உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரைவில் இயல்புநிலையை மீட்டெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

விரைவில் இயல்புநிலையை மீட்டெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்' என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிவாரணம் மற்றும் மீட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்லும் வழியில், கிழக்கு கடற்கரை சாலை, செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதியில் மழை மற்றும் புயல் காரணமாக சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்யும் இடத்தில் நடைபெற்ற பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, விழுப்புரம் மந்தவாய்புதுக்குப்பம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவர், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 'மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட கலெக்டர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பெஞ்சல் புயலால், தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

வைகுண்டேஸ்வரன்
டிச 02, 2024 15:53

ஒரு பெரிய கூட்டம், கொஞ்சமும் நாகரிகமோ, மனிதாபிமானமோ சற்றும் இல்லாத, வன்மம் நிறைந்தது. அந்த கூட்டத்திலிருந்து 4 பேரையாவது வெளிய கொண்டு வர முயல்கிறேன். பார்க்கலாம். இந்த வெள்ளம் புயல் நேரத்தில் கூட, எவ்வளவு வெறுப்புடன் அநாகரிகமாக எழுதுகிறார்கள் நிஜத்திலேயே அநாகரிக மிருகக் கூட்டம் தான்.


hari
டிச 02, 2024 16:41

மழையால் சென்னை மக்கள் அவதி....வைகுண்டம் காதில் விழுமா


giri
டிச 02, 2024 16:44

no chance vaigund...all are educated..


R.MURALIKRISHNAN
டிச 02, 2024 14:49

சொல்வதை செயலில் காண்பித்தால் சரி


Nallavan
டிச 02, 2024 14:25

சொந்த நலனுக்காக உதாரணமாக நான் ஒரு உயர்ந்த பிரிவை ஆதரிக்கிறேன், நாட்டில் எந்த நல்லவை நடந்தாலும் நான் எதிர்ப்பதையே நோக்கமாக கொண்டிருப்பேன், என் கண்ணருகே கடவுள் வந்து எனக்கோ அல்லது என்னை சார்ந்தவர்க்கோ அல்லது என்னோடு தாழ்ந்தவனுக்கோ நல்லது செய்தல் கூட நான் எதிர்ப்பேன், எது சரியா ?


Mani . V
டிச 02, 2024 13:46

கடையில் இருந்தா?


Barakat Ali
டிச 02, 2024 12:57

என்னது மீட்டெடுக்கறதா? குடும்பத்து தொலைகாட்சிகள் வேறவிதமா சொல்றாங்களே கோவாலு .... இதெல்லாம் ஒரு புயலா ன்னு அவங்க நினைக்க வெச்சுட்டாங்க .....


M Ramachandran
டிச 02, 2024 12:55

நீஙகள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஊடகத்திற்கு முன் போஸ் கொடுக்காமல் இருந்தால் சரி மக்கள் பார்த்து கொள்வார்கள்


ராமகிருஷ்ணன்
டிச 02, 2024 12:50

கடைசியில் மத்திய அரசு பணம் தரவில்லை, நாங்கள் என்ன செய்ய என்று பிளாக்கனம் பாடுவார். மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும். அரசு உதவிகள் செய்வதாக பாவ்லா காமிக்கும். சென்ற வருட கனமழைக்கு பைசா கூட தரவில்லை.


Dhurvesh
டிச 02, 2024 12:21

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. இன்று விழுப்புரத்தில் முதல்வர், எந்த முதல்வர் இவ்வளவு விரைவா ஸ்பாட் க்கு சென்று இருக்கிறார்


sreenivas seenu
டிச 02, 2024 13:41

முதலில் அடுத்தவர் கருத்தை செவிமடுக்க முயலவும்.. இது மன்னர் ஆட்சியா என்ன? உங்கள் தி...மாடல் ஆட்சி மற்றும் புகழ்ச்சிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு மிரட்டலாக தோன்றும்...ஒருவேளை ஒரு கொம்பனும் எதிராக பேசி அவியல் தி...மாடல் ஆட்சி சிதறும் என அச்சமா?...உண்மையை எதிர் கொள்வதே பண்பாடு...கைநீட்டும் முன்னர் சுயபரிசோதனை தேவை...


Ramesh Sargam
டிச 02, 2024 12:15

புயல் கடந்தது. இனி மழையின் சீற்றமும், மழையின் தாக்கமும் தானாகவே குறையும். இயல்புநிலை தானாகவே திரும்பும். இவர் என்ன இயல்புநிலையை மீட்டெடுப்பது?


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 02, 2024 11:58

சென்ற முறை மழை பெய்தபோது, மழைத்தண்ணீர் வீட்டில் உள்ளே வராமல் இருக்க வாசல் கேட்டுக்களை இறுக மூடவும் என்றார் இந்த தத்துவ ஞானி. இப்போது மழை நின்றவுடன் தேங்கிய தண்ணீர் வடிந்து விடும் என்று கூறுகிறார். மழைக்கு முன்னதாக எப்படிப்பட்ட மழை வந்தாலும் இந்த கொம்பன் அரசு சமாளிக்கும் என்று மீசையை முறுக்கினார். இப்போது விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்கிறார். எழுதிக்கொடுப்பவர்களாவது ஒழுங்காக எழுதிக்கொடுக்கக் கூடாதா இந்த திராவிட மாடல் நாட்டில்?


Dhurvesh
டிச 02, 2024 12:16

க்ளோபாலா மழை பெய்தால் தண்ணீர் நிற்க தான் சேயும், நான் மும்பையில் இருந்துள்ளேன் இப்படி தான் பெரு மழை பெய்யும்போது தண்ணீர் தேங்க தான் செய்யும் அனால் காலையில் வடிந்து விடும் அதே போல் இங்கும் ஆகி உள்ளது அனால் ADMK காலத்தில் அந்த தேங்கிய தண்ணீர் 3 நாள் நிற்கும் அதுவாக வடிந்தால் தான் உண்டு என்கிற நிலை ஆனால் இப்போ காலத்தில் தூய்மை பணியாளர்கள் இது தான் அரசு, மொத்தமே 20 தெரு இருக்கும் மோடி கூட்டணி ஆட்சி நடக்கும் பாண்டிச்சேரி என்ன நிலை பாருங்கள்


சமீபத்திய செய்தி