அழைக்கவில்லை.நான் மலை விவகாரத்தில் ஒதுங்கி இருப்பதாக கூறுகிறார்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 3 ஆண்டுகளில் இப்பிரச்னை எழும்போதெல்லாம் உள்ளூர் மக்களுடன் இணைந்து தீர்வு கண்டேன். தற்போது சிலரின் துாண்டுதலால் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அதன் உத்தரவை பொறுத்தே அ.தி.மு.க., நிலைப்பாடு இருக்கும். இவ்வாறு கூறினார்.

கலெக்டர் பலிகடா

செல்லுார் ராஜூ கூறியதாவது: தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக தி.மு.க., அரசு செயல்படுகிறது. நிர்வாக ரீதியாக அரசும், மாவட்ட நிர்வாகமும் தோல்வி அடைந்து விட்டது.அ.தி.மு.க., பிரதிநிதி கையெழுத்து விவகாரம் குறித்து கலெக்டரிடம் கேட்டபோது 'ஆர்.டி.ஓ.,' தெரிவித்ததாக கூறினார். ஆர்.டி.ஓ.,விடம் கேட்டால் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி செயலாளர் கூறியதாக தெரிவிக்கிறார். நவாஸ்கனி எம்.பி., திருப்பரங்குன்றத்திற்கு வந்ததால்தான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமலும், எதிலும் கவனம் செலுத்தாமலும் சப்பை கட்டு கட்டுகிறது. இப்பிரச்னையில் கலெக்டரை பலிகடாவாக்கி உள்ளனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankar
பிப் 08, 2025 07:08

நவாஸ்கனியை கைது செய்யுங்கள்


ram
பிப் 07, 2025 15:31

அது எப்படி, ஒரு குறிப்பிட்ட மதத்து ஆட்கள் ஆட்டை மட்டும் இல்லை மனுஷனையும் வெட்டுவோம் என்று,இன்னொரு ஆளு பிரியாணியை கொண்டு வந்து தின்னும்போது, இந்த வீனா போன எடப்பாடி கட்சி வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது எங்கள் கையெழுத்து இல்லை என்று கூப்பாடு போடுகிறார்கள். மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் வரும் தேர்தலில் எடப்பாடி கட்சி கரைந்து போக போகிறது. ஆளாளுக்கு முஸ்லீம் வோட்டுக்கு அலைகிரிகளே, அவனுக ஜமாத் கையை காண்பிக்கும் திருட்டு திமுகாவுக்குத்தான் வோட்டு போடுவாங்க. எதற்கு இந்த எடபடிக்கு இந்த வேலை, அம்மா இருக்கும்போது திருட்டு திமுகவை பிடிக்காத நடுநிலை ஹிந்துக்கள் aiadmkuku வோட்டு போடுவாங்க, இவனுக ஹிந்து மக்களுக்கு செய்யும் துரோகம் பிஜேபி அல்லது நாம் தமிழர் கட்சிக்கு இந்த தடவை வோட்டு போடா போகிறார்கள். ஏற்கனவேய முடிந்த தேர்தலில் இரண்டாம் இடம், இப்போது ???? புரட்சி தலைவர், அம்மா வளர்த்த கட்சியை எடப்பாடி ஒன்றும் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார். இவர் ஒருவேளை சுடாலின் பீ டீம் pola.


Mahendran Puru
பிப் 07, 2025 12:09

அந்த சங்கிகளை தமிழகத்தில் வளர விட்டதே அதிமுகதான். இதில் கூட்டத்திற்கு போகாமல் புறக்கணித்து விட்டு கதை வேறு.


ram
பிப் 07, 2025 15:34

எடப்பாடி கட்சி மூலம் வளரவில்லை, திருட்டு திமுகவின் ஹிந்து விரோதத்தால், கண்டிப்பாக பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி வாகை சூடும் 200 ஒப்பிஎய்


jayvee
பிப் 07, 2025 10:42

எங்கு இஸ்லாமிய வாக்குகள் வராமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில் எடப்பாடி பயந்தசாமி இப்படி நாடகம் போடுகிறார் .. உண்மையில் தீயமுக வின் விளையாட்டால் பயந்தசாமி மட்டுமல்ல சைமனும் ஒரு பொய் ஆமை தான் என்பது நிரூபணமாகிவுள்ளது .. என் பாட்டன் முருகன் என்று சொல்லி முருகனை யேசுவைபோல வரைந்தபோது சைமனை அடியாளம்காணதவறிய ஆமை குஞ்சங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 07, 2025 10:05

கலெக்டர் அறிக்கை என்பதே கழக அறிக்கை. அப்படி இருக்க அதில் பொய்யும் புரட்டும் இல்லாமலா இருக்கும். பாவம் பலி கடா ஆகிவிட்டார்.


Deepa Vathy
பிப் 07, 2025 10:16

அதிமுகவில் தேவையில்லாத பழியை போடாதீர்கள் நானும் அதிமுக தான் நான் ஒரே வரியில் சொல்லி விட்டேன்


Deepa Vathy
பிப் 07, 2025 10:21

நீங்கள் தவறுதலாக சொல்கிறீர்கள் அதிமுகவை பற்றி தவறுதலாக சொல்லாதீர்கள் ஜாதி மத அப்பாற்பட்டது எல்லோரும் ஒரே குலம் ஒருவனே தேவன் என்பது அதிமுகவின் கொள்கை பொய்யான தகவல்களை வெளியிடாதீர்கள் நானும் அதிமுகவில் தான் இருக்கிறேன் முன்னாள் தலைவர் நான் பிஜேபியில் இருந்து இப்போது அதிமுகவில் வந்து சேர்ந்து உள்ளேன் அதிமுகவை தவறுதலாக பேசாதீர்கள் அம்மா கட்சி எடப்பாடி யார் வழி நடத்தும் கட்சி தவறுதலாக பேசாதீர்கள்


Murugesan
பிப் 07, 2025 07:35

கேவலமான தமிழகம்


நிக்கோல்தாம்சன்
பிப் 07, 2025 07:21

வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருப்பாரு, ஏதாவது தனியார் பெக்டரி திறக்க போயிருப்பாரா ? போகையில் அங்கே தனது நினைவாக படங்களை ஒட்டிவைத்திருப்பாரா ?


raja
பிப் 07, 2025 06:32

ரூம் எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்... அது போல நம்ப திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற மன்னன் இடி அமீன் இருட்டு கடை அல்வா சாப்பிடுகிறார் ..


முக்கிய வீடியோ