உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர்கல்வியில் உயர்ந்திருக்கிறோம் : முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வியில் உயர்ந்திருக்கிறோம் : முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மொழி அறிவை கல்வி அறிவோடு இணைத்திருப்பதால் உயர்கல்வியில் உயர்ந்திருக்கிறோம். என சென்னையில் நடந்த விழா ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்தொடர்ந்து அவர் கூறியதாவது: தாய்மொழிக்காக தமிழகத்தில் நடந்த போராட்டம் போன்று உலகில் வேறு எங்கும் நடந்திருக்காது. தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.,விடம் அடகுவைத்து விட்டார் ஈ.பி.எஸ்., ஈ.பி.எஸ் துரோகங்களை சிறுபான்மையின மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் ஈ.பி.எஸ். இண்டியா கூட்டணி வெற்றியில் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.பா.ஜ.தொடர்ந்து மாநிலங்களில் இந்தி மொழியை திணித்து வருகிறது.வரும் தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை, தோற்கடிக்க வேண்டும். தன்னுடைய நாற்காலியை காப்பாற்றுவதிலேயே நான்கு ஆண்டுகாலத்தை ஓட்டி விட்டார்.ஈ.பி.எஸ்

உயர்கல்வியில் உயர்ந்திருக்கிறோம்

மொழி அறிவை கல்வி அறிவோடு இணைத்திருப்பதால் உயர்கல்வியில் உயர்ந்திருக்கிறோம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று நான் நிமிர்ந்து நிற்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

Suppan
ஜன 26, 2024 21:23

ஒரு ஒப்புதல் வாக்குமூலம். "நான் ஒன்னும் படிக்கவில்லை.சுயநிதி கல்லூரி என்பதால் பாசாக வேண்டும் என்ற நோக்கத்தில் புத்தகம் பார்த்து எழுதுவது முதல் பேப்பர் மாற்றுவது வரை சாதாரணமாக நடக்கும். சாப்பிடுவோம். விளையாடுவோம். கேளிக்கைகள் என்ன உண்டு அத்தனையும் பார்த்துவிட்டு கோர்ஸ் முடித்துவிட்டு வெளியே வந்து விட்டேன் என்றார். உனது வகுப்பு ஆசிரியர், பேராசிரியர்கள் ஒன்றும் கூறவில்லையா?பாடங்கள் கற்றுத்தரவில்லையா? என்று கேட்டால் பெரும்பாலான ஆசிரியர்கள் அதே கல்லூரியில் படித்து முடித்து 10 ஆயிரம் சம்பளத்திற்கும் பன்னிரண்டாயிரம் சம்பளத்திற்கும் வேலை பார்ப்பதாக கூறினர்." இதுதான் விடியலின் உயர்கல்வியின் லட்சணம்.


DVRR
ஜன 26, 2024 18:46

ஒரு சீட் மனநல மருத்துவ ஆஸ்பத்திரி பார்சல்


Anand
ஜன 26, 2024 18:11

நான் ஏற்கனவே கூறியிருந்தேன், வாழ்க்கையில் ஒரு தடவையாவது, ஒரே ஒரு தடவையாவது உண்மையை சொல்லும் என்று...... ஆனால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது போலிருக்கு.


செல்வம்
ஜன 26, 2024 16:09

ஆனா உனக்கு படிக்கவே தெரில.. ????????????????????


Suppan
ஜன 26, 2024 16:06

கற்றல் திறன் பற்றிய ஆய்வு சொல்கிறது என்ன? தமிழகத்தில் பதினான்கு வயது மாணவன் இரண்டாம் வகுப்புப் பாடத்தைப்படிக்கத் திணறுகிறான். கணக்கோ மனைக்கு, வனக்கு, பிணக்கு ஆமணக்கு. அகல் உழுது பிரயோஜனமில்லை. ஆழ உழவேண்டும் சாரே


mindum vasantham
ஜன 26, 2024 11:41

anna university professor தேர்வுக்கு என்னிடம் 60 லக்ஷம் கேட்கின்றனர் இது தான் தரம்


