உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறுவோம்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறுவோம்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: வரும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு உள்ளது. ஆனால் ஈரோடு மாவட்ட கள ஆய்வு அடிப்படையில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என உணர்ந்ததாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dygusuue&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில் காலமான கோவை முன்னாள் எம்.பி., மோகன் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வு நடத்தினேன். கள ஆய்வை பொறுத்தவரை இன்னும் வேகமாக பணியாற்றுவோம் என உறுதிமொழி கொடுத்து இருக்கிறார்கள். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 200 என்ற இலக்கை வைத்து இருக்கிறோம்.ஈரோடு கள ஆய்வில், 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்று உணர்ந்தேன். பா.ஜ., எம்.பி.,க்களின் குற்றச்சாட்டை ராகுல் சட்டப்படி சந்திப்பார். ஈரோடு கிழக்கு தொகுதி, தி.மு.க., கூட்டணி வசமாகும். ஏற்கனவே இண்டியா கூட்டணியில் தி.மு.க., அங்கம் வகிக்கிறது. எனவே இண்டியா கூட்டணி வசமாகும். போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கலந்து ஆலோசித்து அறிவிப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை படு குழிக்கு தள்ளும். இவ்வாறு அவர் கூறினார். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'நல்லா பாக்குறேன்' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Matt P
டிச 21, 2024 13:33

நல்லா பாக்குறேன்னு சொல்வதை பார்த்தால் இன்னும் என்னென்ன சொல்ல போகிறாரோ என்ற்று தோன்றுகிறது. வர வர தெளிவான பதில் இல்லை எதுக்கும்.


பெரிய ராசு
டிச 21, 2024 12:23

ரெண்டு தொகுதி வருமான்னு ருங்க சாரு


Mani . V
டிச 21, 2024 05:48

குவாட்டர், கோழி பிரியாணி, ரெண்டாயிரம் ரூபாய் இவைகளைப் போட்டாலே ஸாரி கொடுத்தாலே 234 தொகுதியும் நமக்குத்தான்.


Bala
டிச 21, 2024 00:04

2026 தேர்தலில் தமிழகத்தில் ஒரு சரித்திரம் படைக்கப்படும். பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் மகத்தான ஒரு ஆட்சி அமைக்கும். அந்த ஆட்சி அனைவருக்குமான ஆட்சி. தற்போதைய ஆட்சிபோல் மீடியா கொத்தடிமைகளை வைத்து நடத்தும் போட்டோ shoot ஆட்சியாக இருக்காது. தீவிரவாதிகளுக்கும் இந்துமதத்தை இழிவு படுத்துபவர்களுக்கும் தமிழகத்தில் வேலையிருக்காது. அவர்கள் மொழியிலேயே பாடம் கற்பிக்கப்படும். தமிழகம் உண்மையான அமைதிப்பூங்காவாக மாறும். எல்லோரும் அவரவர் தெய்வத்தை தைரியமாக வழிபடும் உரிமை நிலைநாட்டப்படும். ஏழை மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும். மதப்பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மதங்களிலும் ஜாதிகளிலும் ஏற்றத்தாழ்வு பார்க்கப்பட மாட்டாது. எந்த ஜாதி மதமாக இருந்தாலும் ஏழைகளுக்கு மட்டுமே அரசின் சலுகைகள். சமூக பொருளாதார சமத்துவம் ஏற்படுத்தப்படும். மொத்தத்தில் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி ஒரு பொற்கால ஆட்சியாக தமிழகத்தில் மலரும்


Anand
டிச 20, 2024 22:24

பஞ்சாயத்து தேர்தலில் 200தொகுதி வென்றால் பெரிய சாதனையா?? சட்டசபை தேர்தலில் 2 தொகுதி கூட வெல்ல முடியாது


Matt P
டிச 20, 2024 20:11

முதலமைச்சரும் துணை முதலமைச்சருக்கும் மட்டும் Pant போட உரிமை கொடுத்திருக்காங்க போலிருக்கு. வெள்ளைக்கார துரைகள்.


V வைகுண்டேஸ்வரன்
டிச 20, 2024 20:41

என்ன கேனத்தனமா எழுதறீங்க பாருங்க அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ் கூட Pants அணிகிறார்கள். தயாநிதிமாறன், திருச்சி சிவா, ஆ ராசா சு வெங்கடேசன் போன்ற MP க்கள் கூட Pants அணிகிறார்கள். யோசிக்காமலே என்னவாச்சும் எழுதி laughing stock ஆகிறீர்களே??


Barakat Ali
டிச 20, 2024 21:45

வெண்டைக்காய்க்கு வேட்டி கட்டியது போல இருக்கு என்று ஒரு அதிமுக மாஜி பெண் அமைச்சர் சொன்னதால் இப்படி .....


Matt P
டிச 20, 2024 23:17

எல்லோரையும் தமிழ் கலாச்சாரத்துக்கு உதாரணமா இருக்க சொல்லுங்கப்பா.


Matt P
டிச 20, 2024 23:19

வேட்டி கட்ட சொல்லுங்க.


Bala
டிச 21, 2024 01:22

இப்ப மக்களுக்கு இருக்கிற கோவத்துக்கு சந்தையில வெட்டிய உருவுனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. தலீவரு அதனாலதான் பேண்ட்டோட போட்டோ ஸூட் பண்ணிட்டு திரியிறாரு


Raj S
டிச 21, 2024 01:29

அவரு என்ன பண்ணுவாரு பாவம், எதை குடுக்கறாங்களோ அத போட்டுக்குவாரு, எதை குடுக்கறாங்களோ அத தப்பு தப்பா படிப்பாரு... வாயில்லா ஜீவன்... மூளையும்??


M Ramachandran
டிச 20, 2024 20:11

பெப்பெ....பெப்பெ...பெப்பெ


நிக்கோல்தாம்சன்
டிச 20, 2024 20:05

அவ்வளவு சம்பாதிச்சிடீங்களா...


Rpalni
டிச 20, 2024 20:03

சோற்றாலும் பணத்தாலும் அடித்தால் 200 என்ன 234 சீட்டும் உங்களுக்குத்தான்


V RAMASWAMY
டிச 20, 2024 19:43

நம்புவதை குறைத்து சொல்வானேன் தலைவரே? சும்மா சொல்லிவையுங்கள், ஒரு தொகுதியில் கூட உங்கள் கட்சி வேட்பாளர் தவிர வேறு எவனும் வெல்ல முடியாதென்று, சும்மா ஒரு இதுக்குத்தானே ? மற்றவர்கள் நம்பினால் என்ன, நம்பாவிட்டால் என்ன, நடந்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன? இனி என்ன தேவை வேண்டியிருக்கிறது?


புதிய வீடியோ