மேலும் செய்திகள்
ரூபாய் நோட்டுகளை கொளுத்துவரா?
02-Mar-2025
சென்னை:''நடிகர் விஜய் அரசியலில் தவழும் குழந்தை. நாங்கள் பி.டி.உஷா,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 'தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை' எனப் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு தி.மு.க., ஆட்சியை பெண்கள் துாக்கி பிடிப்பர். முதல்வர் எங்கு போனாலும், வரவேற்கும் கூட்டத்தில், 80 சதவீதம் பெண்கள் வருகின்றனர். சக்திமயமான இந்த ஆட்சியை, எந்த சக்தியாலும் அகற்ற முடியாது. அரசியலில் விஜய் தவழும் குழந்தை, நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள். பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள். சிறை, போராட்டம், ஆர்பாட்ட களம் உள்ளிட்ட பல விஷயங்கள், அவருக்கு என்னவென்றே தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
02-Mar-2025