LUKE JEBARAJ
ஜன 26, 2024 09:43

பொய்யான கருத்து. உயர் கல்வி தரம் தமிழகத்தில் எவ்வளவு மோசமாக உள்ளது என்பது இத்துறையில் பணிபுரியும் திறமை வாய்ந்த ஆசிரியர்களுக்கும் மெத்த படித்தவர்களுக்கும் தெரியும். தமிழகத்தில் உள்ள எழுபது சதவிகித தனியார் பொறியியல் கல்லூரிகள் தி மு க வினரால் நடத்தப்படுகிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். சுமார் பதினைந்து சதவிகித கல்லூரிகள் மட்டுமே தரமுடையதாக உள்ளது. மீதமுள்ள எண்பத்தைந்து சதவிகித கல்லூரிகளில் உள் கட்டமைப்பு மற்றும் தரமான ஆசிரியர்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இவ்வகை கல்லூரிகளில் மிக மிக குறைவான சம்பளத்தில் ஆள் அமர்த்தப்படுவதால் திறமை வாய்ந்த பேராசிரியர்கள் இவ்வகை கல்லூரிகளில் பணிபுரிய விருப்பப்படுவதில்லை. தரம் மற்றும் திறன் வாய்ந்த பேராசிரியர்கள் பிற வட மாநிலங்களில் பணிபுரிகிறார்கள். குறிப்பாக மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நல்ல சம்பளம் கொடுக்கப்படுவதால் பெரும்பான்மையான திறமை வாய்ந்த தமிழக பேராசிரியர்கள் சென்றுவிட்டார்கள். தரம் இல்லாத காரணத்தினால் இவர்கள் மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடிக்கும் நிலை இங்கு உள்ளது. மேலும் இவ்வகை கல்லூரிகள் நாக் மற்றும் தன்னாட்சி தர சான்றிதழ்களை எப்படி வாங்குகிறார்கள் என்பதும் மர்மமாக உள்ளது. இவ்வகை சான்றிதழ் பெற்ற பெரும்பான்மை கல்லூரிகள் தரமற்றவையாகவே உள்ளன என்பது எங்கு படிக்கும் மாணவர்களே சொல்கிறார்கள். ஆராய்ச்சி என்பதும் மிக மிக மோசமாக உள்ளது என்பதும் அனைவருக்கும் தெரியும். மேலும் அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பொறியியல் கல்வி தரம் என்பது தமிழகத்தை விட நன்றாகவே உள்ளது. நானும் முனைவர் பட்டம் பெற்ற ஒரு பொறியியல் கல்லூரி பேராசிரியர் என்ற முறையில் வருத்தத்துடன் இதை எழுதுகிறேன்.


Dharmavaan
ஜன 26, 2024 10:40

எதுவும் தெரியாது தன்னைத்தானே போற்றிக்கொள்ளும்


K.Muthuraj
ஜன 26, 2024 11:28

உண்மையே. எங்கள் மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தவர்கள். அவர்களுக்கு எளிமையான மெல்ல கற்கும் பாடமே வேண்டும் என்று வக்காலத்து வாங்கி பாடத்திட்டம் (Syllabus) தயாரித்து கொடுக்கும் பொழுதே தமிழ் மாணவனின் மண்டை மரமண்டை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் என்று தான் அர்த்தம்.


rajan_subramanian manian
ஜன 26, 2024 09:30

உயர்கல்வியில் சிறைச்சாலையிலிருந்து நடத்தக்கூடிய ஆளுமை எங்கள் கழக அரசின் சாதனை. (அய்யய்யோ சிசோடியாவை நான் மறந்து விட்டேன்)சாதனை சோதனையாகிவிட்டது.


Mani Iyer
ஜன 26, 2024 08:52

என்னது, உயர் கல்வியில் உயர்ந்து இருக்கிறோமா?? யாரு, ஜெயிலுக்கு போகப்போற அமைச்சரை வச்சுக்கிட்டா?? ஒரு மனுஷன் பொய் சொல்லலாம்.. ஆனா ஏக்கர் கணக்குலல்லாம் பொய் சொல்லக்கூடாது.


S.kausalya
ஜன 26, 2024 08:14

குல தொழில் அனைவரும் செய்ய சொன்னா போது, ராஜாஜி யை கேவல படுத்தினார்கள். கை தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கு இல்லை ஒத்துக் கொள் என கவிஞர் பாடினார்.. சாதாரண மக்கள் தான் இப்போது தங்களின் குல thozhilukkum போக முடியாமல், படித்த படிப்பிற்கான வேலையும் கிடைக்காமல் அவதி படுகிறார்கள். இன்பாவிற்கு அந்த கவலை இல்லை. குல தொழில் ஆன மக்களை கொள்ளை அடிக்க தாத்தா, அவரின் அப்பா, இவனின் அப்பா செய்த குல தொழில் செய்தால் போதும்.. இவனை பல்லக்கில் thukki செல்ல, கட்சியின் தொண்டர்களின் வாரிசுகள் எப்போதும் தயாராக உள்ளனர். தொண்டர்களின் குல தொழில் அது தானே .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை