வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உண்மைதான். எந்தவொரு விஷயத்திலும் எந்தவொரு நாட்டினரையும் நாம் சார்ந்து இருக்க கூடாது. முடிந்த அளவுக்கு நம் நாட்டில் கிடைப்பதை, இருப்பதை பயன்படுத்திக்கொண்டு தன்னிறைவோடு வாழவேண்டும்.
கோவை: கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின், 75ம் ஆண்டு நிறுவன தின விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், எம்.பி., சசி தரூர் பேசியதாவது: காலநிலை மாற்றத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. காலநிலை மாற்றத்தை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்கள் கண்டறிய வேண்டும். மாற்று எரிசக்தி குறித்து யோசிக்க வேண்டும். சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் ஆகிய, இயற்கையை பாதிக்காத எரிசக்திகளை பயன்படுத்த வேண்டும். இயற்கையை பாதிக்காத கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் காலநிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நமது தகவல்கள் திருடப்படுவதை தடுக்க, இணைய பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் கண்டறிய வேண்டும். புதிய 'ஸ்டார்ட் அப்' உருவாக்குவதில், உலகளவில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. புதிய கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சாட் ஜிபிடி, இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்திய தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும். பிற நாடுகளை நம்பியுள்ளதை குறைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கல்லுாரி முதல்வர் பிரகாசம் வரவேற்றார். பி.எஸ்.ஜி., அண்டு சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உண்மைதான். எந்தவொரு விஷயத்திலும் எந்தவொரு நாட்டினரையும் நாம் சார்ந்து இருக்க கூடாது. முடிந்த அளவுக்கு நம் நாட்டில் கிடைப்பதை, இருப்பதை பயன்படுத்திக்கொண்டு தன்னிறைவோடு வாழவேண்டும்.