உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசுக்கு துணைநிற்போம்: முதல்வர் ஸ்டாலின்

பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசுக்கு துணைநிற்போம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணை நிற்கும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபையில், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு, கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன். சுற்றுலா தலத்தில் நேற்று பயங்கரவாதிகள் மிக கொடூரமான தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட தகவல், அதிர்ச்சியையும், துயரத்தையும் அளித்துள்ளது. காஷ்மீரில் மிக பிரபலமான சுற்றுலா தளமான பஹல்காமிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அப்பாவி மக்கள் மீது இது போன்று நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.அங்கு மோசமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது. பயங்கரவாத அமைப்புகள், பங்கரவாதிகள் எத்தைகைய எண்ணம் கொண்டவராக இருந்தாலும், அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த தாக்குதலில் இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் எனக்கு கிடைத்த உடன், டில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மையம் செயல்படுவதற்கு உத்தரவிட்டு இருக்கிறேன். பயங்கரவாத தாக்குதல் நடக்க இந்திய மண்ணில் இடமில்லை. இந்த தாக்குதல்களை தடுத்து ஆக வேண்டும். எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்திட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். நடவடிக்கையை எடுத்திட தமிழக அரசு துணை நிற்கும் என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Ramaswamy Sundaram
ஏப் 27, 2025 12:56

பாத்தீங்களா இதுதாங்க அய்யாதுரை...நாங்க அரசுக்கும் ஆதரவு கொடுப்போம் இப்பித்தார் நோன்பு கஞ்சியும் குல்லாஹ் போட்டுக்கிட்டு kudippom


rishi
ஏப் 25, 2025 00:42

பாகிஸ்தானை பந்தாடுவது அப்புறம் உள்நாட்டிலேயே , பிரிவினைவாதம் பேசும் கருங்காலிகளை முதலில் கலையெடுக்கவேண்டும். திருமாவளவன் போன்ற ஸ்லீப்பர் செல்கலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அந்நிய கைக்கூலியைப்போல் செயற்படுகின்ற போலி மதசார்பின்மை பேசும் , அரேபிய அடிமைகளை முதலில் அடக்கவேண்டும்..


Ramesh Sargam
ஏப் 24, 2025 22:15

அப்பாடி இப்பவாவது நல்ல புத்தி வந்ததே. பாராட்டுக்கள் முதல்வருக்கு.


K.Rajasekaran
ஏப் 24, 2025 13:47

Indian army and people of India have to eliminate this Dravidian party and punish them severely because of vote bank they do divisive politics among our Muslim brother and sisters, they have to eradicate and his party corrupted politicians must be fully punished, they are one of the root cause for terrorism as well.


venugopal s
ஏப் 23, 2025 23:11

இதுதான் உண்மையான தேசபக்தி!


ஆனந்த்
ஏப் 23, 2025 19:20

நீங்க பேசாம இருந்தாலே பெரிய உதவி...


Ramalingam Shanmugam
ஏப் 23, 2025 17:43

உதவாநிதி வால்க


K V Ramadoss
மே 01, 2025 13:23

வாழ்க .......


SIVA
ஏப் 23, 2025 17:39

இந்த தாக்குதலின் ஒரே நோக்கம் உலகம் முழுவதும் முஸ்லீம் மற்றும் மற்ற மதங்கள் இடையே பிரிவினையை கொண்டு வருவது ....


Suppan
ஏப் 23, 2025 17:09

கொலைகார பாஷாவை ஆதரித்த கட்சி ...


krishna
ஏப் 23, 2025 17:03

AYYAYO KAIPULLA UDHAVA THAYAAR.INDHIA PAADHUKKAPAI THEEVERAM AAKA VENDUM.I.N.D.I KOOTANI DESA VIRODHA MAFIA KUMBAL KATCHI THALAIVARGAL MIRUGA MOORGANIN KASLIL VOTTU PICHAIKKU VIZHUM VARAI INDHIAVUKKU AABATHU THODARUM.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை