உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தற்கொலை படையாக மாறி வந்தோம்: கார் குண்டு வழக்கில் கைதானவர் வாக்குமூலம்

தற்கொலை படையாக மாறி வந்தோம்: கார் குண்டு வழக்கில் கைதானவர் வாக்குமூலம்

சென்னை: ''கோவையில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தி பலியான ஜமேஷா முபின், எங்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்து, தற்கொலை படையாக மாற்றி வந்தார்' என, கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.கடந்த, 2022 அக்டோபர், 23ல், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கார் குண்டு வெடிப்பு நடத்தி, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார்.

சிறையில் அடைப்பு

இது தொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஜமேஷா முபின் கூட்டாளிகள், 18 பேரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். சமீபத்தில் கைதான கோவையை சேர்ந்த அபுஹனிபா, பவாஸ் ரஹ்மான், சரண் ஆகியோரை, ஆறு நாள் காவலில் எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அபுஹனிபா அளித்துள்ள வாக்குமூலம்:இலங்கையில், 2019ல், ஈஸ்டர் நாளில் சர்ச் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தி, 250க்கும் மேற்பட்டோரை கொன்ற, ஐ.எஸ்., பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் தலைமையில் செயல்பட்டு வந்தோம். ஐ.எஸ்., பயங்கரவாதி இயக்கத்தின், தமிழக பிரிவு நிர்வாகியாக ஜமேஷா முபின் செயல்பட்டார்.

சிறப்பு வகுப்பு

எங்களை சென்னைக்கு அழைத்து வந்து, சஹ்ரான் ஹாசிம் நடத்திய சிறப்பு வகுப்பில் பங்கேற்க செய்தார். ஈஸ்டர் குண்டு வெடிப்பில், சஹ்ரான் ஹாசிம் கொல்லப்பட்ட பின், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் முக்கிய பொறுப்புக்கு வர ஜமேஷா முபின் ஆசைப்பட்டார். அதற்காக, ஹிந்து கோவில்களை தகர்க்க வேண்டும்; ஹிந்து தலைவர்களை கொல்ல வேண்டும். நீதிமன்றம், வெளிநாட்டு துாதரகங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என, பல்வேறு செயல் திட்டங்களை வகுத்திருந்தார். அதற்காக, எங்களை தற்கொலை படைகளாக மாற்றி வந்தார். கேரளா மற்றும் கோவை அரபு கல்லுாரியில், பயங்கரவாதம் குறித்து பயிற்சி அளித்தார். வெடிகுண்டு தயாரிப்பு குறித்தும் சொல்லி கொடுத்தார். இந்தியா முழுதும் முஸ்லிம் ஆட்சியை நிறுவ வேண்டும். அதற்கு உயிரையும் கொடுத்து போராட வேண்டும் என்பது தான், அவர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது. அதற்கான முதல் தாக்குதலாக கோட்டை ஈஸ்வரன் கோவிலை தகர்க்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Krishnamurthy Venkatesan
நவ 11, 2024 14:28

"கேரளா மற்றும் கோவை அரபு கல்லுாரியில், பயங்கரவாதம் குறித்து பயிற்சி அளித்தார்." இந்த வாக்குமூலம் அடிப்படையில் இந்த கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க விடும்.


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2024 05:41

விடியா அரசின் காலத்தில் இந்த நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது , தலைக்கு விக்கு வைத்து வழுக்கையை மறைப்பது போல தான் இருக்கும்


Madras Madra
நவ 11, 2024 13:46

மதம் மாறிய ஹிந்துக்கள் மன நோயாளி ஆகி விடுகிறான்


Suppan
நவ 11, 2024 13:31

அதுதான் சரி. திருட்டு திராவிட விடியல் சொல்லிவிட்டது அது சிலிண்டர் வெடிப்புதான் என்று . அழுத்தம் கொடுத்ததனால் வெடிகுண்டு ன்று இந்த ஜிஹாதி உளறிவிட்டான் . கவலை வேண்டாம். சின்னவர் அல்லது இன்பண்ணாவின் பிறந்தநாளன்று "நல்லஎண்ணை" அடிப்படையில் விடுதலை கிடைக்கும்.


Sridhar
நவ 11, 2024 13:21

இதை வைத்து முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் குற்றப்பரம்பரை என்றும் சாயம் தீட்ட முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த நபர்களின் மன அழுத்தங்கள் வேதனைகளை புரிந்துகொள்ளாத ஒரு வெறுப்பு சமுதாயமாக தமிழகம் உருவாக்கக்கூடாது. அவர்களின் செயல்களை அவர்கள் கோணத்திலிருந்து பார்த்தால் அதன் நியாயங்கள் மக்களுக்கு புலப்படும். தீவிரவாதிகள் முஸ்லிமாக இருந்தாலும் தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்பதை அனைவரும் உணரவேண்டும். இந்தியா முழுவதும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முயற்சிப்பது மதச்சார்பின்மையை நிலைநாட்டத்தான் என்பதை எல்லோரும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். வெடியினால் ஒரு குண்டான அமைதி புரட்சி வெடிக்குமே தவிர வேறெந்த ஆபத்துகளும் நிகழாது.


Rasheel
நவ 11, 2024 12:27

உலகம் எப்படி போன என்ன? நாம அவனிடமே பிரியாணியை வாங்கி தின்னுட்டு கொறட்டை விட்டா சரி இப்படி உள்ளது பல பேர் நடவடிக்கை. வந்தே மாதரம்.


Venkateswaran Rajaram
நவ 11, 2024 12:05

கழக துணைவிகளின் பிறந்த நாளன்று நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் .ஒன்றும் அச்சம் கொள்ளத்தேவையில்லை


Venkateswaran Rajaram
நவ 11, 2024 12:01

கழக துணைவிகளின் பிறந்த நாளன்று நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் .


Anand
நவ 11, 2024 11:18

அதான் வாக்குமூலம் கொடுத்துவிட்டான், பிறகென்ன ஓடவிட்டு என்கவுண்டர் செய்யவேண்டியது தானே, இல்லாவிடில் திருட்டு கூட்டத்தின் தலைவன் எவனாவது பிறந்த நாள் என கூறி விடுதலை செய்யப்படுவர்..


ஆரூர் ரங்
நவ 11, 2024 11:07

தனது குரு இலங்கை சர்ச்களில் குண்டு வைத்ததாக இவன் கூறுகிறான். ஆனாலும் கிறித்தவர்கள் வகாபிகளுடன் கூட்டு சேர்ந்துள்ள திமுகவுக்கு ஆட்சி பிச்சை போட்டது ஏன்? தங்களுக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்.


ஆரூர் ரங்
நவ 11, 2024 11:05

ஈஸ்டர் நாளில் இலங்கையில் குண்டு வைத்து படுகொலை செய்த சஹரான் தனக்கு தீவீரவாத போதனை அளித்தது தமிழக வஹாபி தவ்ஹீத் ஆட்கள்தான் எனக் கூறினான். ஆனாலும் இன்றும் திமுக வஹாபிகளுடன் கூட்டு வைத்துள்ளது ஆபத்தானது.


சமீபத்திய செய்தி