உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காணாமல் போன தமிழ்நாடு; நாங்கள் காரணமல்ல: சிவசங்கர்

காணாமல் போன தமிழ்நாடு; நாங்கள் காரணமல்ல: சிவசங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரியலுார்: ''அரசு பஸ்களில், 'தமிழ்நாடு' என்று எழுதி இருந்ததை, அ.தி.மு.க., ஆட்சியில்தான் நீக்கினர்,'' என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அரியலுாரில் அவர் அளித்த பேட்டி: அரசு பஸ்களில், 'தமிழ்நாடு' என்று எழுதி இருந்ததை நீக்கியதாக சர்ச்சை ஏற்படுத்துகின்றனர். கடந்த 2012ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது, அவர் துவக்கி வைத்த அரசு பஸ்களில், அரசு போக்குவரத்து கழகம் என்றே இருந்தது. அந்த சமயத்தில்தான், தமிழ்நாடு என்று எழுதுவதை நிறுத்தி உள்ளனர். அதன்பின், அந்த நடைமுறையே தொடர்கிறது. ஆனால், 13 ஆண்டுகளுக்கு பின், புதிய செய்தி போல், தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட இடங்களுக்கு, தற்போது, அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய அண்ணாதுரையின் பிள்ளைகள் நாங்கள். இதுகுறித்து, எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம். கடந்த ஆட்சியில் செயல்படுத்திய ஒரு நடைமுறையை மாற்ற வேண்டாம் என்பதற்காக, அப்படியே விட்டு விட்டோம். அதனால், தி.மு.க., ஆட்சியில் தமிழ்நாட்டை காணாமல் செய்துவிட்டனர் என வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும். கடந்த காலங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் குறித்த தகவல்களை எடுத்து, இஷ்டத்துக்கு செய்தியாக்குகின்றனர். இதை தவறு என அரசின் தகவல் சரிபார்க்கும் குழு கண்டறிந்து சொல்லியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Mecca Shivan
ஜூன் 11, 2025 06:40

அதெப்படி பொய் சொல்லருமுன்னு தெரியாம சொல்லுறாரா இல்ல தெரிஞ்சுதான் சொல்லுறாரா ? திராவிட மாடல் ஆட்சியில் ஒரே பொய் புரட்டு ஊழல்தான் .. இந்த டொங்கு கொசுக்களை முதலில் ஒழிக்கவேண்டும்


VELRAJ
ஜூன் 08, 2025 11:28

4 வருசம் ஆச்சி உனக்கு என்ன வேலை செய்ய வேண்டியது தான.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 05, 2025 13:50

பல பேருந்துகள் தரமில்லாமல் இருப்பதால் தமிழ் நாடு என்று இருந்தால் ISO தர சான்றிதழ் தர முடியாது என்று கூறியிருப்பார்கள். அதனால் பெயர் நீக்கி இருக்கலாம்.


nizam
ஜூன் 05, 2025 12:56

யோவ் அம்மா உணவகம் இருக்குது காலையில் சுட சுட மேஜைக்கு டிபன் உனக்கு எங்கே தெரியப் போகுது


gopalasamy N
ஜூன் 05, 2025 11:18

பொய்யான தகவஇல் தி மு க ஆட்சியில் புது பேருந்துகள் பெயருடன் விடப்பட்டது தார் பொது அளிக்ஸ்பாட்டு உள்ளது


M S RAGHUNATHAN
ஜூன் 05, 2025 10:47

இனி அரசு போக்குவரத்து கழகங்களை "திராவிடர் அரசுபோக்குவரத்து கழகம்" அல்லது முத்தமிழ் விற்ற கருணா உடைசல் போக்குவரத்து கழகம் என்று பெயர் சூட்டலாம்.


ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 10:29

சென்ற ஆட்சில அமலான தாலிக்குத் தங்கம் அம்மா உணவகம்ன்னு எவ்வளவோ திட்டங்களை கைவிட்டுவிட்டீர்கள். தெலுங்கர்கள் ஆட்சியில் தமிழ்நாடு என்ற பெயர் தேவையில்லை என்று விட்டுவிட்டேன் என்றும் உண்மை lயைக் கூறலாமே


vbs manian
ஜூன் 05, 2025 10:19

ஏன் நீங்கள் கண்டுபிடித்து மறுபடி கொண்டுவரலாம்.


Barakat Ali
ஜூன் 05, 2025 09:19

டீம்காவை மடக்க முடியலையேன்னு வேதனையான்னு கேக்குற கொத்தடிமைகள் இதை நேத்து படிக்கல போல ....


Barakat Ali
ஜூன் 05, 2025 14:36

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழ்நாடு என்ற வார்த்தையை நீக்கும் போது, அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் பெரிதாகவும், பயணியர் எளிதாக பார்க்கக் கூடியதாகவும் உள்ளது. எனினும், அனைத்து பஸ்களிலும், அரசு போக்குவரத்து கழகம் என்பதில் மாற்றம் செய்யவில்லை. இந்த மாற்றத்தில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றனர்.


sankaranarayanan
ஜூன் 05, 2025 08:28

நீங்கள் எல்லா பெயற்களையும் எதிர்க்கலாம் மாற்றலாம் புது பெயர் வைக்கலாம் ஆனால் திராவிட மாடல் அரசு முதல்வரின் பெயரை மட்டும் ஆங்கிலத்திலேயே வைத்துக்கொண்டிருக்கிறது ஏன் அதற்கும் விடிமோட்சம் கிடையாதா ஊர் ஊராகா முதல்வர் சென்று பெட்ர பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைப்பவர் தனது பெயரை இன்னம் தமிழில் மாற்றி வைக்கவில்லையே யாரிடம் போய் அழுவது கதறுவது சொல்வது மக்களே நீங்கள்தான் கூறவேண்டும்


Mahendran Puru
ஜூன் 05, 2025 10:09

சங்கர நாராயணன் என்ற சமஸ்கிருதப் பெயர் கொண்டு தமிழ் நாட்டில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டல் சிரிப்பு வராதா வராதா? அது போலவே உங்கள் கேள்வியும் கிச்சு கிச்சு மூட்டுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை