உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

தமிழகம் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: 'பா.ஜ., அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையை செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சம் நிறைந்தது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வளர்ச்சியடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

மக்கள் தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதை தொடர்ந்து நடக்கவுள்ள தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் துவக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து, நம் வாசற்படி வரை வந்து விட்டது. மத்திய பா.ஜ., அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையை செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சம் நிறைந்தது.

தென்னகத்தின் குரல்

மக்கள் தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வளர்ச்சியடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதே வேளையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை பல ஆண்டுகளாக காற்றில் பறக்க விட்ட மாநிலங்களோ, பார்லிமென்டில் கூடுதல் எம்.பி.,க்களை பெற இருக்கின்றன.அநீதியான இந்த நடவடிக்கை, கூட்டாட்சியின் சமநிலையை குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது. இந்த சதி திட்டம் குறித்து, நான் முன்பே எச்சரித்து இருந்தேன். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பா.ஜ., எப்படி இந்த கைவரிசையை காட்டப்போகிறது என்பதை விளக்கமாக எடுத்து கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல; தென்னகத்தின் குரலை காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்ட வேண்டிய தருணம் இது. கடந்த 1971ம் ஆண்டு கணக்கெடுப்புக்கு பின், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாக அமையும்.தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து, தனக்கு சாதகமான முறையில், லோக்சபா எம்.பி., இடங்களை பா.ஜ., நிர்ணயித்து கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும். தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என, மத்திய உள்துறை அமைச்சகம் சொல்கிறது.

அடிமை துரோகிகள்

ஆனால், இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதை தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும். உரிய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம். சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பின், என்ன நடந்தது என்று பார்த்தாலே, இவர்களின் பேச்சின் லட்சணம் புரிந்து விடும். ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு சொன்னது; தேர்தலும் நடந்தது; உச்ச நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு - காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிபட்ட சத்தியவான்களோடு நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம்.வரும் 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்கு குறைந்து விடும். அ.தி.மு.க., போன்ற அடிமை துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ., முன் மண்டியிட்டாலும், தி.மு.க., தலைமையில் ஓரணியில் தமிழகம் அணிவகுக்கும். தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ள ஒரே காரணத்துக்காக, தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
ஜூன் 07, 2025 12:41

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு சொன்னது தேர்தலும் நடந்தது உச்ச நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு - காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. சாத்தான் நன்றாகவே வேதம் ஓதுகிறதே . தனது மாநில நாறிக்கிட்டு கிடக்குது அதை சரி செய்ய வக்கு இல்லை அடுத்த மாநிலத்தை பற்றி கூற என்னய்யா தகுதி இருக்கு பொழுபோனால் பொழுது விடிந்தால் கள்ள சாராய சாவு பெண்கள் கற்பழிப்பு சாவு சாலைகளில் விபத்து உயிரிரழப்பு கொள்ளை சூறையாடல் இப்படி இங்கே ஏராளம் ஏராளம் இதை கவனிக்க இங்கே ஆளில்லை இவர் இப்படி பேசியதால் பரூக் அப்துல்லா இவரை மெச்சவும் மாட்டார் இண்டிகா கூட்டணியிலிருந்து அவர் என்றோ வெளியே சென்றுவிட்டார் யாரை ஏமாற்ற இந்த பசாப்பு வார்த்தைகள்


xyzabc
ஜூன் 07, 2025 11:17

200 தொகுதி வெல்ல அனைத்து முயற்சிகளும் செய்ய படும்.


vbs manian
ஜூன் 07, 2025 10:23

ஒரே வழி நாற்பது இடங்களிலும் ஜெயித்து கழகம் இந்தியாவின் பிரதமர் பதவியில் அமரவேண்டும். அப்போது தங்கள் இஷ்டப்படி நிதி தொகுதி வரையறை மற்ற எல்லாவிஷயங்களையும் தமிழகத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் செய்யலாம். காங்கிரஸ் தலைவர் மீது திடீர் பாசம் ஆச்சர்யம்.


Sundaran
ஜூன் 07, 2025 09:12

கொலை செய்பவர்கள் கொள்ளை அடிப்பவர்கள் தண்டிக்கப்படுவதையும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு ஆதரவாக வடமாநில வக்கீல்களை வைத்து வாதாடுவோம். அமைச்சர்கள் ஆக்கி அழகு பார்ப்போம். கோவை பேருந்து பணிமனையில் 18000 லிட்டர் டீசல் திருடப்பட்டு உள்ளதாக அறிகிறோம் அது பொய் செய்தி. வெயிலில் ஆவி ஆகிவிட்டது. 1000 ரூபாய் கொடுத்தால் மக்கள் அனைத்தையும் மறந்து விடுவார்கள் என்பதும் எங்களுக்கு நன்கு தெரியும் .


Amar Akbar Antony
ஜூன் 07, 2025 08:09

காஷ்மீரின் குறிப்பிட்ட ஷரத்து நீக்கப்பட்டதும் இன்று தற்போதய நிலையில் மாநில அந்தஸ்து தேவையில்லை பின்னர் பார்க்கலாம் என்று அந்த மாநில முதல்வர் சொல்லிவிட்டார். மன்னருக்கேன் குடையுது? மறுவரை என்று வருமோ அதை பிறகு பார்ப்போம். இங்கு தமிழகத்தில் தென் மாவட்டங்கள் இன்னும் தொழில்துறையில் முன்னேறவில்லையே? இந்த மாவட்ட மக்கள் பெரும்பாலும் படித்தவர்கள் மதம் மாறியவர்கள் ஆனால் இன்னும் தொழில்துறையில் முன்னேற்றமிழை. மேலும் அடி வெட்டு கொலை என்று குற்ற சம்பவங்கள் கூட அதிகமாக நடக்குறதே? ஏன்? அவர்கள் ஏன் சென்னைக்கு வந்து உழைக்கணும்? முதலில் தன் முதுகை அழுக்கற்று வைக்கவும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 07, 2025 08:04

இதெல்லாம் செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு ,,, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது ... இந்த லட்சணத்தில் இந்த உருட்டு தேவையா


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 07, 2025 08:02

ஆமாம் 2026 தேர்தலில் தமிழகம் தண்டிக்கப்படுவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் ...


VENKATASUBRAMANIAN
ஜூன் 07, 2025 07:18

எப்படியெல்லாம் திசை திருப்புகிறார்கள் அடியே என்று சொல்ல பெண்டாட்டி இல்லையாம் ஆனால் பிள்ளை எத்தனை என்று கேட்ட கதையாக தந்தான் உள்ளது. இதுதான் திராவிட மாடல் போலும். பொய் சொல்லுவதில் திமுகவை மிஞ்ச முடியாது.


ramani
ஜூன் 07, 2025 06:06

உங்கள் கட்சி அரசியலிருந்து ஒதுக்கப்படும் அப்பொழுது தான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும்


Dr. Suriya
ஜூன் 07, 2025 05:36

புலி வருது புலி வருது மக்கா .... புலிக்கு பயந்தவங்க எல்லாம் என் மேல படுத்து கொள்ளுங்கள் என்று இருக்கிறது நமது திராவிட மாடல் முதல்வரின் அறிக்கை தமிழா...


புதிய வீடியோ