உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளோம். தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பீஹாரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு வாக்காளர் திருத்தம் பல பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு எதிராகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ராகுல் நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்று தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நாளை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் பயணம் மேற்கொள்ள உள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளோம். வெளிநாடு பயணங்களின் போது தமிழகத்தில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை பார்த்துள்ளேன். தற்போதைய பயணம் பற்றி நாளை விமான நிலையத்தில் பத்திரிகையாளரிடம் விளக்கமாக தெரிவிப்பேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Venugopal s
ஆக 29, 2025 22:22

தமிழகத்தில் 40000 தொழிற்சாலைகள் உள்ளன.இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.இரண்டாவதாக குஜராத்தில் 31000 மற்றும் மஹாராஷ்டிரா 27000 தொழிற்சாலைகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது என்ற உண்மை சங்கிகளுக்கு தெரியாது!


vivek
ஆக 30, 2025 06:20

வீணா போன கோபால்..அனைத்தும் அதிமுக ஆட்சியில் வளர்ந்தவை


ஆரூர் ரங்
ஆக 29, 2025 22:16

அயலக அணி மூலம் பெறப்பட்ட வருமானம் ஈர்த்த முதலீட்டை விட அதிகமாம் .


Raghavan
ஆக 29, 2025 21:49

இங்க தொழில் தொடங்க வருவதாக இருப்பவர்கள் போடுகிற முதலீட்டைப் போல் இரண்டு மடங்கு பக்ஷீஸ் வெட்டவேண்டும். அப்போதுகூட உங்கள் பேபேர்ஸ் ஒரு டேபிளில் இருந்து மறு டேபிளிற்குப்போக நீங்கள் கொடுத்த பணம் சரியாகிவிடும். கவுன்சிலர் வட்டம் சின்ன வட்டம் பெரிய வட்டம் மாவட்டம் பெரிய மாவட்டம் சதுரம் முக்கோணம் என்று பலபேர்கள் காசு எதிர்பார்ப்பார்கள். இருக்கவே இருக்கு மற்ற உள்ளூர் கூட்டணி கட்சிகள் அவர்களையும் சரிகட்டவேண்டும். கடைசியில் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று போக்கவேண்டியதுதான்.


M Ramachandran
ஆக 29, 2025 21:12

விடியல் கம்பானியிலிருந்து உங்களுக்கு மாத சம்பளமா அல்லது 200 ஊபீஸ் நன்கொடை மட்டும் தான.ஆவலுடன் எதிர் பார்கிறோமாம்


Shankar C
ஆக 29, 2025 19:17

ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி...... 4 வருட காலத்தில் 10 லட்சம் கோடி முதலீட்டை தமிழ் நாடு ஈர்த்துள்ளது. முதல்வர் ஸ்டாலின்.....


Kjp
ஆக 29, 2025 18:46

ஆயிரம் ரூபாய் இலவச பஸ் பயணம் இவற்றை கொடுத்தால் எவ்வளவு கஜானாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது சாதாரண அரசியல்வாதிக்கு கூட தெளிவாக தெரியும். கடனுக்கு மேல் கடனை வாங்கி ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு கூட ஓய்வூதிய பலன் கொடுக்க முடியவில்லை . மற்ற மாநில முதல்வர்கள் தெம்பாக இருக்கிறார்கள்.நம் மாநில முதல்வருக்கு மட்டுமே பத்தல பத்தல.


Ganapathy
ஆக 29, 2025 17:39

போதை மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் வெளிந்ட்டிலிருந்து முதலீடு. உடச்சு பேசு.


என்றும் இந்தியன்
ஆக 29, 2025 17:37

மேலே சொன்ன ரூ 10 லட்சம் முதலீடு நிஜம் ஆனால் அதில் எத்தனை நிஜமாகவே முதலீடு செய்யப்பட்டது இன்று வரை இந்த 4 வருடத்தில் அதற்கு பதிலில்லை எங்கும் இன்டர்நெட்டில். இதிலிருந்தே தெரிகின்றது அது ஒரு வெத்து பேப்பர் முதலீடு


நரேந்திர பாரதி
ஆக 29, 2025 17:25

அப்பா...போதும், போதும்...ரீல் அறுந்து போயி ரொம்ப நாளாயிடுச்சி


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 29, 2025 17:22

அது சரி. அந்த 10 லட்சம் கோடி எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். அந்த துபாயிலிருந்து வந்த 4 ஆயிரம் கோடி எங்கே? ஸ்பெயின் நாட்டுல மேயரம்மா பிக்னிக் போயிட்டு வந்த பயன் என்ன? அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டி கொண்டுவந்த முதலீடு எங்கே? முதல்வர் கொண்டுவந்த முதலீடு எங்கே?


theruvasagan
ஆக 29, 2025 17:57

எங்க போச்சு எங்க போச்சுன்னு கேட்டா என்னத்தை சொல்றது. முதலீடுகள் எல்லாம் கூவத்து முதலைகள் வாய்க்குள்ளே போயிடிச்சு. போதுமா.


kumarkv
ஆக 29, 2025 18:12

அதேல்லாம் எடுத்து வெச்சிருக்கோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை