உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்மையான ஆன்மிகவாதிகள் வரவேற்பர்!

உண்மையான ஆன்மிகவாதிகள் வரவேற்பர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் தமிழகத்தில் தான் ஹிந்துக்கள் மனம் புண்படும் வகையில், நாத்திகவாதிகள் ஹிந்து மதக் கடவுள்களையும், ஹிந்து மதக் கலாசாரத்தையும் கேலியும், கிண்டலும் செய்வது வழக்கத்தில் உள்ளது.அதிலும் ஹிந்துக்கள் வணங்கும் கோவில்களின் எதிரிலேயே, கடவுள் நம்பிக்கை இல்லாத ஈ.வெ.ரா., சிலைகளை வைத்து அழகு பார்ப்பதும், கோவில்களுக்கு எதிரில் மேடை போட்டு, ஹிந்து கடவுள்களை கேவலமாக பேசுவதும் வழக்கத்தில் உள்ளது.இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், ஹிந்து அல்லாதோர், அனைத்து கோவில்களிலும் கொடி மரத்திற்கு அப்பால் செல்ல தடை விதித்துள்ளார்.இது, ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ள ஆன்மிகவாதிகள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. சிலர், கோவில்களை ஒரு சுற்றுலா தலமாக நினைத்ததன் விளைவு தான், அமைதியான வழிபாடுகளுக்கு தீங்கு விளைவித்தன.தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் முதல் மற்ற மதத்தினர் அனைவரும் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல், கோவில்களுக்கு வந்து உண்மையான ஆன்மிகவாதிகளின் இறைவழிபாட்டுக்கு இடையூறு செய்கின்றனர்.ஹிந்துக்கள், கோவில்களுக்கு செல்லும் நாட்களில் அசைவம் உண்பது இல்லை; பெண்கள், மாதவிலக்கான நாட்களில், கோவில்களுக்கு செல்வது இல்லை; குடும்பத்தில் ஒரு துக்க சம்பவம் நடந்தாலும், குறிப்பிட்ட நாட்கள் கோவிலுக்கு செல்வது இல்லை.ஆனால், மற்ற மதத்தினர் இதையெல்லாம் கடைப்பிடிக்காமல், கோவில்களுக்குள் சுதந்திரமாக வலம் வருவது சரியல்ல. இதற்கு முடிவு கட்டும் வகையில், நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பு அமைந்துள்ளது.நீதிபதி ஸ்ரீமதி கூறியிருப்பது போல, 'ஹிந்து கோவில்கள், அதன் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை பாதுகாக்க வேண்டியது, அறநிலையத் துறையின் கடமை' என்று கூறியுள்ளதை, அத்துறை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
பிப் 10, 2024 14:22

எத்தனை ஹிந்துக்களுக்கு ஹிந்து மதம் பற்றி தெரியும் ???? அட .... அது கூடப்பரவாயில்லை,.... எத்தனை பாஜக தலைவர்களுக்கு பற்றிய புரிதல் உள்ளது ????


sivakumar
பிப் 10, 2024 10:55

சினிமா சூட்டிங் எடுப்பதையும் அநாகரிகமான குரூப் டான்ஸ் காதல் காட்சிகள் எடுப்பதையும் தடை செய்ய்ய வேண்டும் புனிதத்திற்கும் சினிமா சூட்டிங் குழுவினர் உத்திரவாதம் இல்லை நன்றி


இசக்கிமுத்து,தூத்துக்குடி
பிப் 10, 2024 05:04

தமிழகத்தில் உள்ள மற்ற பெரிய கோவில்களைப் போல் VIP சிறப்பு தரிசனம் கிடையாது, தரிசன கட்டணமும் கிடையாது, உண்டியல் காணிக்கையும் கிடையாது, ஆண்டவனை தரிசிக்க சிறப்பு வரிசையும் கிடையாது, அனைவருக்கும் பொது வரிசைதான் பொது தரிசனம்தான், மக்களுக்கு தினசரி அன்னதானமும் உண்டு இவற்றுக்கு காரணம் அங்கு தமிழக அரசின் அறநிலையத்துறை கிடையாது அதுதான் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பாடப் பட்டு பெரும் புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில்.


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
பிப் 10, 2024 04:35

நீதிபதி ஸ்ரீமதி அவர்களின் இந்த தீர்ப்பை கண்டிப்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் முக்கியமாக அறநிலையத்துறையில் இந்துக்களை மட்டும்தான் பணியில் அமர்த்த வேண்டும் இந்த திராவிட மாடல் இந்து விரோத ஆட்சியில் அறநிலையத் துறையில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர் குறிப்பாக இந்துப் பெயரில் உள்ள கிறிப்டோக்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள் இவர்கள்தான் இந்து மதத்தின் புனிதத்தை கெடுக்கிறார்கள். இந்துக்கள் அல்லாதவர்களை கண்டிப்பாக கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது இதை அறநிலையத் துறை அதிகாரிகள்தான் உறுதி செய்ய வேண்டும். இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் வெறுப்பு கொண்ட மாற்று மதத்தினர் பல அருவருக்கத் தக்க செயலில் ஈடுபடுகிறார்கள் உதாரணத்திற்கு இந்துக்கள் வணங்கும் புனிதமான கோவில்களில் இருக்கும் உண்டியலில் (Condom) ஆணுறையை போட்டு விட்டு போகிறார்கள் இப்படிப் பட்ட கேவலமான செயல் தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் நடந்திருக்கிறது ஆனால் இந்த செய்தி வெளிவராமல் அறநிலையத்துறை அதிகாரிகள் மறைத்து விடுகின்றனர் இந்த விபரம் கோவிலில் உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக போகும் மக்களின் மூலம்தான் வெளியே தெரிய வருகிறது. ஆகவே நீதிபதி அளித்த இந்த தீர்ப்பு நூறு சதவீதம் வரவேற்க வேண்டிய தீர்ப்பாகும் ஆன்மீகவாதிகள் உட்பட இந்து மக்கள் அனைவரும் அவருக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும்.


ராஜா
பிப் 10, 2024 03:25

அய்யா இப்போது புரிகிறது எதற்கு நம் கோவிலுக்குள் நுழைய நமது முன்னோர்கள் ஆண்கள் மேல் சட்டை அணியக்கூடாது என்று ஒரு விதி வைத்து இருந்தார்கள் என்று. இன்றும் இலங்கையில், குருவாயூரில் அந்த விதி பின்பற்றப்பட்டுகொண்டு உள்ளது. கடவுள் நம்பிக்கை, இறை பக்தி இல்லாதவர், வேற்று மதத்தினர் கோவிலுக்குள் தன் சட்டையை கழற்றிவிட்டு நுழைய தயங்குவார்கள் என்று தான். காவி உடை கட்டாயம் என்றால் இன்னும் கதை முடிந்தது. நீதிமன்றம் இந்த உத்தரவை கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


S.kausalya
பிப் 10, 2024 02:06

தரிசன டிக்கெட், அறநிலையத்துறை மூலம் தான் விற்கப்படுகிறது.ஆனால் எல்லோரும் அது என்னவோ கோவிலில் பூசை செய்யும் ஐயர்கள் தான் saamiyai அருகே தரிசன செய்ய வசூலிக்கிறார்கள் என நினைத்து கொண்டு அவர்களை nindhikkiraargal. உண்டியல் வைத்த உடன் அது சின்ன கோவில் ஆக இருந்தாலும் சரி, பெரிய கோவில் ஆக இருந்தாலும் சரி, அறநிலையத்துறை உள்ளே வந்து விடும். நிதியை எடுத்து கொண்ட தால் நிர்வாகமும் அதன் கட்டுபாட்டில் வந்து விட்டது. அரசின் கீழ் வருவதற்கு முன் எல்லோரும் வரிசையில் தான் சாமி யை tharisiththom


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை