உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திங்கள் முதல் வர்றோம்!:அடம் பிடிப்பதை வாபஸ் வாங்கிய எதிர்க்கட்சியினர்

திங்கள் முதல் வர்றோம்!:அடம் பிடிப்பதை வாபஸ் வாங்கிய எதிர்க்கட்சியினர்

புதுடில்லி : லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'அமளியில் ஈடுபட மாட்டோம். சபை நடவடிக்கைகள் தொடர முழு ஒத்துழைப்பு தருகிறோம்' என, வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வரும் திங்கட்கிழமை முதல் இரு சபைகளும் கூச்சல், குழப்பமின்றி சுமுகமாக நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 21ல் துவங்கியது. லோக்சபா, ராஜ்யசபாவில் முதல் நாளே அமளியில் குதித்த காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'பஹல்காம் தாக்குதல், 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து விவாதம் நடத்த வேண்டும்; பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது' என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், இரு சபைகளிலும் அலுவல்கள் முடங்கின. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நட்டா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் எவ்வளவு சொல்லிப்பார்த்தும், அக்கட்சிகள் கேட்கவில்லை. 'ஆப்பரேஷன் சிந்துார் உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயார்' என, பலமுறை தெரிவித்தும் கூட அமளியில் ஈடு படுவதை எதிர்க்கட்சிகள் விடவில்லை. இதற்கிடையே, துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகித்த ஜக்தீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்ததும், தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று, வழக்கம்போல லோக்சபா, ராஜ்யசபா கூடின. எதிர்க்கட்சிகளும் வழக்கம் போல அமளியில் ஈடுபட, ஐந்தாவது நாளாக இரு சபைகளும் நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டன. கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து, இரு சபைகளிலும் இதுவரை எந்த அலுவல்களும் நடக்கவில்லை. எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால், பார்லி., முடங்கி உள்ளது. இதனால் நம் வரிப்பணமும் பல கோடி ரூபாய் வீணானது.  பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு நடக்கும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக, இரு சபைகளிலும் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அர்ஜும் ராம் மேஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்களும் பங்கேற்றனர். அப்போது, பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார், பீஹாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, அரசு தரப்புக்கும், எதிர்க்கட்சி தரப்பும் இடையே புரிதல் ஏற்பட்டது. அரசின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், 'அமளியில் ஈடுபட மாட்டோம். சபை சுமுகமாக நடக்க ஒத்துழைப்பு தருவோம்' என, தெரிவித்தனர். ஒருமித்த கருத்து ஏற்பட்டதால், வரும் 28 முதல் இரு சபைகளிலும் அலுவல்கள் சுமுகமாக நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் குறித்து விவாதம் நடத்த காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அரசு சம்மதித்தது. அப்படியிருக்கையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவது ஏன்? விவாதம் நடப்பதை தடுப்பதே எதிர்க்கட்சிகள் தான். நாங்கள் அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம். இந்த ஐந்து நாட்களில் ஒரேயொரு மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது. கிரண் ரிஜிஜு பார்லி., விவகார அமைச்சர், பா.ஜ., துணை ஜனாதிபதி தேர்தல் நடத்த அதிகாரி நியமனம் மருத்துவ காரணங்களுக்காக, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக, ராஜ்யசபா பொதுச்செயலர் பி.சி.மோடியை நியமித்து, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டுள்ளது. ராஜ்யசபா செயலகத்தின் இணைச் செயலர் கரிமா ஜெயின், செயலகத்தின் இயக்குநர் விஜய் குமார் ஆகியோர், தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். விவாதத்துக்கு வருகிறது 'ஆப்பரேஷன் சிந்துார்' எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் 28ல், பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துார் குறித்து, லோக்சபாவில், 16 மணி நேர விவாதம் நடக்கிறது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தை துவக்கி வைக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பேச உள்ளனர். இதே போல், 29ல், ராஜ்யசபாவிலும் 16 மணி நேர விவாதம் நடக்கிறது. இரு சபை களிலும் விவாதத்தின் போது பிரதமர் மோடி பங்கேற்று பேசுவார் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த வாரம் பார்லி.,யில் அனல் பறக்கும். புதிய திருப்பம்! பண மூட்டை விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர். இதை ஏற்ற ஜக்தீப் தன்கர், அன்றைய தினமே துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இதில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகள் கொடுத்த பதவிநீக்க தீர்மானம் ஏற்கப்படவில்லை என்றும், அதற்கு பதில், ஆளும் தரப்பே கொண்டு வரும் பதவிநீக்க தீர்மானம், லோக்சபாவில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. குப்பை தொட்டி போராட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டாலும், பீஹார் வாக்காளர் திருத்த விவகாரம் ஒரு பிரச்னையாகவே உள்ளது. பார்லி., வளாகத்தில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர், குப்பைத் தொட்டியை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், சிறப்பு தீவிர திருத்த பணி என்ற போஸ்டரை கிழித்து போட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Balasubramanian
ஜூலை 26, 2025 21:03

