உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்களின் கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது; அண்ணாமலை ஆவேசம்

இளைஞர்களின் கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது; அண்ணாமலை ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தி.மு.க., அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கடந்த 2024ம் ஆண்டுக்கான, சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுகளை நடத்தாமல், இளைஞர்களின் ஒரு ஆண்டினை வீணடித்த திமுக அரசைக் கண்டித்தும், 2025ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில், 2024ம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ooorqfm9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டு இருக்கும் காவலர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், வயது வரம்பு 01-07-2025 தேதி அன்று 30 வயது நிரம்பியிருக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தாமல் பல நூறு இளைஞர்களின் வயது வரம்பு ஒரு ஆண்டு தள்ளிப் போயிருக்கிறது. தி.மு.க., அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது. உடனடியாக, காவலர் தேர்வுகளுக்கு, 2024ம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

J.Isaac
ஏப் 05, 2025 11:39

ஆவேசம் வந்தால் ஆபத்து. வேசம் கலையும்


J.Isaac
ஏப் 05, 2025 11:37

ஏற்கனவே படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கோடிக்கணக்கான இளைஞர்கள் இந்தியா முழுவதும் ஆட்டோ, டாக்சி ஓட்டுகிறார்கள். சோமட்டோ, , ஸ்விகி, ஜெப்டோ , போன்றவற்றில் டெலிவரி பையன்களாக பணிபுரிகிறார்கள்


Mediagoons
ஏப் 04, 2025 18:57

பரிதாபமா? ஆவேசமா?


அப்பாவி
ஏப் 04, 2025 16:31

ஒண்ணும்.பரவாயில்லை. தமிழக போலுஸ் துறை பத்தி ஊரே சிரிக்கிதே.


venugopal s
ஏப் 04, 2025 16:11

தவறாக நினைக்க வேண்டாம், அண்ணாமலை தன்னுடைய தமிழக முதல்வர் கனவைப் பற்றித் தான் சொல்கிறார்!


manokaransubbia coimbatore
ஏப் 04, 2025 13:55

எங்கேயா அந்த மதுரை கம்மி வெங்கடேஷ் எங்காவது ஹிந்தி வாசகம் இருந்தால் ஓடோடி வந்து ஊரெல்லாம் பாட்டு பாடி ஒப்பாரி வைக்கும் அந்த ஆள் எங்கே. உண்டியல் குலுக்க போய்ட்டாரா.


RM
ஏப் 04, 2025 13:45

thanks for bringing to notice of govt and common man.


Sreenivas Jeyaraman
ஏப் 04, 2025 13:37

விடியா அரசு குறித்து கண்டனம் செய்வதில் எதுக்கு வேதனை.. தினம் தினம் செய்த வினைக்கு / தவறுக்கு சட்டமன்றத்தில் புதிய புதிய சட்டம் இயற்றி மக்கள் மாக்கல் என நிரூபிக்கும் அரசியல் ஓ.கே. வா? அப்புறம் அரசியல் செய்யாம அவியலா செய்ய முடியும் எங்கேயோ கேட்ட குரல்... காலம் கனிந்து வரும் போது அறியப்படும்..


Sampath Kumar
ஏப் 04, 2025 12:57

பதவியே ஆட்டம் கண்டு கிடக்கு இதில அடுத்தவன் கனவு பறிபோவதைபற்றி கவலை பட்டு ஒரு சுக்கும் ஆக போவதில்லை


Sivasankaran Kannan
ஏப் 04, 2025 13:14

நீங்கள் அந்த இளைஞர்களின் நிலையில் இருந்தால் தெரியும்..


Jagannathan Narayanan
ஏப் 04, 2025 13:21

Super muttu


vivek
ஏப் 04, 2025 13:30

அதை பற்றி கவலை படாதே


Mettai* Tamil
ஏப் 04, 2025 13:39

பி ஜெ பி கட்சியில், ஊழலை அலறவிட்ட அண்ணாமலைக்கு தலைவர் பதவி இல்லைன்னா கவர்னர் பதவி கொடுப்பாங்க , ஆனா உங்களுக்கு 200 தாண்டாது ....


நாஞ்சில் நாடோடி
ஏப் 04, 2025 14:00

நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் பதவியை பற்றி கவலை பட மாட்டார்கள். வீட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் எந்த பதவியையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். மெயின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாராளுமன்ற கட்சித்தலைவர், மகளிர் அணி, எல்லாவற்றையும் அவர்களே வைத்து கொள்வர். அதற்கு சிலர் 200 ரூபாய் வாங்கிக்கொண்டு முட்டு கொடுப்பார்கள். கேட்டால் தமிழன் என்பார்கள்...


Suresh Velan
ஏப் 04, 2025 14:07

பதவி முக்கியமில்லை அண்ணாமலைக்கு. தமிழக மக்கள் தான் முக்கியம். அண்ணாமலை பிஜேபி தொண்டர் ஆனாலும், அவர் மக்களுக்காக கஷ்டப்படுவதை ...


Kjp
ஏப் 04, 2025 14:34

சம்பத்துக்கு என்ன கவலை. இளைஞர்களின் எதிர் காலத்தைப் பற்றி துளி கூட கவலைப்படாமல் அண்ணாமலையை தாக்கி திமுகவுக்கு முட்டு கொடுக்கும் வேலையை மட்டும் செய்கிறார்.


Madras Madra
ஏப் 04, 2025 12:50

இளைஞர்களின் ஒரே தலைவன் அண்ணாமலை மட்டுமே


மூர்க்கன்
ஏப் 04, 2025 13:58

எப்பாடி உங்க ரீலு அறுந்து ரொம்ப நேரமாச்சு.... இன்னுமா வார் ரூம்ல உக்காந்துக்கிட்டு கருத்து கிறுக்கிக்கிட்டு இருகிறீங்க????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை