உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் டிசம்பர் 11,12ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று (டிச.,06) முதல் டிசம்பர் 10ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 11ம் தேதி காவிரி படுகையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.டிசம்பர் 12ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை