தி.மு.க.,வுக்கு யார் வந்தாலும் வரவேற்போம்
அ.தி.மு.க.,வில் இருந்து பலரும் விலகி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனம் திறக்கப் போவதாக கூறியுள்ளாரே என்றும், தி.மு.க., பக்கம் அவரை வரவேற்பீர்களா என்றும் பலரும் என்னிடம் கேட்கின்றனர். அவர் முதலில் கருத்து சொல்லட்டும்; அதன் பின், என்ன நடக்கலாம் என்பது குறித்து பேசலாம். மாற்று கட்சியில் இருந்து யார் வந்தாலு ம், தி.மு.க., இன்முகத்தோடு வரவேற்கும். எதுவும் வற்புறுத்தியோ, நிர்ப்பந்தப்படுத்தியோ நடக்கக்கூடாது; இயல்பாக நடக்க வேண்டும். டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தோர் என 459 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். தவறிழைப்போர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். - முத்துசாமி, தமிழக அமைச்சர், தி.மு.க.,