உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளாவிலிருந்து மீண்டும் தமிழகம் வந்த கழிவுகள்; 5 வாகனங்கள் பறிமுதல்; 9 பேர் கைது!

கேரளாவிலிருந்து மீண்டும் தமிழகம் வந்த கழிவுகள்; 5 வாகனங்கள் பறிமுதல்; 9 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இறைச்சிக் கழிவுகள், உணவுக் கழிவுகளை ஏற்றி வந்த 5 வாகனங்கள் தனிப்படை பறிமுதல் செய்தது. இது தொடர்பாக 9 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து, ஆபத்தான மருத்துவக் கழிவுகள், திருநெல்வேலி மாவட்டம் கொடகநல்லுார், பழவூர் கிராமங்களில் உள்ள பட்டா நிலங்கள், நீர்நிலைகளில் கொட்டப்பட்டுள்ளன.கடந்த சில மாதங்களாக இதுபோல குப்பைகள் கொட்டப்படுவதாகவும், சில நாட்களில் அதை எரித்து விடுவதாகவும், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2wj57no0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. பின்னர் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு படி, கேரளா அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து கழிவுகளை லாரிகளில் ஏற்றி சென்றனர். இதற்கிடையில், 'கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க தனிப்படை அமைத்து, தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. அதன் படி தனிப்படை எல்லையில் மருத்துவ கழிவுகள் உட்பட குப்பைகள் ஏதும் கொட்டப்படுகிறதா? என்பதை கண்காணித்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.,09) கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இறைச்சிக் கழிவுகள், உணவுக் கழிவுகளை ஏற்றி வந்த 5 வாகனங்கள் தனிப்படை பறிமுதல் செய்தது. இது தொடர்பாக 9 பேரைக் கைது செய்து, தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Sundaresan S
ஜன 10, 2025 16:19

தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழகத்தின் எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதை தடுக்க காவல்துறை கட்டுப்பாடுகளை வகுக்க கேரள அரசுக்கு ஏன் உத்திரவிடவில்லை? தமிழக அரசும் ஷ்டஈட்டு வழக்கு போடாமல் மௌனமிப்பது ஏன்?


R.Natatarajan
ஜன 10, 2025 10:55

நோ bail


krishnan
ஜன 09, 2025 22:11

confiscate the vehicle. cancel driving licence permanantly.


krishnan
ஜன 09, 2025 22:05

ட்ரிவரை தவிர்த்து லாரியை எரித்து விடவும் ..தானாய் சரி ஆகிவிடும்


GS kumar
ஜன 09, 2025 19:48

தமிழக அரசு கேரளாவை பார்த்து பயப்படுதோ .. தொடை நடுங்குதோ, தைரியம் இல்லையா , நம்ம தமிழ்நாட்டை குப்பை கிடங்காக உபயோகிக்கும் கேரளாவை கேள்வி கூட கேட்காதா இந்த அரசு ???


Natarajan Ramanathan
ஜன 09, 2025 19:33

கழிவுகளோடு வரும் ஒரு பத்து லாரிகளை பிடித்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுங்கள். அதன்பிறகு இந்த பிரச்சனையே இருக்காது.


konanki
ஜன 09, 2025 19:26

தினமும் ஓரு லெட்டர் - மணி ஆர்டர் படிவத்தில் ஆங்கிலம் இல்லை, ரயில் வே பளாட்பாஃர்ம் ல் தண்ணீர் இல்லை - என்று மத்திய அரசிற்கு எழுதும் சு. வெங்கடேசன் மதுரை எம்.பி இந்த விஷயத்தில் கள்ள மௌனம் ஏன்?? கழிவுகளை கொட்டுவது கம்யூனிஸ்ட் அரசு என்பதால் தமிழர்கள் ஓட்டு வாங்கி தமிழர்களுக்கு துரோகம் செய்யும் எம் பி யை தேர்ந்தெடுத்த மதுரை மக்கள் தங்களை நொந்து கொள்ள வேண்டும்


என்றும் இந்தியன்
ஜன 09, 2025 17:56

கழிவை தேடி கழிவு வருகின்றது கழிவுக்கு ஒட்டு கொடுத்த கழிவுகளுக்கு


என்றும் இந்தியன்
ஜன 09, 2025 17:51

திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இருக்கும் வரை இது தொடரும் ஏனெனில் வாழ்வு Understanding உள்ளது லஞ்ச லாவண்ய ஊழல் கொள்ளை செய்பவர்களுடன் என்று அர்த்தம்


கத்தரிக்காய் வியாபாரி
ஜன 09, 2025 17:18

கேரளாவை சொரணை உள்ள மானமுள்ள சேட்டன் ஆழ்கிறான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை