உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்: அண்ணாமலை

அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்: அண்ணாமலை

திருச்சி: ''தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் மேம்படுத்தி பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.ஆபாச பேச்சுபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: தி.மு.க., மேடையில் ஆபாச பேச்சுகள் மட்டும் தான் இருக்கின்றன. அவர்கள் பேசுவது எல்லாம் ஆபாச பேச்சுகள். அதற்கு கைதட்ட 100 பேர். கைதட்டுவதால், நாம் சரியான பாதையில் போகிறோம் என்ற மாய உலகத்தில் முதல்வர் அமர்ந்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற மாய உலகில் உள்ளார். அங்கு இருக்கும் தொண்டர்கள், ஆபாச பேச்சுக்கு கைதட்டுவதே காரணம். மாய உலகில்வட மாநிலத்தவர்களை அமைச்சர்கள் விமர்சித்து பேசுகின்றனர். இதற்கு கைதட்டுகின்றனர். இவர்கள் யாரும் கும்மிடிபூண்டியை தாண்டி இந்தியா எப்படி இருக்கிறது என பார்த்தது கிடையாது. இவர்கள் 1967 ல் மாய உலகில் மாட்டி உள்ளனர். தமிழகத்தை தாண்டி பாரதம் முழுவதும் சென்றால் நாட்டின் வளர்ச்சி பற்றி தெரியும். வட மாநிலங்களில் இருப்பவர்கள் யாரும், நம்மை இழிவாக பேசியது இல்லை. எந்த அரசியல்வாதியும் தமிழ் சமுதாயத்தை பற்றி தவறாக பேசவில்லை. ஆனால், தி.மு.க., தலைவர்கள் மட்டும் ஒவ்வொரு மாநிலத்தை பற்றி தவறாக பேசுகின்றனர். கூண்டுக்கிளிஇதற்கு தி.மு.க.,வினருக்கு பயம். வெளியே மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்ற பயம். அவர்கள், குடும்பத்தினர் மட்டும் ஆட்சியில் உள்ளதால், மக்களின் மனநிலை தெரியாமல் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். மக்களுடன் பழகினால் தான் மக்கள் என்ன நினைப்பார்கள் என தெரியும். ஆனால், அண்ணாதுரைக்கு பிறகு, தி.மு.க.,வினர் கூண்டுக்கிளியாக அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு வெளியே வந்து மக்கள் என்ன நினைக்கின்றனர் என தெரியாது. முயற்சிசுதந்திரத்திற்கு பிறகு 2 கல்விக் கொள்கை தான் இருந்தது. தேசிய கல்விக் கொள்கையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் மொழி தான் கற்றல் மொழியாக இருக்க வேண்டும் என கொண்டு வந்தார். இதனை தி.மு.க.,க்காரன் சொல்ல மாட்டான். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர்கள் இதைக் கொண்டு வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். 6,7,8ம் வகுப்புகளில் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம்.தி.மு.க., காங்கிரசுடன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, 3வது கட்டாய மொழி ஹிந்தி தான் இருந்தது. முதல்முறையாக மும்மொழி கொள்கையில், விருப்பமான மொழியை 3வது மொழியாக படியுங்கள் என கூறப்பட்டு உள்ளது. அரசியல் புரட்சிகையெழுத்து இயக்கம் ஆரம்பித்து 28 நாளில் 26 லட்சம் பேர் கையெழுத்து போட்டு உள்ளனர்.நீட் தேர்வுக்கு எதிராக, கவர்னருக்கு எதிராக திமுக., ஆரம்பித்த கையெழுத்து இயக்கத்தில் எத்தனை பேர் கையெழுத்து போட்டு உள்ளனர் என தெரியாது.பா.ஜ.,வின் கையெழுத்து இயக்கத்தில் இணையதளத்தில் 8,20,336 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர். நேரடியாக 17,89,694 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர். நேற்று மாலை வரை 26,10,033 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர்.இது தமிழகத்தில் அரசியல் புரட்சி. இதே வேகத்தில் போனால், 2 கோடி கையெழுத்தை நோக்கி போயிருப்போம். இன்னும் 74 லட்சம் கையெழுத்து தேவைப்படுகிறது. 8 வது மாநாடு நடக்கும் போது நமது இலக்கான ஒரு கோடியை தாண்டி இரண்டு கோடியை நோக்கி சென்றிருப்போம்.தெரியாதுதி.மு.க.,வில் யாரும் படித்து அதிகாரத்திற்கு வரவில்லை. உதயநிதி பட்டம் வாங்கியது தெரியாது எங்கு படித்தார் தெரியாது. கல்வி அமைச்சர் அகில உலக உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவராக உள்ளார்.இவர் ஸ்டாலின் பின்னால் செல்வார். இதற்கு பிறகு நேரம் இருந்தால் கல்வியை பார்ப்பார்.இவர்களுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும். பல வழக்குகளில் சிக்கிய தி.மு.க., அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து நம் குழந்தைகள் என்ன படிக்கப் போகின்றனர் என முடிவு செய்யப் போகின்றனர். போஸ்டர் ஒட்டஅரசு பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வரும்போது உலகத் தரம் வாய்ந்த குழந்தைகள் தயார்படுத்த முடியும்.அரசு பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வந்தால் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும். அரசு பள்ளியில் படித்தாலும், தனியார் பள்ளியில் படித்தாலும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை நோக்கம். ஆனால், தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளியில் ஒரு கல்வி, அரசு பள்ளியில் தரமில்லாத கல்வி கொடுத்து தி.மு.க., தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்காக அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்துகின்றனர்.புரியாதுஅனைத்து தனியார் , சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இரண்டு மொழிகள் படிக்கின்றனர். தமிழகம் வளராமல் இருப்பதற்கு அடிப்படை காரணம், இங்கிருப்பவர்கள் பேசுவது வேறு யாருக்கும் புரியாது.வேலையில்லாத முதல்வர் கூட்டம் போடுகிறார் என வேலையில்லாத 3 முதல்வர்கள் விமானம் பிடித்து வருகின்றனர். தே.ஜ., கூட்டணி வரும் போது அரசு, தனியார் பள்ளிகளில் சம கல்வி வரும். அரசு பள்ளியை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியையும் பிஎம்ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பல்லவி
மார் 24, 2025 21:05

ப எம் பின்னர் வடமொழி எழுத்துக்கள் ஏன் தமிழ் எழுத்து இல்லையா pure கன்னடிகா எழுத்து வைக்கலாமே


ஆரூர் ரங்
மார் 24, 2025 12:27

பிஎம் ஸ்ரீ க்கு முன்னாடியே தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளை நடத்துகின்றது. ஆனால் அங்கு நுழைவுத்தேர்வு உண்டு. நீட் நுழைவுத்தேர்வை எதிர்ப்பவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எதிர்ப்பதில்லை.


அப்பாவி
மார் 24, 2025 07:24

உ.பி, குஜராத்லேயே முக்குறாங்களாம். இவுரு இங்கே மாத்தப் போறாராம். தேறாத கேஸ்.


vivek
மார் 24, 2025 10:47

வரும்...முயற்சி செய்...


Appan
மார் 24, 2025 05:09

தமிழக எம்.பி களை , மத்திய கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் ரவுடிகள் என்கிறார். மத்திய நிதி அமைச்சர் தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாது என்கிறார். இப்படி தமிழர்களை இழிவு படுத்தும் கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் என்று சொல்கிறார்கள். போன பாராளுமன்ற தேர்தலில் ஒடிசாவில் பிஜேபி தமிழர்கள் பூரி ஜெகநாதன் பூட்டு சாவியை தமிழர்கள் எடுத்து சென்றுள்ளார் என்று சொல்லி தமிழர்களை இழிவு படுத்துகிறார்கள். .இப்படி தமிழர்களை இழிவு படுத்த்தும் கட்சி தமிழர்களுக்கு தேவையா ?. இந்தியாவில் ஒரே ஒரு மாநிலம் தான் இந்திராவின் எமெர்ஜென்சியை எதிர்த்தது.. மற்ற மாநிலங்கள் அவர்களில் காலில் விழுந்தது .தமிழர்கள் இந்திக்கு எதிரிகள் இல்லை. . வேண்டும்போது யாரும் எப்போதும் தமிழகத்தில் இந்தி கற்கலாம் . ஒரு மொழி அந்த இனத்தின் அடையாளம் அதை அடகு வைக்கும் இவர்கள் தமிழரா ?


ஈர வெங்காயம்
மார் 24, 2025 10:27

தம்பி (கட்டை குரலில்) மடை மாற்றாதே. தமிழ் படித்தால் பிச்சை தான் எடுக்கனும்னு சொன்னவர் உங்கள் தந்தை பெரிய ... தான்.


ஜெய்ஹிந்த்புரம்
மார் 23, 2025 23:48

ஏக் காவோம் மே ஏக் கிசான் ரகு தாத்தா.. ஏக் பிளேட் பாணி பூரி 50 ரூபையா ஹைங்.. இந்த வருஷத்து பாடம் முடிஞ்சது பிள்ளைகளே.


Mediagoons
மார் 23, 2025 22:49

இப்படியெல்லாம் அலைவதற்கு பேசாமல் ஒரு கருப்பு துணியை தலையில் போட்டுக்கொண்டு ராமரைப்போல் வனவாசம் போகலாம்


Mediagoons
மார் 23, 2025 22:43

அந்நிய வட இந்திய கொத்தடிமைகள்


N Sasikumar Yadhav
மார் 24, 2025 04:22

உன்னய மாதிரி?கோபாலபுர கொத்தடிமையாக இல்லாமல் இருந்தாலே தமிழக மாணவர்கள் நன்றாக இருப்பார்கள் . மொழியை வைத்து கொள்ளையடிக்கிற திராவிட மாடலின் கபட நாடகத்தை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்


Thirumal s S
மார் 23, 2025 22:26

நீங்க என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதுக்கு ஆட்சிக்கு வரனும் அது முடியுமா? அப்படி வந்தால் பெரியார் செத்துட்டார் . இங்க திராவிடத்தை பற்றி பேசவில்லை நான் . பெரியாரின் சிந்தனைகள் மறைய பல வருடங்கள் ஆகும் அண்ணாமலை சார்.


தி எண்ட்
மார் 24, 2025 10:39

அண்ணாமலை தான் வெங்காயத்தின் கடைசி பகுதியை உரிக்க ஆரம்பிச்சாட்டருள்ள, நீங்கள் எல்லோரும் ஆக்ரோஷமா வசை பாடும்போதே உங்கள் வலியை உணர முடிகிறது. ஆரம்பம் இருந்தால் முடிவு உண்டு. உங்களின் முடிவுறை எழுத ஆரம்பிச்சாச்சு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை