உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்"- சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

"ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்"- சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்' என முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி சட்டசபையில் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். பா.ம.க., கோரிக்கைக்கு சாதகமாகவே தி.மு.க., அரசும் குரல் கொடுக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mqje0j76&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வெளிநடப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

எய்ம்ஸ் போல் இல்லை

சட்டசபையில் பேசிய பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன், 'கோவையில் நூலகம் அமையும் என பட்ஜெட்டில் அறிவித்ததற்கு நன்றி. இந்த நூலகம் எப்போது, எங்கே அமையும்? இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? பணிகள் எப்போது துவங்கும்?' என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ''இந்த ஆட்சி சொன்னதை செய்யும், சொல்வதைதான் செய்யும். மதுரையில் உலக தரம் வாய்ந்த நூலகம் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறதோ, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறதோ, இன்னும் சில தினங்களில் கருணாநிதி நினைவகம் அமைய இருக்கிறதோ, அதேபோல சொன்னபடி நூலகம் திறக்கப்படும். வானதி சீனிவாசனுக்கு குறிப்பாக சொல்லிக்கொள்வதெனில், மதுரையில் எய்ம்ஸ் அறிவித்ததை போல் அல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் நூலகம் கட்டி முடிக்கப்படும். 2026 ஜனவரி மாதத்தில் இந்த நூலகம் திறக்கப்படும்'' என்று கூறினார்.

பிரதமர் விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு

பிரதமர் மோடி பிப்., 28 ல் துாத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகிறார். துறைமுகத்தில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில்வே துாக்கு பாலத்தை துவக்கி வைக்கிறார். இந்நிலையில் தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் பிப்.,28ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Ramesh Sargam
பிப் 23, 2024 00:58

புரட்சி கவிஞர் பாரதியாருக்கு விழா எடுக்கிறீர்கள். ஆனால் அவர் சொன்ன 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்பதற்கு எதிராக பேசுகிறார்கள். என்னய்யா பித்தலாட்டம் இது...??


sankaranarayanan
பிப் 22, 2024 20:36

அப்போ இவருக்கு சொந்தமான ஓங்கோல் ஆந்திராவில் இருப்பதால் அங்குள்ள ஜாதிவாரி தனக்குத்தானே செல்லும்


C.SRIRAM
பிப் 22, 2024 19:36

எந்த ஜாதிக்கு மக்கள் எண்னிக்கை அதிகமோ அந்த ஜாதி மக்களிடமிருந்து விகிதாசாரப்படி அதிக வரி வசூல் செய்ய வேண்டும் .


Nachiar
பிப் 22, 2024 19:06

அரசியல் ஞானி ராகுல் காந்தியின் ஊதுகுழலாக தெரிகிறது.


பேசும் தமிழன்
பிப் 22, 2024 19:01

நீங்கள் ஏன் செய்ய கூடாது... பீகார் மாநிலத்தில்... அந்த மாநில அரசு தானே கணக்கெடுப்பு நடத்தியது... இப்போது ஜார்கண்ட் அரசு தான் கணக்கெடுப்பு நடத்த உள்ளது.... ஆனால் நீங்கள் ஏன் கணக்கெடுப்பு நடத்த கூடாது ???


Krismoo
பிப் 22, 2024 18:26

நாங்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் அல்ல.ப்ராமணீயத்திற்கு தான் எதிரானவர்கள் என்பதுபோல தான் இவர் பேசுவார். அப்போ பா ம கவை பேச அனுமதி மறுத்தது ஏன்? நீ சொல்லுவதை எல்லாம் மற்றவர்கள் கேட்கணும். மற்றவர்கள் சொல்லுவதை நீ கேட்கமாட்டாய் அப்படித்தானே?


Easwar Kamal
பிப் 22, 2024 17:56

ஜாதி விஷயத்தில் ஸ்டாலின் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஜாதி இல்லை மொழி இல்லை என்று பேசும் அரசியல் வாதி எவனாவது ஜாதி விட்டு ஜாதி தன குடும்பத்திருகு பண்ணிருக்கானுவலா. வைகோவில் இருந்து விஜயகாந்த் மற்றும் EPS/OPS எல்லாம் இதில் அடக்கம். ஜாதி இல்லை என்று பேசும் பெரியார் தன குடும்பத்தில் இருந்துதான் கல்யாணம் பண்ணி இருக்கானுங்க.


DVRR
பிப் 22, 2024 17:17

அதைத்தானே திருட்டு திராவிடம் செய்து கொண்டிருக்கின்றது இப்போது??அவன் கவுண்டன் அது கோவை ஆகவே அங்கே அவனுக்கு சீட் கொடு இவன் முஸ்லீம் இங்கே இவனுக்கு சீட் கொடு இவன் கிருத்துவன் அவனுக்கு அங்கே சீட் கொடு???இன்னும் என்ன ஜாதிவாரி கணக்கெடுப்பு???அவன் அவன் தான் ஜாதிவாரி சர்டிபிகேட் கொண்டு வந்து அதில் என்ன லாபம் கிடைக்குதோ அதை வாங்கிக்கொள்கின்றார்களே இன்னும் என்ன ஜாதி வாரி கணக்கெடுப்பு???இந்த செர்டிபிகேட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எடுத்தாலே ஜாதி வாரி கணக்கெடுப்பு மிக எளிதாக செய்து விடலாமே


Rajarajan
பிப் 22, 2024 16:24

இதெல்லாம் தேவையே இல்லை. ஏற்கனவே இருக்கும் இடவொதிக்கீட்டு பிரிவினரின் வருமானம், வசதி, சொத்துக்கள் மற்றும் அவரது குடும்பத்தில் யாரேனும் இடவொதுக்கீட்டில் பயன் பெற்றிருந்தால், அவர்களை இடவொதுக்கீட்டிலிருந்து நீக்கினால், அதே ஜாதி பிரிவில் மற்றுவருக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கும். இதைவிடுத்து, சுற்றிவளைப்பது ஏன் ??


விடியல்
பிப் 22, 2024 16:07

உங்களால் முடியும் என்ற நிலை இருக்கும் போது எதற்கு குரல் கொடுக்க வேண்டும்.ஏற்கெனவே பீகார் மாநிலத்தில் நடந்து உள்ளது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி