உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டு திருட்டை தடுக்க ஓரணியில் திரள வேண்டும்

ஓட்டு திருட்டை தடுக்க ஓரணியில் திரள வேண்டும்

தமிழகத்தில், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து, அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். பீஹாரில் ஓட்டுத்திருட்டு நடந்ததை போல் தமிழகத்திலும் நடக்கும். இதைத் தடுக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதால், அரசியல் செய்ய களம் இல்லாமல் அண்ணாமலை விரக்தி அடைந்துள்ளார். அதனால் தான், விவசாயம் செய்கிறேன் என மாட்டு சாணம் அள்ளுகிறார். 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பது போல வி.சி.க.,வுக்கு எதிராக அவதுாறு பேசுகிறார். ஆணவப் படுகொலையை தடுக்க, வரும் சட்டசபைக் கூட்டத் தொடரில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். - திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAAJ68
அக் 27, 2025 15:41

ஓட்டு திருட்டு இல்லை . நீங்கள் திருட்டு ஓட்டு போட்டு சதி வேலை செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது அதனால் பீதி அடைந்துள்ளீர்கள்.