உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் எதிர்பார்க்கும் நிர்வாகத்தை வழங்குவோம்: அண்ணாமலை

மக்கள் எதிர்பார்க்கும் நிர்வாகத்தை வழங்குவோம்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஊழல் நிறைந்த தி.மு.க., அரசை வேரோடு அகற்ற தே.ஜ., கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னையில் நிருபர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை உறுதி செய்தார்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஊழலை நிறுவனமயமாக்கி உள்ள தி.மு.க., ஒரு சிலருக்கு பலனளிக்கும் வகையில் ஒவ்வொரு நிர்வாக அமைப்பிலும் ஊழல் செய்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது போல், 2026 சட்டசபை தேர்தலில் ஊழல் நிறைந்த தி.மு.க., அரசை வேரோடு அகற்றி, வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் தமிழக மக்களுக்கு உண்மையான சேவையை மீட்டெடுப்பதற்காக அதிமுக, பாஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும்.மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிர்வாகத்தை வழங்குவோம். அதற்கு தமிழக மக்கள் தகுதி பெற்றவர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஏப் 12, 2025 10:53

உங்கள் பாஜக கட்சியின் நிர்வாகத் திறமையைத் தான் மத்திய அரசு மற்றும் மற்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பார்த்துக் கொண்டு இருக்கிறோமே! அங்கெல்லாம் கெடுத்தது போதாதா?


அப்பாவி
ஏப் 12, 2025 10:42

அண்ணாமலயா? யாரு? எங்களுக்கு நைனாவைத்தான் தெரியும்.


Indian
ஏப் 12, 2025 08:41

மக்கள் எதிர்பார்த்த நிர்வாகம் தான் ஏற்கனவே இருக்கு ....நீங்க புதுசா தர வேண்டாம்


பல்லவி
ஏப் 12, 2025 08:12

எங்க கட்சி ஆளுங்க எல்லாம் ஒரு நடவடிக்கையும் எடுக்காம முதல்வரை அகற்றி விடுவார்கள்


சுந்தர்
ஏப் 11, 2025 23:46

வெற்றி வேல் வீர வேல்... பங்குனி உத்திர நாளில். சூரசம்ஹாரம் ஆரம்பம். இனி கணிப்புகள் வர ஆரம்பித்து விடும். பொறுத்திருந்து பார்ப்போம். இனி சீமான் எங்கே செல்வார்? இந்தக் கூட்டணியில் வந்து சேர்ந்தால் மந்திரி ஆகி தமிழ் தேசியம் படைக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது...


Priyan Vadanad
ஏப் 11, 2025 23:29

தமிழ்நாட்டின் வருங்கால கவர்னரே வாழ்க. இப்போதைய கவர்னர் செய்துவரும் அரும்பணிகளை தொடர்க.


முருகன்
ஏப் 11, 2025 23:08

ஊழல் கட்சி அதிமுக உதவியுடன் ஊழலை ஒழிப்பது தான் வேடிக்கை


புதிய வீடியோ