ஆர்பாட்டம் செய்யாவிட்டால் நாங்கள் இருப்பதை மக்கள் கண்டுக்க மாட்டாங்க! தமிழகத்தில் இருந்து 39 பாராளுமன்ற மற்றும் 12 திமுக சார்பு மாநிலங்கள் அவை உறுப்பினர் இருந்து என்ன பயன்? அவை கூச்சல் ஆர்பாட்டம் தொடர் நிறுத்தி வைபபு இவற்றிலேயே காலம் கழிந்து விடுகிறது!! இதில் மைய பகுதிக்கு விரைய மைய உறுப்பினர் ஒருவர்! விரயம்


Tamilan
ஜூலை 26, 2025 18:37

ஆளும் கட்சியினர் அடம்பிடிப்பது தொடர்ந்தால் மேலும் தொடரும்


kannan sundaresan
ஜூலை 26, 2025 12:30

அமளியில் ஈடுபட்டு, லோக் சபாவின் வேலையை முடக்கும் MP களின் சம்பளத்தை கட் பன்னுங்க. இது மக்களின் வப்பணம்


sankaranarayanan
ஜூலை 26, 2025 10:15

இரு சபைகளில் உள்ளவர்கள் தாங்களும் அரசு அலுவலர்கள்தான் என்று கூறுபவர்கள் அரசு அலுவலர்கள்போல நடந்துகொள்ள தெரியவில்லையே நோ ஒர்க் நோ பே. என்ற முறை அரசு அலுவலர்களுக்கு உண்டு அதுமட்டும் ஏன் இவர்களுக்கு பொருந்தாது அப்படி என்ன இவர்களுக்கு மட்டும் எந்த விதத்தில் தனி சலுகை முதலில் அதை அமல்படுத்த வேண்டும் பிறகு எல்லாமே சரியாகிவிடும் .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 26, 2025 09:28

எம் பி க்களோ, எம் எல் ஏ க்களோ, அவர்கள் ரகளை, கூச்சல், குழப்பம் செய்து அவையை முடக்குவது மக்களுக்குச்செய்யும் துரோகமாகும் ..... அப்படிச் செய்யும் எம் பி க்களை வலுக்கட்டாயமாக அவையை விட்டு வெளியேற்றும் அதிகாரம் இருந்தும் சபாநாயகர் அதை அரிதாகவே பயன்படுத்துகிறார் ..... இது அவரது மென்மையான போக்கைக் காட்டுகிறது .....


VENKATASUBRAMANIAN
ஜூலை 26, 2025 08:25

ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திலும் இதே வாடிக்கை. இவர்களுக்கு ஓட்டு போட்டது எதற்காக. அமளி செய்யவா. எப்போதாவது மக்கள் பிரச்சினை பற்றி பேசுகிறார்களா. எப்போதும் தேர்தல் ஓட்டு மோடி பாஜக இதுதான் இவர்களின் நோக்கம்.


Kalaiselvan Periasamy
ஜூலை 26, 2025 08:25

முட்டாள்களை சுயநலவாதிகளையும் தேர்ந்தெடுத்த மக்கள் தேச விரோதிகள் . நாட்டின் நலன் கருதி செயல் பட மறுக்கும் இவர்களை தேர்தலில் நிற்க ஆயுள் தடை செய்ய வேண்டும் . அரசியல் என்பது நாட்டின் சேவையாக இருக்க வேண்டும் . அதைவிடுத்து தான் சம்பாதிக்க நினைக்கும் களமாக இருக்க கூடாது . அப்படி செய்யாமல் இருப்பவர்களை மக்கள் முழுமையாக தூக்கி ஏறிய கற்றுக் கொள்ள வேண்டும் .


பாமரன்
ஜூலை 26, 2025 08:20

மட்டமான தலைப்பு... மத்திய அரசு பணிந்ததுன்னு நேர்மையாக போட துப்பில்லன்னாலும் அரிப்பை அடக்க இப்படி ஒரு தலைப்பா...?? சிந்தூர் விஷயத்தை விவாதிக்க ஒத்துக்கிட்டு மத்திய அரசு சரண்டர் ஆனதால் அந்த விவாதத்தில் பங்கேற்க முடிவு செஞ்சு எதிரி கட்சியினர் வர்றாங்க... பகபகன்னு எரியுது தான்... நம்மாளுங்க பதில் சத்தம் குடுக்கும் போது செவ்வாய்க்கிழமை டெய்ல்ஃப்ளவர் தலைப்புக்காக ஐ ஆம் வெயிட்டிங்...


vivek
ஜூலை 26, 2025 12:16

மறுபடியும் உள்ள வந்து கலாட்டா பண்ணா தூக்கி போட்டு மிதிப்போம் ...நீ பாரு பாமரா


பேசும் தமிழன்
ஜூலை 26, 2025 07:23

அவையில் அமளி செய்யும் ஆட்களை தூக்கி வெளியே வீச வேண்டும்.... அப்படியே கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து..... எந்த சலுகையும் கிடைக்காது என்று கூற வேண்டும்.... அப்போதும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.


Ramuk Khosa
ஜூலை 26, 2025 07:11

இவனுகளை ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்வதை விட்டுவிட்டு, பங்களாதேஷ், ரோஹிங்கயா குடியேறிங்களுக்கு வக்காலத்து வாங்கும் இவனுகளுடன் என்னபேச்சுவார்த்த வேண்டி இருக்கு