உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்போம்; முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

அனைத்து குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்போம்; முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: 'அனைத்து குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்போம்' என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டினை கொண்டாடும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை முதல்வர் ஸ்டாலின் வாசிக்க, அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வாசித்தனர். இந்த வீடியோவை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: என்றும் பரிணமித்துக் கொண்டிருக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது. அரசியலமைப்புச் சட்ட முகப்புரையை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களையும், அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

xyzabc
நவ 26, 2024 23:35

ஊழல் மூட்டையை அவிழ்த்து விடுங்க


R.MURALIKRISHNAN
நவ 26, 2024 23:28

குடிமக்கள் மட்டும்.


Ramesh Sargam
நவ 26, 2024 22:11

முதல்வர் கூறிய அந்த அனைத்து குடிமக்களில், ஹிந்துக்களும் அடக்கமா...? அல்லது அந்த வோட்டு வங்கி மதத்தினர் மட்டுமா...?


Jaihind
நவ 26, 2024 20:31

சுண்ணாம்பு மட்டுமே எங்களுக்கு


SUBRAMANIAN P
நவ 26, 2024 17:32

பாதுகாக்கும் லட்சணம் ஓப்பனா தெரியுது.


சமீபத்திய செய்தி