உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏழை பாதிக்கும் கொள்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

ஏழை பாதிக்கும் கொள்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஏழைகளை பாதிக்கும் கொள்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்கப்பட வேண்டும், '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தங்க நகைக்கடன்கள் தொடர்பான வரைவு வழிகாட்டுதல்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் நான் எழுப்பிய பிரச்னைகளுக்கு நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது என்பது மகிழ்ச்சி.விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் போன்ற சிறிய கடன் வாங்குபவர்களின் நலன்களை பாதுகாப்பதும், சரியான நேரத்தில் மற்றும் அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன்.இந்தப் பிரச்னை குறித்து நேர்மறையாக பரிசீலனை செய்ததை பாராட்டுவதோடு, ஏழைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் முன்கூட்டியே ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

அப்பாவி
மே 31, 2025 10:10

அடகு வெக்கிற அளவுக்கு தங்கம் வெச்சிருக்கிறவன் ஏழையா? என்னமா உருட்டுறாங்க.


அப்பாவி
மே 31, 2025 10:09

அடப்பாவமே... இவர் ஆட்சிக்கு வந்து புதுவிடியல் தந்து ஏழ்மையை ஒழிப்பாருன்னு பாத்தா? இந்தியாவுக்கு என்னைக்கும் விடியாது.


theruvasagan
மே 31, 2025 08:34

சாராயத்தை ஊத்தி கொடுத்து மக்களை ஏழையாக்குவார்களாம். மத்திய அரசு அந்த ஏழைகளை பராமரிக்கணுமாம். மாடலின் நியாயம்.


h
மே 31, 2025 07:44

பரிதாபகரமான நிர்வாகம். மோசமான சட்டம் ஒழுங்கு. பெண்கள் பாதுகாப்பாக இல்லை. போதைப்பொருள் மாஃபியா யார் அந்த சார்


சிட்டுக்குருவி
மே 30, 2025 23:09

அய்யா முதல்வரே முதலில் நீங்கள் விற்கும் சாராயத்தை வாங்கி குடித்து எத்தனை குடும்பங்கள் ஏழ்மையில் தல்லபட்டுவிட்டன,எத்தனை குடும்பங்களில் பெண்கள் தங்கள் தாலியை இழந்துவிட்டார்கள்,எத்தனை குழந்தைகள் தாங்கள் பெற்றோர்களை இழந்துவிட்டார்கள்,எத்தனை குழந்தைகள் தங்கள் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டார்கள் என்று ஒரு பரிசோதனை செய்துவிட்டு அப்புறம் ஏழைகளை பாதிக்கும் கொள்கைகள் பற்றி நாடகம் ஆடுங்கள்.ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து ,தாங்களும் தங்கள் குடும்பமும் சுகபோகமாக ஊழலில் திளைத்து வாழதானே அரசு மதுவிர்ப்பது.சுயபரிசோதனை செய்யுங்கள்.


K V Ramadoss
மே 30, 2025 21:07

முதலில் ஏழைகளை வெகுவாக பாதிக்கும் டாஸ்மார்க் மூடப்படவேண்டும்.. அதை செய்யாமல் மற்றவைப்பற்றி பேசுவது நீலிக்கண்ணீர் வடிப்பதற்கு சமமாகும்..


HoneyBee
மே 30, 2025 20:28

முதலில் ஏழைகள் பாதிப்படைவது திராவிட மாடலால். பத்து ரூபாய் முதல் ஆயிரம் கோடி வரை மக்கள் பணத்தை சுரண்டி தின்னும் திராவிட மாடல் தான் முதல் பாதிப்பு


Ramesh Sargam
மே 30, 2025 20:14

ஏழைகளை பாதிக்கிறதா, இல்லை இந்த நகை கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கட்சிக்காரர்களை பாதிக்கிறதா? திடீரென்று ஏன் ஏழைகளின் மீது கரிசனம்? முதல்வரின் முதலைக்கண்ணீர்?


R.MURALIKRISHNAN
மே 30, 2025 19:51

திமுகவும் கூட்டணியும் கொள்ளையடிப்பதை யாரும் கேட்க கூடாதுன்னு தைரியமா சொல்லுங்க தலைவரே


vbs manian
மே 30, 2025 19:30

உரிமை தொகை ஆயிரம் கொடுத்து அதை போல் மூன்று மடங்கு சொத்து வரி மின் கட்டணம் பால் விலை உயர்வு பத்திர பதிவு ஏற்றம் என்று வசூலிப்பதை என்னவென்று சொல்வது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை