உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுகளை சேகரிக்கும் நிறுவனங்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

கழிவுகளை சேகரிக்கும் நிறுவனங்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: கழிவு பொருட்களை சேகரிக்கும், மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள், அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:தமிழகம் முழுதும் தினமும் உருவாகும் திடக் கழிவுகளை மேலாண்மை செய்ய, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ், 'துாய்மை இயக்கம்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த, 'துாய்மை தமிழ்நாடு நிறுவனம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னெடுப்பு

அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த, நிலையான கழிவு மேலாண்மையை கட்டமைப்பதற்கான முயற்சிகளை, துாய்மை தமிழ்நாடு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல்பூர்வமாக கையாளவும், அவற்றை மறுசுழற்சி செய்யவும், ஒரு வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அனைத்து கழிவு பொருட்களையும் சேகரிக்கும், மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை தேர்வு செய்து, அவற்றின் பட்டியல்கள், துாய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட உள்ளன. எனவே தொடர்புடைய தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதிவேற்றம்

இது தொடர்பான ஆவணங்கள், https://thooimaimission.com/partnerships என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தகுதியுடைய நிறுவனங்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, துாய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுதுணையாகவும், சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கழிவுகளை மறுசுழற்சி செய்வதையும், அப்புறப்படுத்துவதையும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை