உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க உரிமை உண்டு: அண்ணாமலை கண்டனம்

தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க உரிமை உண்டு: அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு, '' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dqp8tfnz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் தி.மு.க., ஈடுபட்டு வந்தது, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 - 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், கவர்னர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதல்வர் ஸ்டாலின் மறந்து விட்டார் போலும். ராமதாஸ் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதல்வரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதல்வர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Gokul Krishnan
நவ 25, 2024 21:07

திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு பிரச்சினையை திசை திருப்ப சொல்லிய தர வேண்டும் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விவசாயிகளுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் மாதம் தோறும் மின் பயன்பாடு கணக்கிடும் முறை நாலாயிரம் கோடியில் சென்னையில் 95 சதவீதம் மழை வெள்ள பணி நிறைவு என்று அடுக்கி கொண்டே போகலாம்


Ramesh Sargam
நவ 25, 2024 20:48

தரமே இல்லாதவர்களிடம் இருந்து தரக்குறைவு பதில்தான் வரும்.


வால்டர்
நவ 25, 2024 20:23

செய்தில மாம்பழ வாசனை அடிக்குதே. 2026 க்கு இப்பவே அச்சாரமா?


Duruvesan
நவ 25, 2024 20:08

சார் போன வாட்டி அதிமுக தயவுல டெபாசிட் கெடச்சது. இந்த வாட்டி நக்கினு போகும், சும்மா ட்விட்டர் மீடியா னு பீலா உடாம கீழ எறங்கி வேலை செய்யுங்க. எவனாவது ஒரு பிஜேபி காரன் எதுனா மக்கள் பிரச்சனைக்கு போராட்டம் பண்ணி ஜெயிலுக்கு போனான்னு காட்டுங்க பாப்போம், கோயில் சொத்தை கொள்ளை அடிச்சா கூட பிஜேபி மூடினு இருக்குது, கட்சி இப்போ இல்லை எப்பவுமே வளராது


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 25, 2024 19:42

இந்தியாவின் மானமே சந்தி சிரிப்பது பற்றி இளைய மருத்துவர் ஒன்றும் கூறவில்லையே. தாங்கள் கூட்டணி கண்ட பாஜகவும் வாய் திறக்கவில்லை. முதலில் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து பின் கேள்விகள் எழுப்பினார் நல்லது.திராவிட மாடல்... ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். ஒன்றிய அமைச்சர் ப்ரஹ்லாத ஜோஷியை கேட்டுப்பாருங்கள். உண்மை விளங்கும்.


Bala
நவ 25, 2024 22:40

திருட்டு மாடல் அப்படீன்னா என்ன என்றால் எல்லா ஊழல்களையும் செய்துவிட்டு மத்திய அரசின் மீது பழிபோட்டு மக்களை இந்தி தெரியாது போடா, அம்பானி, அதானி என்றெல்லாம் புதிய தலைமுறை போன்ற கொத்தடிமை மீடியாக்களை வைத்துக்கொண்டு கூப்பாடு போட்டு இதே அம்பானி அதானியுடன் ரகசிய கூட்டுவைத்து கொள்ளையடிப்பது. இதற்கு பெயர்தான் விஞ்ஞான ஊழல். தந்தையிடம் கற்ற பாடம்


அப்பாவி
நவ 25, 2024 19:37

பரிட்சை எழுதியாச்சா? பாஸ் பண்ணியாச்சா?


Narayanan Muthu
நவ 25, 2024 20:22

பாஸ் அவ்ரதையெல்லாம் RSS பாத்துக்கும்


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 25, 2024 19:37

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "அதானி குழுமம் ஊழல், லஞ்சம் மற்றும் நிதி முறைகேடு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப விரும்பினோம். பிரிவு 267-ன் கீழ் அதானி பிரச்னையை எழுப்பினோம். இப்படி இருக்கும்போது ராமதாஸ் மோடியை காப்பாற்ற DMK மீது அவதூறு ஏன் ஆதாரம் இருந்தால் மணி வழக்கு போடலாமே இங்கே கூவுவதை விட்டு எந்த பார் அட் லா லண்டன் படிச்சவர் JPC யில் சொல்லலாமே , சிரிப்பு POLICE


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 25, 2024 19:25

இந்த சிரிப்பு போலீஸ் ஸ்ரீலங்கா என் சென்றார் என்று இப்போ தெரிகிறது ADHANI POWER PLANT க்கு அனுப்ப பட்ட புறா தான் இவர் , இதை தான் ரத்து செய்யப்போகிறேன் என்று புது அதிபர் சொல்லுகிறார்


Bala
நவ 25, 2024 22:42

திருட்டு மாடலுக்கு திரு அண்ணாமலை லண்டனில் இருந்து வருவதற்கு முன்பே கிடுகிடுக்குது. சும்மா அதிருத்துள்ள. இனிமேல்தான் இருக்கு ஆட்டம்


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 25, 2024 19:22

அரக்குறிச்சியில் வெற்றி பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ள லண்டன் வரை சென்று படிச்சி திரும்பும் அதி மேதாவி இவர் , எப்படி இருந்தாலும் வெற்றி என்பது கிடையாது , மக்கள் மனதை படிக்கச் பாரும்


வைகுண்டேஸ்வரன்
நவ 25, 2024 19:17

மோடியின் 10 வருட ஆட்சிக்கு பூஜ்யத்துக்கு கீழே மைனஸ் மார்க் கொடுத்து விட்டு, அடுத்த மூன்றாம் மாதம் பாஜக வுடன் கூட்டணி போட்ட மானஸ்தன் ராமதாஸ்.


hari
நவ 25, 2024 23:16

முன்னாடி பாமக கூட கூட்டு வைகலயோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை