உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாக்.,கிற்கு ஆயுதங்களா: சீனா விளக்கம்

பாக்.,கிற்கு ஆயுதங்களா: சீனா விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங் :'சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு, சீனா ஆயுதங்கள் வழங்கியது' என கூறப்படுவதை, சீன ராணுவம் மறுத்துள்ளது. அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது வழக்கு தொடரப்படும் என அந்த நாடு எச்சரித்துள்ளது.சீனாவின் மிகப் பெரிய ஆயுத விற்பனை நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது. பாகிஸ்தான் பயன்படுத்தும் 81 சதவீத ஆயுதங்கள், சீனாவில் இருந்து வந்தவை தான். இந்நிலையில், சமீபத்தில் பல ஊடகங்களில், சீனாவின் போர் தந்திரங்கள் குறித்து வெளியான செய்தியில், சீனாவின் மிகப் பெரிய சரக்கு விமானத்தில் போர் ஆயுதங்களை ஏற்றி வந்து, பாகிஸ்தானுக்கு வழங்கியது என கூறப்பட்டிருந்தது.அதற்கு பதிலளிக்கும் வகையில், சீன ராணுவத்தின் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பயணியர் அல்லது சரக்கு விமானம் என்ற போர்வையில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சீனா வழங்கியது என கூறப்படுவதில் உண்மையில்லை. அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mecca Shivan
மே 13, 2025 11:29

வழக்கு தொடர்வோம் என்று திராவிட பாணியில் சொல்லும்போதே தெரிகிறது ..எவ்வளவு யோகியனுங்க என்று


Barakat Ali
மே 13, 2025 08:55

தங்களது ஆயுத விற்பனை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால் சப்பைக்கட்டு ....


E. Mariappan
மே 13, 2025 08:54

சீன அரசு எப்போதும் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்பது மீண்டும் நிரூபித்துள்ளது


Naga Subramanian
மே 13, 2025 08:38

நாள்தோறும் தீபாவளி கொண்டாடும் பாகிஸ்தானுக்கு, பட்டாசு அனுப்புவதில் தவறில்லையே. அதுதான் தீங்கிழைக்காதது என்றாகிவிட்டதே எப்படியோ 1 டஜன் பட்டாசில் நிச்சயம் அநேகமா எல்லாமே புஸ்சு. சீனா இதை பகிரங்கமாகவே செய்யலாம்.


naranam
மே 13, 2025 05:50

தீவிர வாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதை ஆதரித்து வந்த சீனாவின் குட்டு வெளிப்பட்டு விட்டது.. இது நாள் வரை சீனா போட்ட வேஷம் செல்லுபடியாக வில்லை.


லிங்கம், கோவை
மே 13, 2025 05:11

இதே...பாகிஸ்தான் மட்டும் ஜெயித்து இருந்தால் சீனா நான் தான் ஆயுத சப்ளை செய்தேன் என்று மார்தட்டிக் கொண்டு இருக்கும்... சீனா விமானங்களும் ஆயுதங்களும் வான் தடுப்பு கருவிகளும் இந்தியாவால் அடித்து நொறுக்கப்பட்டு அழிக்கப்பட்டன இதனால் சீனாவிற்கு தலை குனிவு... அதுதான் வேகமாக பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆயுதம் சப்ளை செய்யவில்லை என்று சீனா மறுத்துள்ளது.


Gowtham Saminathan
மே 13, 2025 04:50

விற்றுவிட்டு போகட்டும்... விடுங்கள்... எப்படியும் அதன் செயல்பாடு தீபாவளி துப்பாக்கி போலத்தான்... அத்தனையும் பொம்மை... பாகிஸ்தானுக்கு சீனா விற்ற ரேடார், வான் பாதுகாப்பு கவசத்தை மறந்துட்டீங்களா?


kannan sundaresan
மே 13, 2025 04:06

வந்தால் வரட்டுமுங்க, எல்லாம் நவுத்துப்போன பட்டாசுதான். ஒன்னும் செய்யமுடியாது


Kasimani Baskaran
மே 13, 2025 03:34

உண்மையை மறைப்பதில் சீனாவை மிஞ்ச ஆள் இல்லை.


Venkatesan Srinivasan
மே 13, 2025 08:56

சீன பட்டாசுகள் எல்லையில் தவிடு பொடி ஆனதில் சிவகாசி பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி. இதை கூறியே வெளிநாடுகளில் வியாபாரம் அபிவிருத்தி செய்யலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை