உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (ஜூலை 12) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (ஜூலை 11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை(ஜூலை 12) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V RAMASWAMY
ஜூலை 11, 2024 15:20

இவ்வளவு மழை பெய்தும் , எப்பொழும் தட்டுப்பாடு, தட்டுப்பாடு என்று ஒரே அழுகை. என்ன காரணம், ஏனிப்படி என்று வல்லுநர்கள் மூலம் ஆராய்ந்தால், தீர்வு கிடைக்கும். இந்த ஆராய்ச்சி வல்லுநர்களால் தான் முடியும், எம் எல் ஏ க்களால் முடியாது. லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் வீணான திட்டங்களுக்கு செலவு செய்யும்போது, ஏன் உபரி நீரை தேக்கும் திட்டங்கள் வகுக்கக்கூடாது?


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி