உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.ஆர்.பாலுவின் அரசியல் வரலாற்றை மக்கள் முன் வைக்க உள்ளோம்: சொல்கிறார் அண்ணாமலை

டி.ஆர்.பாலுவின் அரசியல் வரலாற்றை மக்கள் முன் வைக்க உள்ளோம்: சொல்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டி.ஆர்.பாலு அரசியலுக்கு வந்ததில் இருந்து, அவரது 40 ஆண்டு அரசியல் வரலாற்றை கோர்ட் மூலம் மக்கள் முன் வைக்க உள்ளோம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கடந்த 2023ம் ஆண்டு, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, ''திமுக பைல்ஸ்'' என்ற பெயரில் அக்கட்சி நிர்வாகிகளின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார் பின்னர் தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், அண்ணாமலை பேசியதாக டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பின் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:இன்று மெமோ பைல் செய்து இருக்கிறோம். டிஆர்பாலு என் மீது தொடர்ந்த வழக்கில், நானே நேரடியாக விசாரணை நடத்த போகிறேன். இன்று நீதிபதியிடம் எனக்கு பால். கனகராஜ் உதவி புரிவார் என்று கூறினேன். அடுத்த குறுக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் இந்த வழக்கில் நானே ஆஜர் ஆகி, திமுக பைல்ஸ் இருந்து ஆரம்பித்து, என்னுடைய தரப்பு வாதங்களை முன் வைக்க இருக்கிறோம்.நிச்சயம் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. டி.ஆர்.பாலு அரசியலுக்கு வந்ததில் இருந்து, அவரது 40 ஆண்டு அரசியல் வரலாற்றை கோர்ட் மூலம் மக்கள் முன் வைக்க உள்ளோம். 2023ம் ஆண்டு திமுக பைல்ஸ் வெளியிட்டதன் நோக்கமே, எப்படி தமிழகத்தில் ஊழல் பெருச்சாளிகள் நம்மை ஊறிஞ்சு அண்டி கொண்டு இருக்கிறார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். அதனால் தான் நான் இதுவரை யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடுக்கவில்லை. ஆனால் திமுகவினர் வேறு யாராவது வழக்கு தொடுக்க வேண்டும் என்று காத்து கொண்டிருந்தோம்.கரூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.2 பேரிடம் பொய் சொல்லி கையெழுத்து பெற்று கரூர் சம்பவம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டதா? என்பதை தாமாக சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

ரொம்ப மகிழ்ச்சி

இது குறித்து டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: வழக்கு மீண்டும் நவம்பர் 11ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. அன்றைக்கு அண்ணாமலை வந்து குறுக்கு விசாரணை நடத்தப்போவதாக சொல்லி இருக்கிறார்கள். நான் விசாரணை நடத்திய அளவிற்கு அவர் செய்தால் ரொம்ப மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

baala
அக் 14, 2025 11:08

அரசியல் ...களில் வரலாறு என்ன பெரிய தியாக வரலாறா? குப்பைகள்.


Rajasekar Jayaraman
அக் 14, 2025 09:49

முதல் விக்கெட் அணில் இரண்டாவது விக்கெட் ஊழல் பெருச்சாளி.


S.V.Srinivasan
அக் 14, 2025 07:56

சொல்லாதீங்க. செய்ங்க அண்ணாமலைஜி.


Kasimani Baskaran
அக் 14, 2025 04:09

திராவிடத்துக்கு பின்னால் ஒளிந்திருக்கும் கேடிகள் ஒவ்வொன்றாக தோலுரிக்கப்படுவது பேரானந்தம்.


மணிமுருகன்
அக் 14, 2025 00:08

திரைகதைவசனம் நாடகம் போடாமல் வழக்கை போட்ட நபர் நீதிமன்றம் வரட்டும் பிறகு ஒப்பாரி வைக்கட்டும்


முதல் தமிழன்
அக் 13, 2025 21:15

அண்ணாமலைஜிக்கு நேரம் சரியில்லை. இந்த கேஸ் நிக்காது. உக்காந்துக்கும். பிறகு முகத்தை எங்கு கொண்டு போய் வைத்து கொள்வார்? அவர்கள் எப்படி பணக்காரராக உயர்ந்தார்கள் என்பதல்ல இந்த கேஸ். கொள்ளை அடித்து சாம்பாதித்தார்கள் என்பதை இவர் நிரூபிக்க முடியாது. டாக்குமெண்ட்ஸ் முக்கியம்.


RAMESH
அக் 13, 2025 20:27

முதல் கிடா வெட்டு டிப்பர் லாரி டிரைவர்க்கு......அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்.....


Vijay D Ratnam
அக் 13, 2025 20:23

அண்ணாமலை அவர்களே, ஓவர் கான்ஃபிடண்ஸ் நல்லதல்ல. நீங்களே வாதாடாமல் நல்ல வழக்கறிஞரை வைத்துக்கொள்ளுங்கள். மாதம் முப்பது ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர் டி.ஆர்.பாலு. தனியார் பஸ்ஸில் கண்டக்டராக இருந்தவர். ஏ.வ.வேலு. கல்வி செலவு எம்ஜிஆரால் ஏற்கப்பட்டு வாழ்க்கையை தொடங்கியவர் துரை முருகன் . இவர்கள் இன்று ஆசிய கோடீஸ்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களுக்காக வாதாட டெல்லியில் இருந்து மணிக்கு கோடிகளில் ஃபீஸ் வாங்கும் இந்தியாவின் காஸ்டலி வழக்கறிஞர்கள் சார்ட்டட் ஃபிளைட்டில் வருவார்கள். ஜாக்கிரதையாக இருக்கோணும். தூக்கி சாப்டுட்டு போயிடுவானுங்க.


சிட்டுக்குருவி
அக் 13, 2025 20:06

அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள் .கடந்த 40 ஆண்டுகளில் திராவிடர்கள் ஆட்சியில் தமிழகத்தின் வளங்களையெல்லாம் கொள்ளையடித்து இப்போது வறண்ட தமிழகமாக உள்ளது .மக்கள் எல்லாம் 40 வருடங்களுக்கு முன்பிருந்த வாழ்வாதாரங்களையெல்லாம் இழந்து வறுமையில் காணப்படுகின்றார்கள் .இதையேயெல்லாம் ஆராய்ந்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்து இழைந்த வழங்களையெல்லாம் மீட்டெடுக்க முயலவேண்டும் .செய்வீர்களா ?அதற்க்கு மக்களிடம் உங்களுக்கு ஆதரவும் ,ஆதாரமும் பெருகும் என்பதில் சந்தேகமில்லை .


சேகர்
அக் 13, 2025 19:17

விவரமான பாலு வழக்கை வாபஸ் பெறுவார் என நினைக்கிறேன்


சமீபத்திய செய்தி