உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடுப்பணைகள், அணைக்கட்டுகள் கட்ட ரூ.1,321 கோடி கேட்கிறது நீர்வளத்துறை

தடுப்பணைகள், அணைக்கட்டுகள் கட்ட ரூ.1,321 கோடி கேட்கிறது நீர்வளத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சட்டசபையில் அறிவிக்கப் பட்ட 254 திட்டங்களை செயல்படுத்த, அரசிடம் 1,321 கோடி ரூபாயை நீர்வளத்துறை கேட்டுள்ளது. 'நீர்வளத்தை பாதுகாத்து மேம்படுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாடு திட்டம், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீர்வளத்துறை வாயிலாக, 317 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதித் துறையிடம் வழங்கப்பட்டது. நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் தலைமையிலான உயர்மட்டக்குழு , இத்திட்டங்களை ஆய்வு செய்தது. அதில், 254 திட்டப் பணிகளை மேற்கொள்ள, 1,321 கோடி ரூபாய் வழங்க, நிர்வாக ஒப்புதல் கிடைத்து உள்ளது. அதன்படி, கடலுார் பண்ருட்டியில் கெடிலம் ஆறு, பெண்ணையாறு, தர்மபுரி பென்னாகரத்தில் நாகவதி ஆறு, திருப்பத்துார் ஆம்பூரில் பாலாறு, திருச்சி மண்ணச்சநல்லுார் சண்முகா நதி, தஞ்சாவூர் பேராவூரணி பொன்னைகுத்தியாறு உள்ளிட்ட 15 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. திருப்பத்துார், துாத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அணைக்கட்டுகள் கட்டப்பட உள்ளன. தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிவகங்கை, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் நீர்வளத்தை காக்க, 'ரெகுலேட்டர்'கள் கட்டப்பட உள்ளன. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த மருதம்பள்ளம் கிராமத்தில் கடல்நீர் ஊடுருவலை தடுக்க, கடைமடையில் ரெகுலேட்டர் கட்டப்பட உள்ளது. அத்துடன் பல இடங்களில், பழைய நீர்வழித்தட கட்டமைப்புகள் புனரமைக்கப்பட உள்ளன. இவை உள்ளிட்ட 254 பணிகளை மேற்கொள்ள, 1,321 கோடி ரூபாய் வழங்கும்படி, நிதித் துறையிடம் நீர்வளத் துறை கேட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S.jayaram
ஆக 09, 2025 07:38

இது அரசின் நடவடிக்கைகள் ஒருபகுதி, நமக்குத்தேவை வேலை ஏன் கட்டவில்லை என்றால் நிதித்துறையிடம் கேட்டுள்ளோம் என்றால் என்ன அர்த்தம். மக்களை ஏமாற்றும் செயல் அல்லது காலம் கடத்தும் செயல், இரண்டும் ஒரே அரசின் கீழ்தானே செயல்படுகிறது. எப்போது எதைக் கேட்டாலும் மத்திய அரசு நிதி தரவில்லை என்பீர்கள், இப்போ உங்கள் அரசே பணம் தராத நிலையில் என்ன செய்வது. அப்போ நிர்வாகம் செயல் இழந்து விட்டது என்று கூறலாமா?


venugopal s
ஆக 08, 2025 15:00

செய்யாவிட்டால் செய்யவில்லை செய்யவில்லை என்று ஒப்பாரி வைக்க வேண்டியது. செய்தால் ஊழல் ஊழல் என்று புலம்ப வேண்டியது, வேறு என்ன தெரியும் இந்த சங்கிகளுக்கு?


K Periasamy
ஆக 08, 2025 22:18

உண்மை. சங்கிகள் மாத்திரம் என்றில்லை. பொதுவாகவே படித்தவர்கள் மத்தியில் தன்னைத்தவிர மற்றவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள், சுயநலவாதிகள், எல்லாமே தப்புத்தப்பாக நடக்கிறது என்ற ஒருவித எதிர்மறை மனநிலை நிலவுகின்றது. எதையும் குதர்க்கமான, எதிர்மறையான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கின்ற நிலை மாறவேண்டும். தவறு இருந்தால் சுட்டிக்காட்டும் அதேவேளை நல்லது நடக்கும்போது பாராட்டவும் வேண்டும்.


Kulandai kannan
ஆக 08, 2025 13:44

ஏ....வ்....


lana
ஆக 08, 2025 13:29

நாலரை வருடம் சிலை வைக்கவும் பெயர் மாற்றம் செய்யவும் மட்டுமே நேரம் இருந்தது. இன்று முதல் வேகமாக சுருட்டி கொண்டு போகும் திட்டங்கள் வரும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 08, 2025 11:42

எரியர வீட்டில் பிடுங்கரதெல்லாம் இலாபம்.


Thravisham
ஆக 08, 2025 08:56

நிதி நிதி இது ஒன்றுதான் திருட்டு த்ரவிஷன்களின் மூல மந்த்ரம்.


Kasimani Baskaran
ஆக 08, 2025 04:06

அடித்துச்செல்லுமளவுக்கு தடுப்பணை கட்டுவதில் திராவிடர்கள் கரிகாலனுக்கே முன்னோடிகள். ஆக இது கள்ளக்கணக்கு எழுத வசதியான தொகை என்பதை அறிக.


Mani . V
ஆக 08, 2025 04:01

ஆமா, ஆமா, தேர்தல் செலவுக்கு ஆகுமோ. இனி பீகார் வாக்காளர்களுக்கும் காசு கொடுக்கணும். அதுக்கு இப்பவே சுருட்டினால்தானே தோதாக இருக்கும்.


சமீபத்திய செய்தி