உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்போம்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி

கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்போம்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரியகுளம்: ''சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் அதிக தொகுதிகளை கேட்போம்,'' என, தேனி மாவட்டம் பெரிய குளத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.பெரியகுளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இறந்த முன்னாள் நிர்வாகிகள் 16 பேரின் புகைப்படங்களை மாநிலச் செயலாளர் சண்முகம் திறந்து வைத்தார். பின் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடந்த சிறப்பு தீவிர திருத்தப்பணியில் 97.38 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஓராண்டில் இறந்து போனவர்கள் 26 லட்சம் பேர் என்பது நம்பும்படி இல்லை. தேர்தல் கமிஷன் ஓட்டுரிமையை அனைவருக்கும் வழங்க முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் வாக்காளர்களை நீக்குவதில் தான் தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி உள்ளது. தீவிர திருத்தப் பணி நடவடிக்கைகளை இத்துடன் நிறுத்திட வேண்டும். இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்போம். தமிழகத்தில் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஆண்டு தோறும் பல லட்சம் ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நேரத்தில் ஒரு முட்டை விலை ரூ.6.50 என்பது அதிகபட்சமாக உள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை திட்டமிட்டு உயர்த்துகின்றனரா என தமிழக அரசு கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்றார். மத்திய குழு உறுப்பினர் பாலபாரதி, மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தாலுகா செயலாளர் முருகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Chandhra Mouleeswaran MK
டிச 23, 2025 05:39

இந்தாளு மூஞ்சில பாருங்க பிச்சையெடுத்துப் பிச்சையெடுத்து அந்தப் பிச்சைக்காரத்தனச் செக்கு வழிகிறது சீட்டு கீட்டு எல்லாம் ஒரு மண்ணும் வோணாம் குருமா சொன்ன மாதிரி ஒரு பத்து சீட்டு அதிகமா வாங்கிக்கினா மட்டும் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரச்சி கிளிஞ்சுருமா என்ன? போன வாட்டி அம்பது கோடி பிச்சை வீசின மாதிரி, இந்த வாட்டி வீசினா ஒப்புக்க மாட்டம் ஆதான் நூறு ஆளுக இருக்கம்னு சொல்ரியளே ஒரு நூறு கோடியாட்டும் வேணமாக்கம் இருக்கர காம்ரேட்டுகளுக்கு ஆளாளுக்கு ஒரு ஒரு கோடியாச்சும் வேணமா இல்லியா?


பா மாதவன்
டிச 22, 2025 19:11

ஐயா 117 தொகுதி கேட்க வேண்டும். அதில் ஒன்று குறைந்தால் கூட கட்சியின் 100 உறுப்பினர்களும் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தீர்மானமாக சொல்லிவிட வேண்டும். அப்பொழுது தான் 117 கிடைக்கும்.


Chandhra Mouleeswaran MK
டிச 23, 2025 05:31

ஹைய்யா ஹை - ஹையா ஹையான்னானா ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே - - - காம்ரேட் டியர் அவர் காம்ரேட்டு நூறு பேர் இருக்காக அப்டீங்கரீங்களா? நெசமாலுமா இருக்காவங்கரீங்க? கப்பரைக்கு ஒருஆளு, உண்டியலுக்கு ஒரு ஆளும் அறிவாலாலயத்துக்கு பெஷலா ஒரு ஆளு அவ்ளவ்தான? சொல்லுங்க சொல்லுங்க அது யாரு மித்த தொண்ணீத்தி ஏளு பேரு??


Ramalingam Shanmugam
டிச 22, 2025 16:50

2 seat மேல கிடைக்காது உண்டியல் தனியா நின்னு பாரேன் உன்கட்சி காரனே காசுக்கு ஓட்டை விட்ரூ இருப்பான் ஓசி பிரியாணி


Indhuindian
டிச 22, 2025 16:19

பொட்டி ஒன்னு ஒண்ணா அந்த பக்கம் தள்ள இந்த எண்ணிக்கை ஒன்னு ஒண்ணா குறையும்


Karunai illaa Nidhi
டிச 22, 2025 15:29

நிக்க ஆளு இருக்கா? அல்லது அதுவும் வேணுமா?


Rajarajan
டிச 22, 2025 12:38

காசா, பணமா, யார் கிட்ட கேக்கறீங்க? அண்ணன் கிட்ட தானே, கேளுங்க. எல்லா தொகுதியும் கேளுங்க. ஆனா, நிக்க ஆள் இல்லனு, என்னை தேடி வந்துறாதீங்க ப்ளீஸ்.


vittalganesh
டிச 22, 2025 12:27

நாட்டில் ஏகப்பட்ட ப்ரோப்லம் இருக்கு முட்ட விளைய பத்தி கவலை படும்


G Mahalingam
டிச 22, 2025 12:05

234 தொகுதியையும் கேட்க உரிமை‌இருக்கு. ஆனால் 6 தொகுதி கொடுத்தாலே அதிகம். திமுகதான் கம்யூனிஸ்ட் உயிரை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள்.


Rathna
டிச 22, 2025 11:39

உண்டியல்கள் நாட்டை கெடுத்தது போதாதா?


கண்ணன்
டிச 22, 2025 11:25

இல்லையெனில் அதிகப் பெட்டிகளைக் கேட்போம்


சமீபத்திய செய்தி