வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்கள் முடிவெடுக்கவில்லை உதயகுமார். அமித்ஷா
மதுரை: ''அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வெற்றி பெற செய்ய மக்கள் முடிவெடுத்துள்ளனர். எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்த நினைத்தாலும் அ.தி.மு.க., தொண்டர்கள் தெளிவாக உள்ளனர்,'' என, மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.ஜூன் 8 ல் மதுரையில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்,'' என்றார். பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்பட்சத்தில் அதில் பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம்பெறுமா என கேள்வி எழுந்தது. இதுகுறித்து இருகட்சியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ''நாங்கள் தெளிவாகதான் இருக்கிறோம்,'' என, உதயகுமார் கூறினார்.இதுதொடர்பாக நேற்று அவர் கூறியதாவது: அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் அணுகுண்டு விழுந்ததைப் போல தி.மு.க., ஆட்சி அமைந்துள்ளது. பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க., ஆட்சியில் இதுவரை 7000 கொலைகள் நடந்துள்ளன. 2021-- 2026ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி காலம் மிக மோசமான ஆட்சி காலம் என்பது மக்களின் நீங்கா நினைவாக அமையும்.ஸ்டாலின் காலம் வேதனையின் காலம் என மக்களின் மனதில் என்றும் நினைவில் இருக்கும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. அண்ணா பல்கலை மாணவி முதல் அரக்கோணம் பெண் வரை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சட்டசபை தேர்தலில் தி.மு.க., அரசு வீட்டுக்கு சென்று விடும். பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைந்துள்ளது. எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும், எத்தனை திசை மாற்றினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பழனிசாமியும், நாங்களும், தொண்டர்களும் குழப்பமின்றி தெளிவாக உள்ளோம் என்றார்.
மக்கள் முடிவெடுக்கவில்லை உதயகுமார். அமித்ஷா